விண்வெளியில் உலா
வுல்ப் ராயட் விண்மீன் பற்றி ...
நிறமாலையால் O வகைக் குட்பட்ட ஆனால் பிரகாசமான உமிழ்வரிகளைக் கொண்டுள்ள விண்மீன்களை வுல்ப் ராயட் விண்மீன் என்பர்.19 ஆம் நூற்றாண்டில் இது பற்றி விரிவாக ஆராய்ந்து முதன் முதலாகத் தெரிவித்த பிரான்சு நாட்டு வானியல் அறிஞர்கள் C.J.E.வுல்ப் மற்றும் G.ராயட் பெயரால் இது அழைக்கப்படுகிறது.இது எல்லா வகையான விண்மீன்களைக் காட்டிலும் வெப்பமிக்கது.40,௦௦௦ முதல் 100,000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் புற வெப்ப நிலையைக் கொண்டுள்ளது. வெப்ப மிக்க சாதாரண O வகை விண்மீனின் புற வெப்பநிலை 30000 டிகிரி கெல்வின் ஆக உள்ளது.வுல்ப் ராயட் விண்மீன்கள் பெரும்பாலும் ஹீலியத்தை எரிபொருளாகக் கொண்டுள்ளன.ஒரு வுல்ப் ராயட் விண்மீன் ஓராண்டில் பத்தாயிரம் அல்லது நூறாயிரத்தில் 1 பங்கு சூரிய நிறையை உமிழ்வதாக மதிப்பிட்டுள்ளனர்.சராசரியாக ஒரு வுல்ப்-ராயட் விண்மீனின் நிறை 10-12 சூரிய நிறையாக இருக்கிறது. அதனால் ஒரு வுல்ப் ராயட் விண்மீன் 1000-10000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்க முடியாது எனலாம்.பெரும்பாலான வுல்ப்-ராயட் விண்மீன்கள் நிறமாலையால் மட்டும் உணரமுடியக் கூடிய நெருக்கமான இரட்டை விண்மீன்களாக உள்ளன. இதன் துணை விண்மீனும் எப்போதும் நிறைமிக்க,வெப்பமிக்க O அல்லது B வகை விண்மீன்களாக உள்ளன.
சிரியசுக்கும் உமிகிரான்(o)2 கானிஸ் மெஜோரிசுக்கும் நடுவில் அழகான,பிரகாசமான M 41 என்று பதிவு செய்யப்பட்ட தனிக்கொத்து விண்மீன் கூட்டமுள்ளது 24-25 ஒளி ஆண்டுகள் அகலமுள்ள இது 2570 ஒளி ஆண்டுகள் தொலைவு தள்ளி உள்ளது .இதில் ஒளி பொலிவெண் 7 உடன் கூடிய 80 விண்மீன்கள் இருக்கலாம் என அறிந்துள்ளனர்.இதிலுள்ள விண்மீன்கள் சங்கிலித் தொடர் போல உள்ளன.
முர்சிம்(Murzim) எனப்படும் பீட்டாகானிஸ் மெஜோரிஸ் சிபி வகை மாறொளிர் விண்மீனாக உள்ளது .இதில் தோற்ற ஒளிப் பொலி வெண் 2 ஆக இருப்பினும் பிரகாசம் முழுமையாக
No comments:
Post a Comment