அரசு அலுவலகங்கள் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றாலும் அவை யாவும் மக்களின் நலனுக்காகச் செயல்படுவதில்லை.. சட்டத்தால் ஒரு தோற்றத்தையும் செயல்பாடுகளினால் மாறுபட்ட தோற்றத்தையும் கொண்டுள்ளனன. தவறுகளைக் கண்டால் சட்டெனப் பாயவேண்டிய சட்டம் அங்கே வேடிக்கை பார்க்கின்றது என்றால் சட்டத்தைக் கையாள்பவர்களே குற்றாவாளிகளாக இருக்கின்றார்கள் என்பதே உண்மை. நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரன் போல நாமும் சொல்லலாம் .ஆனால் சிவ பெருமான் போல நேர்மை யை உணர்ந்தவர்கள் இல்லாத போது அதனால் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.
அரசு அலுவலகங்கள் வியாபாரக் கூடங்கள் இல்லை. அரசு அலுவலர்கள் வியாபாரிகளும் இல்லை. ஆனால் ஆட்சியாளர்கள் முதலாளிகள் போலவும் , அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்குதாரர்கள் போலவும் செயல்படுகிறார்கள் .ஒரு தனிமனிதன் சட்டப்படி பெறவேண்டிய சான்றிதழ்களை மிகுந்த பொருட் செலவுடன் பெறவேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிடுகின்றார்கள்
..சம்பளத்ததுடன் கூடுதல் வருமானம் தேடும் முயற்சியில் இது தொடர்ந்து நடக்கின்றது. இதற்காக
அதிகமாகப் பொருள் கொடுத்து அரசு வேலையில் சேருகிறார்கள் . ஆட்சியாளர்கள் லஞ்சமாகப்
பொருள் வாங்கிக் கொண்டு இது போன்ற தகுதியற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குகின்றார்கள்.
இதைத் தடுக்க வேண்டுமென்றால் ஆட்சியாளர்களால் இல்லாமல் மக்களால் நியமிக்கப்பட்ட 100 கௌரவ உறுப்பினர்களால் ஏக மனதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களையே நியமிக்க வேண்டும்
No comments:
Post a Comment