Friday, November 15, 2019

சொன்னதும் சொல்லாததும்


சொன்னதும் சொல்லாததும்

“மதம் என்பது  நடத்தை விதிகள்  வெறும் நம்பிக்கை  மட்டுமேயில்லை ” 
“உண்மையான மதம் புரட்சிகரமான சக்தியாக இருக்கின்றது    கொடுமை. சிறப்புறுரிமை, அநீதி  போன்றவைகளின்  நிரந்தர  எதிரியாக  அது இருக்கின்றது”  - சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

. மதக் கலவரங்கள் பெருகி வருகின்றன என்றால் அதற்கு நாம் மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம். நான் இந்த மதம் என்று பிறர் சொல்வதைப்  பார்த்து  சொல்லிக் கொள்கின்றோமே  ஒழிய அதன் நெறி முறைகளை முழுமையாகப் பின்பற்றுவதில்லை .மரபு வழியிலான சில பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதால் மட்டுமே  ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராகிவிட முடியாது.
மதத்தைப்  போதித்தவர்கள் வெவ்வேறானவர்களாக இருக்கலாம் . ஆனால் அவர்கள் சொல்லிய கருத்துக்களின் உட்பொருள் ஒன்றாகத்தான் இருக்கின்றன . திருடாதே என்று ஒரு மதம் சொல்வதும்,  உழைத்துப் பிழை என்று மற்றொரு மதம்  சொல்வதும் ,கொல்லாதே என்று ஒரு மதம் சொல்வதும் , எல்லோரிடமும் அன்பை இரு என்று மற்றொரு மதம்  சொல்வதும்   மதங்களின் வேறுபாடாகாது. உணவுப் பழக்க வழக்கம் ,ஆடை அணிகலன்கள், ,திருவிழாக்கள் , சடங்குகள் ,வழிபாட்டு முறைகள் ,கலாச்சாரம் ,பண்பாடு போன்ற புற வேற்றுமைகளால் நாம் மதங்களை ஒன்றுக்கொன்று எதிரியாக்கி வருகின்றோம்.உண்மையில் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களே முழு ஒற்றுமையாக இல்லை. .இது பிரிவினைக்கு மதம் ஒரு காரணமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது .

பூமியில் வாழும் அனைத்து நாட்டு மக்களும் ஒரே இனம்தான் . அவர்களுக்கு வெவ்வேறு நடத்தை விதிகள் இருக்க முடியாது . இயற்கை தரும் வசதிகளைத் தானே அனுபவிக்க வேண்டும் அல்லது அதிகம் பெறவேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடே மதங்களின் விரிவாக்கம் . மன முதிர்ச்சி இல்லாவிட்டால் இந்த உண்மையைப் புரிந்து கொள்வது கடினமே .

No comments:

Post a Comment