Saturday, November 7, 2026

 அரசியலில்  ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும் பொதுவாக மக்கள் எல்லோருடைய எண்ணமாக இருக்கின்றது.ஆனால் அது மக்களின் கைகளில் இல்லை. அரசியல்வாதியை ,ஆட்சியாளர்களை மாற்றிவிட்டால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்ற அவர்களுடைய நம்பிக்கை ஏமாற்றமே தருகின்றது. அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் நேர்மையாக முயன்றால் மட்டுமே முடியும்.. நீண்ட காலம் அரசியலில் எதிர்பார்க்கப்படுகின்ற  மாற்றம் ஏற்படாமல் போகின்றது என்றால் அது மக்களின் தவறு இல்லை. அரசியல் வாதிகள் செய்யும் குற்றம். குறுகிய காலத்தில் , கூடுதல்  உழைப்பு ஏதுமின்றி  பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற அவ்வப்போது நடக்கும் போராடாமே இந்திய அரசியல். எல்லோரிடமும் ஒரே நோக்கமிருப்பதால் ஆட்சியாளர்களை மாற்றினாலும் மாற்றம் ஏற்படாமல் போகின்றது. இதைச் சரிசெய்வதற்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது . பஞ்சாயத்து , பேரூராட்சி , நகராட்சி, மாநகராட்சி  உறுப்பினர்களை அந்தந்த பகுதி மக்கள் தேர்வுசெய்வார்கள் . இப்பவும் அப்படித்தான் நடக்கின்றது . பஞ்சாயத்தில் தலைவர் , பேரூராட்சியில் தலைவர் ,துணைத்தலைவர்  என்று இருவர் , நகராட்சியில் தலைவர் , துணைத்தலைவர் இருவர் என மூவர் , மாநகராட்சியில்  தலைவர், துணைத்தலைவர்கள் மூவர் என நால்வர் இவர்களுடன் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் , கல்லூரி முதல்வர்கள் , பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் , நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் , பத்ம விருது பெற்றவர்கள் ,போன்றவர்களுக்கு ஓட்டுரிமை அளித்து  அந்ததந்த ப் பகுதிக்குரிய MLA , மற்றும் MP க்களை தேர்வு செய்யலாம் . பகுத்தறி வின்றி வெறும் உணர்வின் அடிப்படையில் ஓட்டுப்போட்டு அமையும் அரசாங்கம் ஓவ்வொரு முறையும் ஏமாற்றம் தருகின்றது . மாற்றம் வேண்டும் என்று மட்டும் சொல்லாதீர்கள் . அந்த மாற்றம் எப்படி இருக்கவேண்டும் என்று கூறுங்கள் . அது ஒன்றே மாற்றத்தை இப்பொழுது இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் கொண்டுவந்து தரும் . உணர்வுப்பூர்வமான மாற்றத்தை விட அறிவுப்பூர்வமான மாற்றம் எல்லோருக்கும் நற்பயனளிக்கும்.

No comments:

Post a Comment