நான் நேற்று கண்டனூரில் நடந்த அக்கினி ஆத்தாள் படைப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் படைப்புப் பங்காளிகள் ஆண்களும் பெண்களுமாக ஆயிரம் பேர் ஓவ்வொரு ஆண்டும் கூடி மூதாதையருக்கு படைத்து மகிழ் கிறார்கள்.இது எனக்கு சமுதாய நலம் சார்த்த ஒரு சிந்தனையைத் தூண்டியது . ஒவ்வொரு ஊரிலும் , கிராமங்களிலும் , அங்குள்ள அணைத்து இன மக்களும் ஒன்று கூடி படையல் விழா நடத்தலாம்
இதற்கு பொறுப்பாளர்கள் அப்பகுதி மக்களே. இவர்களில் மூன்று அல்லது நான்கு பிரிவினராகப் பிரித்து அவர்களுள் ஒருவரைச் சுற்றுமுறையில் தலைமை ஏற்கச் செய்து ஒரு பிரிவினர் சுற்றுமுறையில் வரவு செலவுக் கணக்கு பார்ப்பது , ஒரு பிரிவினர் உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது, பந்தி பரிமாறுதல் , ஒரு பிரிவினர் சமைத்தல் , முன்னேற் பாடு செய்தல் இப்படி வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்யலாம். இரவு ஒரு பெரிய நிலைக் கண்ணாடி முன்பு நின்று ஒவ்வொருவரும் ஜாதி மத மற்றும் இனப்பகுப்பாடின்றி பிரார்த்தனை செய்யலாம். அப்போது ஒவ்வொருவரும் அவரவர் வீடு மங்கள நிகழ்ச்சிகளை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி இனிப்புகளையும் பரிசப் பொருள்களையும் வழங்கலாம் .இப்படி கூடி மகிழும் போது மனிதநேயம் மேம்படுகிறது. ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை மற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கின்றது. இன்னும் நிறைய விதி முறைகள் இருக்கின்றன. இதை மக்களுக்கான மக்கள் அறக்கட்டளையாக அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கல்விக்கடன் , வழங்கலாம், கைத்தொழில் உற்பத்திப் பொருட் களை விளம்பரப்படுத்தலாம் , விவரம் தெரிந்தவர் கள் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கலாம் . இன்னும் இன்னும் எவ்வளவோ இருக்கு .