60 சதவீத மக்கள் தங்களுக்கான வேலைகளைத் தங்களாகவே தீர்மானித்து அதன் மூலம் சாம்பாதிக்கத் தொடங்குகிறார்கள் . காய்கறி உற்பத்தி , ஆடு கோழி வளர்ப்பு, கூலி வேலை , பண்டங்களைக் கொள்முதல் செய்து வீதிகளில் கூவி விற்பது ,வாடகைக்கு கார் ஓட்டுதல், சமையல் மற்றும் வீட்டு வேலை , துணி துவைப்பது, வீடு பெருக்கி சுத்தம் செய்வது ,சாணை பிடித்தல் ,கட்டட வேலை செய்தல் ,கல்லொடைப்பது.,தபால், செய்தித்தாள் ,விநியோகம் செய்தல் , துணி,மருந்து மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனையாளராக வேலை செய்தல்,,சாயமிடுதல் ,வண்டி இழுப்பது, பாரம் சுமப்பது.,கருவிகளைப் பழுது நீக்குவது, பட்டாசு , தீக்குச்சி உற்பத்தி, மீன் பிடித்தல், இப்படிப் பலவேலைகள். வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற முயற்சிக்கும் போது யாருடைய முயற்சியுமின்றி அவர்களுக்கு இது போன்ற வேலைகள் மட்டுமே கிடைப்பதற்கான கூடுதல் வாய்ப்பிருப்பதால் , தங்கள் திறமைகளை மூட்டைகட்டிவைத்து விட்டு செக்கு மாடு போல கடைசி வரை இதே வேலையைச் செய்யும் நிலைக்கு ஆளாகிறார்கள். .இவர்களுடைய் வேளையில் அரசின் பங்களிப்பு ஏதுமில்லை. 5 சதவீதம் முழுநேர அரசியல்வாதிகள்.10 சதவீதம் அரசியல் வாதிகளின் தீவிரத் தொண்டர்கள். . மீதமுள்ள 25 சதவீதத்தில் 15 சதவீதத்தினருக்கு தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது எனவே 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கே அரசு வேலைவாய்ய்ப்பைக் கொடுக்க முயற்சிக்கின்றது..தனியார் துறையில் முதலாளிகளாக இருப்பவர்கள் ,அரசியல்வாதிகளாகவோ அல்லது அரசியல் சார்ந்தவர்களாகவோ இருக்கின்றார்கள்,
ஒரு வளரும் நாட்டில் அக்கத் திறன் மிக்க தொழிலாளர்கள் அதிகம் இருக்கவேண்டும் .,அலுவலர்கள் அதிகமிருப்பதால் நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்ற உற்பத்தித் திறன் அதிகமாவதில்லை.தொழில் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் ,தவறான தொழில் வளர்ச்சியைத் கண்காணித்து தடுக்கவும் , ,நாட்டைப் பாதுகாக்கவும் ,வரி வசூலித்து அரசின் நிர்வாகத்திற்குக் கொடுக்கவும் ,அலுவலர்கள் தேவை .உற்பத்தி என்பது ஒருநாட்டிற்கு வரவு .செலவு போக வரவைத் தரக்கூடிய வேலைகளே வளரும் நாட்டை வளர்ந்த நாடாக்கும்.நிர்வாகம் என்பது செலவு மட்டுமே. நிர்வாகச் செலவு தேவையில்லாமல் அதிகரிக்கும் போது உற்பத்தியால் கிடைத்த மீந்த வரவு குறையும் . சிலசமயங்களில் செலவு வரவையும் மிஞ்சி நஷ்டமாக இருப்பதுமுண்டு .நிர்வாகம் என்பது வேலைகளை க் குறைப்பதற்காக அல்லது பிற வேலைகளைச் செய்வதற்காக கூடுதல் பணியாளர்களை நியமிப்பதில்லை. .அது வழிகாட்டல் மற்றும் கண்காணிப்புடன் கூடிய சமுதாயப் பணி .
No comments:
Post a Comment