டாட்போல் அண்டம் (Tadpole Galaxy)
ட்ராகோ (Draco) வட்டார விண்மீன்கள் தொகுதியில் ஏறக்குறைய 420 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு புதுவகையான சீரற்ற அண்டமொன்றை முதன் முதலாக 1781ம் ஆண்டில்
கண்டனர். இதை டாட்போல் அண்டம் என அழைக்கின்றார்கள் . இதை UGC 10214 என்று படத்தொகுப்பில் குறிப்பிடுகின்றார்கள். இதன் அருகாமையில் நீலநிறங் கொண்ட விண்மீன்களாலான ஒரு சிறிய அண்டம் காணப்படுகின்றது . இது நிறைமிக்க சுருள்புய வடிவிலுள்ள டாட்போல் அண்டத்தைக் குறுக்கிட ,அவற்றின் மோதல் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதன் தோற்றத்தில் காணப்படும் மாற்றங்கள் அண்டங்களின் மோதலால் ஏற்படுகின்ற பின் விளைவுகளாகும். சுருள் புய அண்டத்தின் வலிமையான ஈர்ப்பு விசை மோத வரும் அண்டத்திலுள்ள விண்மீன்கள் மற்றும் வெடித்துச் சிதறிய விண் மீன்களினால் உண்டான வளிமம் இவற்றால் நம்பமுடியாத அளவிற்கு ஒரு நீண்ட வால் போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறது . இந்த வால் அண்டத்திலிருந்து சுமார் 280,000 ஒளியாண்டுகள் தொலைவு வரை நீண்டிருக்கின்றது இளமையான நீல வண்ண விண்மீன்கள் மற்றும் விண்மீன் கூட்டங்கள் போன்றவை சுருள் புயங்களிலும் நீண்ட வால் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதிலுள்ள விண்மீன் கூட்டத்தில் ஒரு மில்லியன் விண்மீன்கள் வரை உள்ளன. காலப்போக்கில் இவை சிவப்பாக மாறி கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களாக உருமாறும் என்று கூறுகின்றார்கள் . இது போல இரட்டை அண்டங்களில் நிகழ்வதை அறிந்துவைத்திருக்
கின்றார்கள்.. வால் பகுதிகளில் உள்ள விண்மீன்கள் வயதாக வயதாக அண்டத்தின் தடித்த சுருள் புயத்தால் உட்கிரகிக்கப்பட்டுவிடும் என்று கூறுகின்றார்கள்.
10214 டாட்போல் அண்டம்
சீர்குலைந்து பிளவுற்ற சுருள் புயங்களைக் கொண்டிருக்கும் . தலைப் பிரட்டையின் வளர்ச்சிப் படிபோல இதன் உருவமும் விண்மீன்களின் உருவாக்கமும் இருந்ததால் இதற்கு டாட் போல் அண்டம் எனப் பெயரிட்டனர். இது ஒரு பெரிய அண்டம் உடைந்து சிதைந்து புதிய சிறிய அண்டங்களாக நிலைமாற்றம் பெறும் இடைநிலையாகும்.. 2002 ல் UGC 10214 ஆக இருந்தது 2018 ல் பல சிறிய அண்டங்களின் தொகுதியாக நிலைமாறிப் போயிருக்கின்றது. இதை HCG098 என்று சுட்டுகிறார்கள்,
NGC

No comments:
Post a Comment