Tuesday, January 10, 2023

 பற்றற்று இரு என்பது ஆன்மீக இலக்கியங்களுக்கு  அழகு .ஆனால் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றின் மீது பற்றுக் கொள்ளாமல் இல்லவே இல்லை. இயற்கையின் கொள்கை உயிரற்றவைகளுக்கு வேறு உயிருள்ளவைகளுக்கு வேறு  என்று வலியுறுத்துவதேயில்லை ஆசைப்படு முயன்று பெறு ,அதற்காகப் பேராசைப்படாதே  என்பதை வலியுறுத்த பற்றற்று இரு என்றார்கள். எதையும் அதற்காகவே விரும் பவேண்டும் ,நம்முடைய சுகங்களுக்காக விரும்பக்கூடாது (உதாரணமாக மனைவியை மனைவியாக நேசிக்கவேண்டும் அவள் அழகுக்காகவோ , தரும் சுகங்களுக்காகவோ நேசிக்கக் கூடாது ) பற்றற்று இருந்தால் இந்த பிரபஞ்சம் இந்த அளவிற்கு உருவாகியிருக்காது. நான் விஞஞானத்தை ஓரளவு புரிந்து படித்திருக்கின்றேன். புரோட்டானும் எலெக்ட்ரானும் பற்றுக் கொண்டதால் அணு உண்டானது. அணுக்கள் பற்றுக்கொண்டதால் மூலக்கூறுகள் உண்டாகின. மூலக்கூறுகள் பற்றுக்கொண்டதால் பொருட்கள் உண்டாகின . பொருட்களின் காதலே  பூமியில் உயிரினமானது. பற்றற்று இருந்தால் இயற்கையே இல்லை  

1 comment:

  1. எல்லாவற்றையும் விரும்பு அதைப்பெறுவதற்கான தகுதியுடன் . பெற்றபின்பு அதை அனுபவி ஆனால் தனதாக்கிக் கொண்டுவிடாதே .உன்னைவிடத் தகுதியானவர்கள் அதற்காகக் காத்துக்கொண்டு இருக்கலாம்.இந்தப் பிரபஞ்சம் எல்லோருக்குமானது எதை உனதாக்கிக் கொண்டாயோ அதை அங்கேயே விட்டுச் செல்லவேண்டும் என்பது விதி ..இதைத் தான் பற்றறு இரு என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் . மறு பிறப்பே வேண்டாம் என்று சொல்வதற்காக இல்லை

    ReplyDelete