Wednesday, December 24, 2025

 அரசன் முதல் அடித்தட்டு மக்கள் வரை கொடுக்கப்பட்ட பணியை பணிக்காகச் செய்வதில்லை . அதனுள் ஒரு மறைபொருளை மறைத்து வைப்பதை பழக்கமாக்கி வளர்த்து வருகின்றார்கள். இதனால் பணியின் பயன்பாடு மாறுபடுகின்றது . பணியின்றி பலனை மட்டும் அனுபவிக்கும் போக்கு நாட்டை சீரழித்து விடும் . இதை நாட்டில் எஞ்சியிருக்கும் உண்மையான  நேர்மையான  தலைவர்களும் ,நீதிபதிகளும் உணர்ந்து தகுந்த சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்  

Tuesday, December 23, 2025

         கடவுள் மக்களைத்  தண்டிக்கின்றபோது கெட்டவர்களை மட்டும் அழிப்பதில்லை . கெட்டவர்களோடு சில நல்லவர்களையும் சேர்த்தே அழிக்கின்றார். பெரும்பாலான நல்லவர்கள் கெட்டவர்களைத்  திருத்துவதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது காரணமாக இருக்கலாம்  

Monday, December 22, 2025

   அதிகாரத்தில் உள்ளவர்கள் திறமையானவர்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்குள் மட்டுமே  தேடுகிறார்கள் .அதனால் தகுதியும் திறமையும் உள்ள உண்மையானவர்கள் தாய்நாட்டிற்குப் பயன்படாமல்  

போகும் வாய்ப்பு ஏற்படுகின்றது . நாட்டின் வளம் வீணாகும் வழிகளில் இது முதன்மையானதாகும் 






Friday, December 5, 2025

 குற்றம் செய்வார்களோ என்ற எண்ணத்தில் மக்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் பல குற்றங்களைச் செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கண்டுகொள்வதேயில்லை

Tuesday, November 18, 2025

 அரசனோ ஆண்டியோ ,அறிஞனோ ,அறிவிலியோ ,அண்ணனோ தம்பியோ யாரும் சமுதாயத்திற்குத் தவறான முன்னுதாரணமாய் இருக்கவேண்டாம் என்பதே என் வேண்டுகோள் . சமுதாயம் அழிந்து போக ஒரு காரணமாய் இருப்பதைவிட  அது என்றென்றும் நிலைத்திருக்க வழி சொல்லுங்கள் . அவர்களே உண்மையான நீதிபதிகள் .                                  


 சமுதாய முன்னேற்றம்  மற்றும் நாட்டின் வளர்ச்சி என்ற  மாயத் தோற்றத்தில் தனிமனிதர்களுடைய முன்னேற்றம் பெருமளவு தடுக்கப்படுகின்றது. தனிமனித முன்னேற்றம்  மட்டுமே சமுதாய முன்னேற்றத்தை நெறிப்படுத்தி நாட்டிற்கு தன்னிகரில்லா வளர்ச்சியைத் தரமுடியும் .அது பின்னடைவின்றி நிகழ்கின்றதா என்பதைக் கவனித்து தக்கநடவடிக்கை எடுத்தால் போதும் . ஒரு அரசு ஆள்பவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று கருதினால் அந்த நாடு வரைவில் வளமிழந்து சீரழியும் .இந்தச் சீரழிவு முதலில் மக்களை மட்டுமே பெரிதும் பாதிக்கும்.அப்புறம் ஆள்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிரிகளாகக்  கருதி அழித்துக்கொள்வார்கள் ஆள்பவர்களின் மறவொழுக்க நடவடிக்கைகளால் நாட்டின் உண்மையான வளர்ச்சி தன் நிகழ்வாய்ப்பை இழந்து வருகின்றது . இதைப் புதிப்பிப்பதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை என்பது என்னை பெரிதும் அச்சப்படுத்துகின்றது.                                                          


Sunday, November 16, 2025

 சொத்துக் குவிப்பு வழக்கு தாசில்தார் , அரசு ஊழியர்கள் ,ஒப்பந்தக்காரர்கள் ,இன்ஜினீயர் , IAS ,IPS அதிகாரிகள் போன்றவர்களுக்கு மட்டும்தானா . அரசியல் தலைவர்கள் ,அமைச்சர்களுக்கு இல்லையா. என்ன ஜனநாயகமா ? முரண்பாடான நீதி நெறிமுறைகள் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும்