Tuesday, February 9, 2021

ஊழல் செய்பவர்கள் நாட்டின் நலம் பாதிக்கப்படுவதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை .நாட்டின் வளர்ச்சிக்காகத் திரட்டப்பட்ட பொது நிதியில் பற்றாக்குறைபாடு ஏற்படுவதால்  நாட்டின் முன்னேற்றம் பின்தங்கி விடுகின்றது . எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்கு எடுத்துக் கொள்ளும்  நடவடிக்கைகளைவிட  உள்ளெதிரிகளாக விளங்கும் காரணிகளை முழுமையாக அழிக்க அதிகம் மேற்கொள்ள வேண்டும் பானை அழகாக இருந்தாலும் ஓட்டைஇருந்தால்  நீரைச் சேமித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை.எவ்வளவுதான் இயற்கையுரமிட்டாலும்  களை எடுக்கப்படாவிட்டால்  வேளாண்மையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கமுடிவதில்லை.
பொது முன்னேற்றத்தை தன் முன்னேற்றம் போல நினைக்கும் அரசியல்வாதிகள் இல்லை..அதிகாரமிக்கோரின்  செயலால் பொது முன்னேற்றம் பாதிக்கப்படும்போது எந்த அதிகாரமுமில்லாத மக்களால்   அதை எதிர்த்து ஒன்றும் செய்யமுடிவதில்லை .மேலும் அந்தப் பாதிப்பு எல்லோருக்குமானது என்பதால் யாரும் அதைப்  பெரிய இழப்பாகவும் நினைத்து வருத்தப்படுவதுமில்லை.
ஊழல் செய்து திடீரென்று பெரும் பொருள் சம்பாதிக்கும் நபர்கள் அந்தப் பணத்தை முடக்கி வைப்பதால் பயனற்றுப் போகின்றது . பறிக்கப்படாமல் பழுத்துத் தொங்கும் பழங்களைப் போல. அறுவடை செய்யாமல் வீணாகும் பயிரைப்போல . அந்தப்பணத்தைக் கொண்டு  அதிக விலைக்கு சொத்துக்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் காட்டுவதால் சொத்துக்களின் விலை குடி மக்களுக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்து விடுகின்றது. இதனால் நேர்மையாகச் சம்பாதித்து ஒரு சொத்தைக் கூட வாங்கமுடியாத நிலைக்கு மக்கள் ஆளாகிறார்கள் .அந்தப்பணத்தைக் கொண்டு தீய செயல்களில் ஈடுபடும் துணிவைப் பெறுவதால் .குற்றச் செயல்கள் நாட்டில் பெருகும் வாய்ப்பு தவிர்க்கயியலாததாக இருக்கின்றது. கையில் பொருள் மிகுதியாக இருப்பதால்  அதைக்கொண்டு  எதிர்ப்புக்களிலிருந்தும் , தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதோடு ,தொடர்ந்து தவறுகளைச்  செய்யவும் செய்வதால்  காவல் மற்றும் நீதித்துறைகள் இருந்தும் பயனில்லாமல் போகின்றது  

No comments:

Post a Comment