Saturday, May 7, 2022

Vinveliyil Ulaa

 

செளரோனின் விழி அண்டம்  (EWye of Sauron) 



  NGC 4151  செளரோனின் விழி அண்டம்

 கணையாழிகளின் கடவுளில்  (LOr of rings) வரும் செளரோன்  என்ற கதாபாத்திரத்தின் கொடூரமான விழி போல இருந்தததால் இவ்வண்டத்தை செளரோனின் விழி அண்டம் என்றே அழைக்கின்றார்கள்.. NGC 4151  என்று வரைபடத் தொகுப்பில் குறிப்பிடப்படுகின்ற இவ்வண்டம் 62 மில்லியன் ஒளியாண்டுகள் (19 Mpc) தொலைவில் கானஸ் வெனாட்சி (Canes Venatici) என்ற விண்மீன் வட்டாரத் தொகுப்பில் அமைந்துள்ளது. இது இடைநிலையில் உள்ள ஒரு சுருள்புய செய் பெர்ட்  அண்டமாகும் .  1787 ம் ஆண்டில் வில்லியம் ஹெர் சல் என்பாரால் கண்டு பிடிக்கப் பட்ட  இதன் உட்புற புயம் மிகவும் நலிவடைந்து காணப்படுகின்றது

செளரோன் கண்ணின் கண்மணிப் பகுதியில் காணப்படும் நீல நிறம் எக்ஸ் கதிர்களை உமிழும் அயனிக்கப்பட்ட ஹைட்ரஜன் வளிமத்தையும் செந்நிறம் இயற்கை ஹைட்ரஜன் வளிமத்தையும் குறிப்பிடுகின்றது இந்த இயற்கை ஹைட்ரஜன் NGC 4151 அண்ட மையத்தின் கட்டமைப்பில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது . இது அண்டத்தின் பிற பகுதிகளுடன் மேற்கொள்ளும் ஈர்ப்பு வினையால் சீர்குலைந்து போயிருக்கின்றது . இதன் விளைவாக புறவெளியிலிருந்து வளிமங்களும் தூசுகளும் இந்த அண்டத்தின் மையத்தை நோக்கி விரைந்து வந்து உட்பகுதியில் விழுகின்றன. அப்போது அணுக்களில் உள்ள எலெக்ட்ரான்கள் நீக்கப்பட்டு அயனிக்கப்பட்டுவிடுகின்றன. இப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறக் கொப்பளங்கள் , அப்பகுதியில் புதிதாக உருவாகும் விண்மீன்களைக்  குறிப்பிடுகின்றது. இந்த அண்டத்தின் மையத்திலிருந்து செறிவுள்ள எக்ஸ் கதிர் உமிழப்படுகின்றது என்பதை அதன் நிறமாலை தெரிவித்துள்ளது. .அண்டத்தின் மையத்தில் உள்ள  நிறைமிக்க கருந்துளை விண்மீனால் தூண்டப்பட்டு வெடித்துச் சிதறும் விண்மீன்களால் எக்ஸ் கதிர் உமிழ்வு  இருக்கலாம் என்று கூறுகின்றார்கள். ஹைட்ரஜன் அயனி எலெக்ட்ரானை உட்கவரும்போது  எக்ஸ் கதிர்கள் உமிழப்படுகின்றது.  

      செளரோனின் விழி அண்டம் விண்வெளியில் உள்ள அண்டங்களின் தொலைவைக் கண்டறிய ஒரு புதிய வழிமுறையைக் காட்டியுள்ளது. பூமியிலிருந்து தொலைவிலுள்ள ஒரு பொருளின் உருவ அளவை அதன் தோற்ற மற்றும் கோண வடிவியலைக் கொண்டு      மதிப்பிடும் நில அளவீட்டாளர் பின்பற்றும் வழிமுறையை இது பெரிதும் ஓத்திருக்கின்றது .           

பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் அண்டங்களின் தொலைவையும் , மையக் கருவாக உள்ள கருந்துளை விண்மீனின் நிறையையும் 90 சதவீதம் திருத்தமாக அளவிட்டறிய இது பயனுள்ளதாக இருக்கின்றது. .இதனால் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் சரிநுட்பமாகத்  திருத்தப்பட்டன.. இது தொடர்ந்து விரிவடைந்து கொண்டேயிருக்கும் பேரண்டத்தைப் பற்றிக் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கின்றது


No comments:

Post a Comment