சுயநலம் என்ற எண்ணத்தை ஒழுக்கமின்மைமை வளர்த்துவிடுகின்றது . இதனால் ஒழுக்கமற்ற ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் .சமுதாயத்திற்கு இனமறிந்து கொள்ள முடியாத ஒரு எதிரியாகவே வாழ்கின்றார் ..புற எதிரிகளை விட உள்ளெதிரிகளே மிகவும் ஆபத்தானவர்கள்..ஏனெனில் புற எதிரியை இனமறிந்து கொள்வதைப்போல உள்ளெதிரிகளை இனமறிந்து தவிர்த்து முடிவதில்லை .சுயநலம் பொது நலச் சிந்தனைகளை வேரறுத்து விடுகின்றது ..ஆனால் சமுதாயத்தோடு இணைந்து வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுநலச் சிந்தனைகள் என்பது சமுதாய இலக்கணம் என்பதால் சுயநலச் சிந்தனைகளை துறந்து பொதுநலச் சிந்தனைகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது . சுயநலச் செயல்பாடுகளை மறைத்துவிட்டு மற்றவர்களுக்காக பொதுநலத்தை பேச்சு வழக்கில் மட்டும் மேற்கொள்ளும் பழக்கம் மக்களிடையே பரவி வருகின்றது
இது தவறு இது சரி என்று ஏதும் அறியாத பிறந்து வளரும் குழந்தைகளிடமும் ஒழுக்கமின்மை மேலோங்கி வருவதற்கு யார் காரணம் ? மறைவொழுக்கத்தைப் போற்றும் இந்தச் சமுதாயமே காரணமாக இருக்க முடியும் ..பெரும்பாலும் குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடமிருந்து பின்னர் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயத்திலிருந்து பழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றன.. .தற்காலியமான சுகங்களைத் தருவதாலும் , உடல் உழைப்பு குறைவாகத் தேவைப்[படுவதாலும் தீய பழக்கங்களை குழந்தைகள் மிக விரைவாகவும் எளிதாகவும் கற்றுக்கொண்டுவிடுகின்றன. அது .கட்டுப்பாடுகள் மிகுந்த ,சுதந்திரமான இயக்கத்தை மட்டுப்படுத்துகின்ற நல்ல பழக்க வழக்கங்களை வாழ்க்கைக்குத் தேவையற்றவை எனப் புறந்தள்ளிவிடுகின்றது ,ஒழுக்கம் எண்ணத்தில் தோன்றுவதற்கு முன்னரே உள்ளுக்குளேயே ஒழுக்கமின்மை மிகப் பெரிய அளவில் வளர்ந்து விடுவதால் திருத்தவே முடியாத ஒரு சமுதாயமே சாகாத சமுதாயமாக வளம் பெறுகின்றது இன்றைக்கு இளைஞர்கள் கட்டுப்பாடுகளின்றிச் சுற்றித் திரிவதையும் ,பெரியோர்களை மதிக்காமல் அறிவுரைகளை இழிவுபடுத்துவதையும் , வீண் பிடிவாதம் செய்வதும் ,மறைவொழுக்கங்களை விட்டுவிடாமல் மேலும் நுட்பமாய்ச் செய்வதையும் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள் இது பொதுவாக எல்லோருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருப்பதால் , அதன் வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்துவதோ அல்லது கண்டுகொள்வதோ இல்லை
No comments:
Post a Comment