லாட்டரி சீட்டுகளினால்
நன்மைகளும்
தீமைகளும்
லாட்டரி சீட்டுகளினால்
மக்கள்
உழைத்து
சம்பாதிக்க
வேண்டும்
என்ற
எண்ணத்தைத்
துறந்துவிடுவார்கள்
.எல்லா
வசதிகளும்
உழைப்பின்றி
கிடைக்கவேண்டும்
என்று
இயற்கைக்கு
எதிரான எண்ணம் மேலோங்கி
விடுகின்றது
கிடைத்த
வசதிகளை
அனுபவிக்காமல்
கிடைக்காத
வசதிகளையும்
கிடைக்காமல்
அனைத்தையும்
இழந்துவிடுகின்றார்கள் லாட்டரி சீட்டுக்களினால்
தீமையே
என்று
நினைத்துக்கொண்டிருந்தேன்
.அதனால்
நன்மைகளும்
உண்டு
என்பதை
யும்
அதை
மேம்படுத்தி
நாட்டை
வளப்படுத்த
முடியும்
என்பதையும்
இப்பொழுது
தெரிந்து
கொண்டேன்
, உண்மையில்
குடிப்பழக்கத்திற்கு இந்த லாட்டரி
சீட்டு
பரவாயில்லை
.மக்களில்
பெரும்பாலானவர்கள்
ஏழைகளாகவும்
,கல்வியறிவு
இல்லாதவர்காளவும்
இருப்பதால்தான்
லாட்டரி
சீட்டு
குடும்பங்களின்
வாழ்வாதாரத்தைச்
சீர்குலைக்கின்றது.
சிங்கப்பூர்
, அமெரிக்கா ,அரேபிய நாடுகளில் மக்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள் . அவர்கள் லாட்டரி
சீட்டு வாங்குவதை ஒரு பொழுதுபோக்காகவே கருதுகின்றார்கள் . அதற்காக குடும்பங்களை வறுமையில்
வாட விடுவதில்லை. லாட்டரி சீட்டு நேர்மையாக நடத்தப்படும் போது மக்களின் நம்பிக்கை நிரந்தரமாகின்றது
. எந்த நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றதோ அது தடையின்றி நடைபெறுகின்றது லாட்டரி சீட்டை
நேர்மையான அரசாங்கம் நடத்துவது தவறில்லை. நேர்மையற்றதனியார்கள் நடத்துவதுதான் தவறு.
பெரும்பாலும்
சுயமாக சம்பாதிக்க முடியாத மக்கள் , சம்பாதித்து ஓய்ந்துவிட்ட முதியவர்கள் ,ஆடம்பரச்
செலவுகளில் ஆர்வம் கொண்டவர்கள் லாட்டரியில் ஆர்வம் கொள்கின்றார்கள் .அரசாங்கம் சம்பளத்தைக்
குறைவாகக் கொடுக்காமல் நிறைவாகக் கொடுக்கும் போது எல்லோரும் வாழ்வாதாரத்தை இழந்துவிடாமல் பொருள் வாங்கும் திறனைப் பெறுகின்றார்கள். அப்பொழுது
லாட்டரி சமுதாயத்திற்குப் பயன்தருகின்றது .
அரசாங்கமும் பயனடைகின்றது . முதிவர்கள் குடும்பத்தினரால் வெறுக்கப்படாமல் ,முதியோர்
இல்லங்களுக்குள் தள்ளப்படாமல் சுயமரியாதையுடன் வாழும் வாய்ப்பைப் பெறுகின்றார்கள்.
மக்களிடம் பணப் புழக்கம் தொடர்ந்து நிலைப்படுகின்றது. தொழில் முனைவோர்கள் வளம்பெறுகின்றார்கள்
No comments:
Post a Comment