ஆற்றல் எவ்வளவாக இருந்தாலும் அது வட்ட அலையாக நிலைமாற்றம் பெறமுடியும் எனினும் அது குவாண்டம் கொள்கையைப் போல ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கவேண்டும் அதவாது வட்டப்பாதையில் நீளம் அலைநீளத்தின் முழு மடங்காக இருக்கவேண்டும் . அப்பொழுதுதான் வட்டப்பாதையில் அந்த அலைக்கற்றை ஒரு தொடர் அலைபோலத் தொடர்ந்து இயங்கி ஒரு நிலைப்புத் தன்மையைப் பெறமுடியும். இது போன்ற கருத்துக்கள் குவாண்டம் கொள்கையின் அடிப்படியாக இருக்கின்றது . ஹைட்ரஜன் அணுவின் கட்டமைப்பை நிறுவும்போது நீல்ஸ் போர் எலக்ட்ரான்களின் அனுமதிக்கப்பட்ட வட்டப்பாதைகள் யாவும் லூயிஸ் டிபிராக்களி நிறுவிய அதன் பொருளலையின் அலைநீளத்தின் முழுமடங்காக மட்டுமே இருக்கின்றது என்பதும் , ஒரு பாதையிலிளியில் வட்ட அலைகளால் இது சாத்தியமாகின்றது
நேரலை வட்ட அலையாக மாறும்போது தன் கூடுதல் ஆற்றலை இழக்கின்றது.. தனித்த வட்ட அலையின் ஆற்றல் அந்த அமைப்பின் அடிமட்ட ஆற்றல்நிலையாக இருப்பதால் இந்த ஆற்றல் இழப்பு ஏற்படுகின்றது வட்ட அலைக்கு ஆற்றலூட்டப்பட்டால் அது மீண்டும் நேரலையாகிவிடுகின்றது. பொதுவாக வட்ட அலை தனக்குத் தானே துகள் - எதிர்த்துகள் போலச் செயல்படுவதால் அது எந்த நிலையிலும் தன்னைத் தானே அழித்துக்கொள் கின்றது. அப்போது வட்ட அலைகள் தனித்த நேரலைகளாக மாறிவிடுகின்றன வட்டஅலை அது சுற்றும் முறையால் இரு வகைப்படுகின்றன . கருவற்ற ஒரு மையத்தைச் சுற்றி ஒரு அலை ஒரு குறுகிய வட்ட அலையாக இயங்கும்போது அது கடிகாரச் சுற்று முறையிலோ அல்லது எதிர் கடிகாரச் சுற்று முறையிலோ அமையலாம்.. ஒரு வட்டஅலை தானே துகள் தானே எதிர்த்துக்கள் போலச் செயல்பாட அது ஒரு ஒற்றை வட்ட வட்டஅலையாக இருக்கமுடியாது ..வட்ட அலை உருவாகும்போதே அது 8 வடிவில் இரட்டை வட்ட வட்டஅலையாக மாறுகின்றது. இதிலுள்ள ஒரு கூடுதல் அனுகூலம் அதைத் துகள்=எதிர்த்துகளாக்கி விடுகின்றது. வட்ட அலை இப்படி அமையும் போது ஒரு வட்டம் கடிகாரச் சுற்று முறையிலும் அண்டை வட்டம் எதிர்கடிகாரச் சுற்று முறையிலும் இயல்பாக அமைகின்றன,.இது கோண உந்தம் மாறாக் கோட்பாட்டிற்கு இணக்கமாக இருக்கின்றது என்பதால் இயற்கையால் அனுமதிக்கப்படுகிறது.
வட்ட அலைகள் ஆற்றலின் திரள்சி .என்றாலும் பருப்பொருளாக்க முயற்சியின் ஒரு விளைவு என்றாலும் வட்ட அலைகள் மட்டுமே பருப்பொருளைத் தந்துவிடுவதில்லை . ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமான ஆற்றல் மட்டுமே பருப்பொருள் வடிவிலான துகள்களைத் தருகின்றன இதை வினைச் சிறும ஆற்றல் (threshold energy) என்று கூறுவார்கள். அவ்வாற்றலுக்குக் குறைவான ஆற்றலுடைய தனித்த ஒளிக்கற்றை தன் நிலைப்புத் தன்மையை அதிகரித்துக்கொள்ள வட்ட அலைகளாக மட்டுமே மாறுகின்றது துகள்களாக மாறுவதில்லை, இந்த வட்ட அலைகள் துகளிடைப் பிணைவாற்றலாக உறைவதற்குத் துணை செய்கின்றன மேலும் ஆற்றலிலிருந்து துகள்கள் உருவாகும் போது ஆற்றல் மாறாக் கோட்பாட்டிற்கு உட்பட்டிருந்தாலும் தனியொரு துகள் மட்டுமே உருவாவதில்லை. இதற்குக் காரணம் துகள் உருவாகும்போது அதனுடன் ஒரு மின்னூட்டமும் ஏற்றப்படுகின்றது. . மின்னூட்டம் என்பது துகளின் உள்ளார்ந்த கட்டமைப்பின் தனித்துவம் . மின்னூட்டம் மாறாக்கோட்பாடு பருப்பொருளாக்கத்தின் போது உருவாகும் துகள்கள், துகள்- எதிர்த்துகளாக, இரட்டைத் துகள்களாக இருப்பதை கட்டாயப்படுத்துகின்றது. பருப்பொருளாகத்தின் போது ஆற்றலிலிருந்து எப்போதும்ப்படுத்தியுள்ளன.
No comments:
Post a Comment