சமுதாயம்
ஒரு சமுதாயம் எதைப் பாராட்டுகின்றதோ அது செழித்து வளரும். நல்ல பழக்கத்திற்காக நல்ல செயலுக்காக குழந்தைகளைப் பாராட்டினால் அந்தப் பழக்கம் வழக்கமாகும் .அரசியல்வாதிகளைப் போற்றினால் நாட்டில் அவர்கள்தான் பல்கிப் பெருகுவார்கள் .திரைப்பட நடிகர்களை அளவுக்கு மீறி மதித்தால் நடிகர்களே தோன்றுவார்கள் . சாமியார்களுக்குக் கூட்டம் அலைமோதினால் ,ஆன்மிகத்திற்குப் பதிலாக ஆசிரமங்கள் விரிவடையும் . நாடு மற்றும் சமுதாயசத்தின் வளர்ச்சிக்காக எதையெல்லாம் பாராட்டவேண்டுமோ
அதையெல்லாம் பாராட்ட முன்வருவதில்லை . விஞ்ஞானிகளை ப் பாராட்டினால் விஞ்ஞானிகள் உருவாவார்கள் தொழில் நுட்ப வல்லுநர்களைப் பாராட்டினால் தொழில் விருத்தியடையும் . உழவர்களை மதித்தால் வேளாண்மை உயரும் .பெரிய வளர்ச்சிக்கு மனப்பூர்வமான ஒரு சிறிய பாராட்டே போதும் என்பதை .நாம் இன்னும் உணரவில்லை அதற்குக் காரணம் வளர்ச்சியின் பயனை பகிர்ந்தளிக்க மனம் ஒப்பாமையே.
நேரத்தைக்
கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை . ஏனெனில் நாம் பிறப்பதற்கு முன்பு இந்த நேரம் கடந்து
சென்றது , இறந்த பின்பும் இந்த நேரம் கடந்து
செல்லும் . உன்னிடத்தில் இயற்கையின் எதிர்பார்ப்பு எதோ இருக்கவேண்டும் . அதை இனமறிந்து
கொண்டு செய்யவேண்டிய செயல்களை செய்து முடிக்கப்பார்
வெளிப்படைத்தன்மை
யில்லை என்றால் விதிமுறைகள் மீறப்படுவதற்கான வாய்ப்புக்கள் அங்கே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது
என்றும் அர்த்தப்படும்
அறவழிப்
போராட்டங்கள் மட்டுமே போராட்டம் முடிந்த பின்பும் அறத்தை கட்டிக் காக்கும்
எல்லோரும்
எப்போதும் ஏதாவது பிரச்சனைகளைத் தந்து கொண்டேயிருக்கிறார்கள்.
பிரச்சனைகளாக இருக்கும் அவர்கள் ஒருமுறை கூட தீர்வாக இருப்பதில்லை பிரச்சனைகள் இல்லாமல்
வாழ்க்கையில்லை. ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்
அவை எல்லோருக்கும் ஒரேமாதியாக அனுகுலமுள்ளதாக இருக்கும் என்று கூறிவிடமுடியாது
. எல்லாத் தீர்வுகளிலுமுள்ள அனுகூலங்கள் தனக்கே
மிகுதியாக க் கிடைக்க வேண்டும் என்று கணக்கிட்டுக் கொள்ளும்போது தான் சிக்கலே உண்டாகின்றது
எல்லோரும் நியாயத்திற்கு கட்டப்படுவதில்லை. கட்டுப்படுத்த
முடிவதுமில்லை . ஏனெனில் அவர்கள் வெவ்வேறு பொருளாதார நிலைகளில் இருக்கின்றார்கள் ,
வெவ்வேறு அதிகாரமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் பாதகமாக இருந்தால் நியாயத்தை எதிர்ப்பதும்
,சாதகமாக இருந்தால் ஏற்பதும் கட்டுப்பாடின்றி பரவலாக இருப்பதாலும் , காக்க வேண்டியவர்களே
எல்லை மீறுவதாலும் நியாயங்கள் சமுதாயத்தில் எப்போதும் நிறம் மாறிக்கொண்டேயிருக்கின்றன
இன்றைக்கு சமுதாய வீதியில் சமூக நீதிகள் காப்பாற்றப்படவில்லை
எதிர்த்து ஏதும் செய்துவிடமுடியாது என்று எண்ணிக் கொண்டு .பலர் அநீதியை ஏற்றுக்கொண்டு
அமைதியாக இருந்துவிடுகின்றார்கள் . நீதிக்காக குரல் எழுப்புவதில்லை .மற்றும் பலருக்கு
அது அநீதி என்றே தெரிவதில்லை .
நியாயங்களை செலவின்றி நிலைநாட்டமுடியும் என்ற சூழல்
இருந்தால் மட்டுமே நியாயங்கள் காப்பாற்றப்படும்.இது நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்றால்
எங்கும் எதிலும் எப்பொழுதும் செயல்படுத்தப்படவேண்டும் அப்போதுதான்
மக்களின் வாழ்க்கை மேம்படும்.. நியாயங்களைக்
காப்பாற்றுவதற்கு ஆகும் செலவு அதைக் காப்பாற்றாமல் விடுவதால் ஏற்படும் இழப்பிவிட அதிகமாக
இருப்பதால் பலர் அதைக் கைவிட்டுவிடுகின்றார்கள் . அரசாங்கமும் இதில் அக்கறை கொள்வதில்லை.
.இதனால் அறவழி மீறும் போக்கு அதிகரித்து வருகின்றது நியாயங்களைத் தனி மனிதர்களால் .
No comments:
Post a Comment