எழுதாத கடிதம்
இந்தியாவின் பலம்
மற்றும் பலவீனங்களை எடை போட்டுப் பார்த்தால் அச்சத்தின் எல்லைக்கே செல்ல வேண்டிவருகின்றது. ஒரு
மனிதன்
தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றியே சரியா
முடிவு
செய்யத் தெரியாத போது
அதைவிடப் பல
மடங்கு
சிக்கலான நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி
முடிவு
செய்வது பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும்.
ஒரு கட்சி அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சிக்காரர்களை ஊழல் வாதிகள் என்று சாடுகின்றார்கள். மீண்டும் பதவி பெறுவதற்கு ஊழல் மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றது, ஊழல் நிலைத்திருக்கின்றது என்பதை விட அது பல புதிய பரிமாணங்களைக் கடந்து பல மடங்கு பெருகிவருவது கவலையளிக்கின்றது.
ஒரு தேசிய கட்சியினருக்கு மாற்று தேசிய கட்சியினர் கருத்துக்களால் எதிரிகளாக இல்லாமல் பகைமையுணர்வால் எதிரிகளாக கருதப்படுவது மிகுந்த கவலையளிக்கின்றது.
பொருளாதார வளர்ச்சி இல்லையில்லையென்றாலும்
வறுமைக்கு எதிரான நடவடிக்கைகள் அங்கே தொலைந்து போய்விடுவது மிகுந்த கவலையளிக்கின்றது.
நாட்டின் பாலியல் கொடுமை,லஞ்சம்,ஊழல் போன்றவை நாட்டின் தலைநகரிலேயே தலைவிரித்தாடுகின்றது காவல் துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள் அதில் அவர்களுக்கும் ஒரு ஆதாயம் கிடைப்பதால் குற்றங்களுக்கு ஆதாரவாகச் செயல்படுகின்றார்கள். காவலாளியே குற்றவாளியாக இருப்பதாக ஒரு முதலமைச்சரே கூறியிருக்கின்றார் என்றால் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் இருக்கின்றது என்பதை கற்பனை செய்யும் போது மிகுந்த கவலையளிக்கின்றது.
பெரும்பாலான அரசு
ஊழியர்களும் அதிகாரிகளும் தங்கள்
பணியை
பெறுப்புணர்வோடு செய்வதில்லை. மாறாக
அலுவலகத்தில் பொழுதை
வெட்டியாகப் போக்கிவிட்டு வேறு
வகையான
வருமானங்களுக்கு வழி
தேடி
அலைகின்றார்கள்.அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புள்ள உயர்
அதிகாரிகளும்,அமைச்சர்களும் விதி விலக்காக
இல்லாமல்
அவர்களை விடச்
சிறப்பாகச் செயல்படுவது கவலையளிக்கின்றது
.
கண்காணிப்பு இல்லாததால் எல்லோரும் ஒருவரை
ஒருவர்
ஏமாற்றலாம்
என்ற
முடிவுக்கு வந்து
முனைப்புடன் செயல்படத்
தொடங்கி விட்டார்கள். அப் போக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.
வரிப்
பணம்
நாட்டில் மீண்டும் முதலீடு செய்யப்படுவதில்லை. லாபம் தாராத செலவினங்களால் முதலே அழிந்து வருகின்றது. கையாடல்,கருப்புப் பணம்,வீண் செலவு,ஆடம்பரச் செலவு, கட்டமைப்பை வலுப்படுத்தாத இலவசத் திட்டங்களால் இந்தியா மேலும் மேலும் வறுமையை நோக்கிப் பயணிப்பது மிகுந்த கவலையளிக்கின்றது.
No comments:
Post a Comment