Friday, September 6, 2024

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாக்கியங்கள்

மனிதநேயத்தை வளர்ப்பது அனைவருக்குமான கடமை

மக்களிடம்  அறியாமை மிகுந்திருக்கும் போதும் ,அரசாங்கம் அதைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை உண்மையாக நடைமுறைப் படுத்த முயலாதபோதும்  சமூகஆர்வலர் களாலும் .பொது ஊடங்கங் களினாலும்  மக்களிடையே ஒரு விழிப்புணர்வு தூண்டப்பட வேண்டும். தங்களுக்கென்று ஒரு கொள்கை மாற்றானுக்கு வேறொரு கொள்கை என்ற நிலைப்பாட்டை, கொள்கையால் பதவியை ஏற்றுக் கொண்டவர்கள் விட்டுவிடவேண்டும்.   ஓருபாற்கோடாமை உணர்வு டன் பொதுஊடகங்கள் செயல்பட்டு  சமூகநீதியைப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுதுதான்  சமுதாயத்தில் ஏமாற்றப்படு வதும், ஏமாறுவதும் பெருமளவு குறையும். இதனால் மறைவொழுக்க நடவடிக்கைகளையும்,  கட்டுப்பாடின்றி பெருகிவரும்    ஊழல்களை யும்,தடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இது மக்களிடையே நல்லொழுக்கத்தை இயல்பாக நிலைப்படுத்துகிறது. சமுதாயம் தழுவிய இப்போக்கு  உண்மையான மனிதநேயம் மலர்வதற்கு அடிப்படைக் காரணமாகின்றது. மனிதநேயம் சாகாத சமுதாயத் திற்கு ஒரு வலுவான பாதுகாப்பாக இருக்கின்றது. மனிதநேயமின்றி ஒரு சமுதாயம் அதன் பரிணாம வளர்ச்சியில் மேன்மையடைய முடியாது என்பதை  எல்லோரும் புரிந்துகொள்ளும் போது மனிதன் மனிதனை  ஏமாற்றும் மனப்போக்கு வலுவிழந்து போகின்றது.

எல்லோரும் அவரவர் தேவையைப் பெற்று ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு  மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று எல்லோரையும் சமதகுதிகளுடன் தான் படைக்கப்பட்டார்கள் .தகுதியை வளரும் போது வளர்த்துக்கொள்ளத் தவறியவர்களே குறுக்கு வழியில் சம்பாதிக்க மனித நேயத்தைத் துறந்து தவறு செய்யத் தொடங்குகிறார்கள் .இவர்கள் செய்யும் தவறுகள் திருத்தப்படாவிட்டால் அல்லது தண்டிக்கப்படாவிட்டால்  மற்றவர்களுக்கு அது பின்பற்றி ஒழுகத் தகுந்த பாடமாக அமைந்துவிடும். 

No comments:

Post a Comment