Saturday, June 13, 2015

creative thoughts



அணு உலையும் வாழ்வியலும்-2

 அணு உலை செயல்பட்டு இயங்கும் போது அது கணப் பொழுது கூட பிழையின்றித் தொடர்ந்து ஒரு சமநிலையில் இயங்கி வரவேண்டும்.
தை ‘கிரிடிக்கல்நிலை’ என்பர். அந்நிலையில் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட அணு உலைவெளியில் ஆற்றல் ஒரே சீராக வெளிப்பட்டு வெளியேறி சாகாத சமுதாயத்திற்குப் பயன் தரும். செய்யும் பிழைகளால் ஆற்றல் அணு உலையின் குறுகிய வெளியில் கட்டுக்கடங்காமல் வெளிப்படுமானால் அந்த அணு உலை ஒரு அணு குண்டாக உருமாறி வெடித்துச் சிதறி ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அழித்துவிடும். அணு உலையில் ஆற்றல் என்பது
சமுதாயத்தில் செல்வத்திற்கு ஒப்பானது. அணு உலையில் ஆற்றல் எப்படி விரவியிருக்கின்றதோ அப்படிச் செல்வமும் பகிர்ந்து இருக்க
வேண்டும் அல்லது அப்படிப்பட்ட மன நிலையைச் சமுதாயம்
பெற்றிருக்க வேண்டும்.

னி னிதர்களிடம் ஒரு நோக்கமுமின்றிச் சேரும் செல்வம் வரம்புநிலை மீறிய அணு உலை போன்று பத்தானது. இச் செல்வம்
பதுக்கப்படுவதால் சமுதாயத்தின் பயன்பாட்டிற்கு வெளிவருவதில்லை. கட்டுப்பாடற்ற அணு உலையில் பயனற்ற ஆற்றல் போல கண்காணிப்பற்ற சமுதாயத்தில் இந்த பயனிலாச் செல்வமும். தனி னிதர்களின் தீய செயல்களுக்குப் பயன்படுமேயன்றி சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுவதில்லை.
எண்களின் முடிவைத் தீர்மானிக்கத் தெரியாதவர்களே அளவில்லாத
செல்வத்தின் மீது பற்று கொண்டு தை யாருக்கும் பயனின்றி
பதுக்கி வைகின்றார்கள். அவர்களுடைநோக்கம் செல்வத்தின்
உச்சத்தை எட்டிப்பிடிப்பதேயன்றி பயன் பெறுவதில், பயன் தருவதில்
இருப்பதில்லை.
சமுதாயத்தின் சமநிலை என்பது அணு உலையின் கிரிடிக்கல்நிலை
போன்றது. அதை நிலைப்படுத்துவது அணு உலை இல்லை, அணு உலையை இயக்குபவர்களே.னெனில் அதற்காக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களேயன்றி மக்கள் இல்லை.

No comments:

Post a Comment