Friday, June 28, 2013

Eluthaatha Kaditham

ஒரு ஆய்வாளர் திருட்டு விசிடி யிலிருந்து விடுவிப்புச் செய்ய 50.000 ரூபாய் லஞ்சம் கேட்டார் .ஒரு வட்டாச்சியர் வாரிசு சான்றிதழ் கொடுக்க 5000 லஞ்சம் கேட்டார் ,ஒரு பெண் போலீஸ் அதிகாரி லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டார் .மின்னிணைப்புக் கொடுக்க மின் பொறியாளர் 25000 லஞ்சம் வாங்கும் போது அகப்பட்டுக் கொண்டார்.

இங்கே சொன்ன செய்திகள் கடுகளவு ,சொல்லாமல் விட்ட செய்திகளோ கடலளவு.இது போன்ற செய்திகள் தொலைக்காட்சியிலும்,நாளேடுகளிலும் வராத  நாட் கள் இல்லை.இதன் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிந்துக் கொண்டே வருவதைப் பார்க்கும் போது சட்ட நடவடிக்கைகள் முழுமையாக இல்லை என்பது ஒரு புறமிருக்க குற்றம் புரிபவர்களும் அதையொரு குற்றம் என்று மனதிற்குள் நினைப்பதில்லை,அது கேவலம் என்றோ உலகிற்குத் தெரிந்தால் அவமானம் என்றோ நினைப்பதில்லை.அரசுப் பணியில் சேர்ந்த பின்பு ,விரும்பிச் சேர்ந்த பணியில் பணிக்காகப் பணியைச் செய்வதில்லை கூடுதல் வசதிக்கும்,தெரியாத எதிர்காலத் தேவைக்கென பொருளைச் சேமிக்கவும் பணியையே ஒரு வாழ்வாதாரமாகக் கொண்டுவிடுகின்றார்கள்.

நேர்மையான பணியாளர்களை எங்கும் காணமுடியவில்லை.எதிர்காலத்தில் நல்ல மாற்றம் வரும் என்பதற்கும் நம்பிக்கையுமில்லை .ஏனெனில் பணியாளர்களைத் தேர்வு செய்வோரும்,ஆள்வோரும் நேர்மையாக இல்லை.துவும் சட்டியில் இருந்தால்த்தானே அகப்பையில் வரும் .
அரசியல்வாதிகள் தங்கள் நேர்மையை விளம்பரப்படுத்திக் கொள்கின்றார்கள் .ஆனால் நேர்மை விளம்பரம் மூலம் தீர்மானிக்கப் படுவதில்லை.நேர்மை ஒரு கொள்கை .நாளுக்கு நாள் அது மாறுவதில்லை.


எல்லோரும் இலஞ்சம் கொடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் வாங்குவதற்கில்லை .அதனால் தான் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றார்கள். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களை ஆளும் அரசியல்வாதிகள் தான் தீர்மானிக்க வேண்டும். இது முறையாகவும் முழுமையாகவும் திட்டமிடப்படாவிட்டால் இந்தியர்களின் எதிர்காலம் இன்னும் கடுமையாகத்தான் இருக்கும். காலங்கடந்து வெட்கப்படுவதோ ,வேதனைப்படுவதோ எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை .

Thursday, June 27, 2013

cartoon

கார்ட்டூன் 





உலக வரைபடத்தைப் பார்த்தால் .பெரும்பாலான நாடுகளின் தலைப் பகுதி அகன்று பெரிதாகவும் அடிப்பகுதி குறுகி சிறுத்தும் இருக்கும் .எ.கா .இந்தியா,ஆப்ரிக்க கண்டம் ,வட மற்றும் தென் அமெரிக்கா ,கிரீன்லாந்து ,டாஸ்மானியா  போன்ற வற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .ஆஸ்திரேலியா அகன்றிருந்தாலும் அடிகளை அகட்டி வைத்திருப்பது போல் இருக்கிறது .ஸ்ரீ லங்கா மட்டும் தலை சிறுத்தும் அடிப்பகுதி வீங்கியும் வேறுபட்டுத் தோன்றுகிறது .இயற்பியல் உலகில் உயர்ந்தோங்கிய அமைப்புகளின்  நிலைப்புத் தன்மை யை இது வரையறுக்கிறது என்றாலும் ஒரே தளத்தில் அமைந்துள்ள நிலங்களுக்குப் பொருந்துவதில்லை .அதனால் தான் தலையால் வரும் சிறப்புக்களை இழந்து வாழ்கின்றார்கள்  போலும் 

Wednesday, June 26, 2013

Kavithai

ஒற்றுமையில் வேற்றுமை வேண்டாமே 

நிலம் பல துண்டுகளாகி நாடாயிருக்கலாம் 
ஆனால் உலகம் என்றைக்கும் ஒன்றுதான் 
நிறம் வெவ்வேறாய் மனிதர்கள் பிரிந்திருக்கலாம் 
ஆனால் இரத்தம் எல்லோருக்கும் சிவப்புத்தான் 
இசைக்கும் சுரங்கள் எவ்வளவோயிருக்கலாம் 
ஆனால்இசைக்கும்  இசைக்கருவி ஒன்றுதான்

எழுதும் எழுத்துக்கள் பலவாக இருக்கலாம் 
ஆனால் எழுதும் எழுதுகோல் ஒன்றுதான் 
எஃகால் ஆன பொருட்கள் விதவிதமாய் இருக்கலாம் 
ஆனால் அவற்றின் மூலப்பொருள் ஒன்றுதான் 
மூச்சுவிடும் மனிதர்கள் வேவேறாய் இருக்கலாம் 
ஆனால் சுவாசிக்கும் காற்று ஒன்றுதான் 

தாய்க்குப் பிள்ளைகள் பலர் இருக்கலாம் 
ஆனால் பிள்ளைக்குத் தாய் ஒன்றுதான் 
பூக்கும் பூக்கள் பலவிதமாய் இருக்கலாம் 
ஆனால் அவை சுரக்கும் தேன் ஒன்றுதான் 
உடலில் உறுப்புகள் பல இருக்கலாம் 
ஆனால் அனைத்தையும் இயக்கும் மூளை ஒன்றுதான் 

மதம் வெவ்வேறாய் இருந்தாலென்ன
வாழும் நெறி வாழ்வோருக்கு ஒன்றுதானே 
மொழி வெவ்வேறாய் இருந்தாலென்ன 
புரிதலும் புரிந்துகொள்ளுதலும் ஒன்றுதானே 
இனம் வெவ்வேறாய் இருந்தாலென்ன 
பிறத்தலும்  இறத்தலும் ஒன்றுதானே 

கோயில்கள் வெவ்வேறாய் இருந்தாலென்ன 
வேண்டும் அமைதி அனைவருக்கும் ஒன்றுதானே 
செயற்கையால் வேறுபாடுகளை விரித்துக் கொண்டே
செல்லும் மனிதனே 
இயற்கையைப் பார்த்து

இன்னுமா நீ திருந்த நினைக்கவில்லை