Monday, February 4, 2019

sonnathum Sollaathathum- Tagore

ரபீந்திர நாத் தாகூர்




ரபீந்திர நாத் தாகூர்  ( Rabindranath Tagore )  ( 7  மே 1861- 7  ஆகஸ்ட் 1941) இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கல்கத்தாவில்  தேவேந்திர நாத் தாகூர் - சாரதா தேவி தம்பதியினருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் இளையவராவார் . புனைப் பெயர் பானு சின் ஹா தாக்குர் (Bhanu Singha Thakur ) இவர் சிறந்த படைப்பாளர் . எழுத்தாளர் , கவிஞர், இசை அமைப்பாளர் , நாடக ஆசிரியர் , ஓவியர் என்று பன்முகத் தன்மை கொண்டவர். கீதாஞ்சலி என்ற கவிதை நூலைப் படைத்து 1913  ல் இலக்கியத்திற்காக  ஆசியாவின் முதல் நோபல் பரிசைப் பெற்றார் .நம் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே ஆவார்.  தாகூர் தனது 8 வது வயதிலிருந்தே  கவிதை எழுதத் தொடங்கினார். தனது 15 வது வயதில் பானு  சிம்ஹா (சூரிய சிங்கம் ) என்ற தலைப்பில் முதல் கவிதை நூலை வெளியிட்டார்   சாந்தி நிகேதன் மற்றும் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் .போன்றவற்றை நிறுவினார் .விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர்  பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார். அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”,இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

தாகூர் இளம் வயதிலேயே தாயாரை இழந்து விட்டார் . தந்தையர் பயணத்திலேயே அதிக நேரம் செலவிட்டதால் .வேலையாட்களின் கவனிப்பிலேயே  அதிகம் வளர்ந்தார்.பாரம்பரிய கல்விமுறைப் பிடிக்காததால், பல ஆசிரியர்களின் கீழ் வீட்டிலேயே படிக்கத் துவங்கினார். சிறுவயது முதற்கொண்டே இவருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வர் இருந்தது. ஒரு முறை ஓரு கவிதையை எழுதி தன தந்தையாரிடம் காண்பிக்க, அது நன்றாக இல்லாவிட்டாலும் மகன் உற்சாகத்தை இறந்துவிடுவான் என்று அந்தக் கவிதைக்காகப் பாராட்டி ஒரு கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார். .இதனால் தாகூர் மேலும் மேலும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு தன திறமையை வளர்த்துக் கொண்டார்.ஒவ்வொருவருவரும் தங்கள் தனி திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதாவதொரு  தூண்டற் காரணி யை இனமறித்து ஏற்படுக்கொள்ள வேண்டும் .இது அகத்  தூண்டுதலாகவோ அல்லது புறத் தூண்டுதலாகவோ இருக்கலாம் .



"ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு க் கவசம் வேண்டும் என்பதை விட ப் பயமின்றி அவற்றை எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் மனம் தான் வேண்டும்"

பாதுகாப்பு என்பது புறச் சூழல்களை ஏற்படுத்திக் கொண்டு எதிர்ப்புக்களைத் தவிர்ப்பது. ஆனால் தற்காப்பு என்பது நமக்கு நாமே பாதுகாப்பாய் இருப்பது . பாதுகாப்பு வழி
 முறைகள் ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் பொய்த்துப் போகலாம் . ஆனால் தற்காப்பு தரும்  தைரியம் ஒருநாளும்  ஏமாற்றிவிடுவதில்லை. உடல் வலிமையையும் மன உறுதியும் இருந்தால் எதிர்ப்புக்களை எளிதாகச் சமாளிக்கலாம். மதி நுடபமும் சேர்ந்து கொண்டால் நம்மை விடாய் பலமானவர்களைக் கூட எதிர்த்துப் போராடலாம். தற்காப்பு என்பது இன்றைக்கு ஒரு வாழும் கலையாகவே மாறி வருகின்றது. கராத்தே, சிலம்பு , களரி  போன்றவற்றை  குறிப்பிட்டுச் சொல்லலாம் .
ஒரு செயலைத் தொடங்கு முன் மனதில் இனம்புரியாத ஒருவிதமான பயம் தோன்றுவதற்கு அடிப்படையான காரணம் அச் செயலைச் செய்யத் தொடங்கி வெற்றிகரமாக முடிக்கும் வரை நமக்கு நாமே முழு நம்பிக்கை உடையவர்களாக இருப்பதில்லை .குறைந்தபட்ச தகுதிகளையும் திறமைகளையும் கொண்டு அதிகபட்ச அனுகூலங்களை அடைய ஆசைப்படும் போது உள்ளுக்குள்ளே  ஊறும் இந்த அவநம்பிக்கை பயத்தின் அளவை அதிகரிக்கின்றது. சிறு குழந்தையாக இருந்த போது செயல் மற்றும் திறமை பற்றிய எந்த எண்ணமும் தோன்றி இல்லாததாலும், தனக்கு வேண்டியதையெல்லாம் தருவதற்குத் தன் பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை இருந்ததாலும் பயம் இல்லாதிருந்தது .கொஞ்சம் வளர்ந்த போது பெற்றோர்களின் தனிக் கவனிப்புக் குறைந்து தனக்கு வேண்டியதைப் பெறத் தானே வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ,திறமை போதிய அளவு இல்லாத நிலையில் பயம் மனதைச் சூழ்ந்துகொள்கின்றது.

ஒரு செயலைச் செய்யப் புகுமுன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன முதலாவது செயலைச் செய்யவேண்டியதன் அவசியம் ,விளை பயன் ,பயனுறு திறன் போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் தேவையின்றி ஒரு வேலையில் ஈடுபடுவது கால விரயமாகும்.பயனுறு திறனை வெகுவாகத் தாழ்த்திவிடும். இரண்டாவது அதைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய தகுதிகளைப் பெற முயலவேண்டும்.வழிமுறைகள் மற்றும் கால வரம்பு முக்கியமானது .காலங் கடந்து ஒரு செயலை முடிப்பது நற்பயன் அளிப்பதில்லை .செயல்களைச் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் பலம் மற்றும் பலவீனங்களை அவ்வப்போது மதிப்பீடு செய்து தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். செயலைச் செய்து முடிப்பதற்கு முழுத் தகுதி யுடையவர்களாய் இருக்கும்போது அவநம்பிக்கையும் இருப்பதில்லை மனதில் பயமும் இருப்பதில்லை




"எவர் தேவைக்கு அதிகமாகச் சம்பாதித்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையை அச்சப்பட்டுக் கொண்டே வாழ வேண்டியிருக்கும்" .

ஒரு குறிக்கோளை நிறைவேற்ற அளவற்ற செலவம் ஒருவருக்குத் தேவைப்படாது .செல்வம் சேரச் சேர அதை ஆடம்பரமாகச் செலவு செய்ய ஆரம்பித்து தவறான முறையில் செலவு செய்வதில் முடியும்.சமுதாயத்தின் ஒழுக்கம் சீர்கெட்டுப்  போவதற்கு குறிக்கோள் இல்லாமல் பொருள் சேர்த்து அதை தவறான  வழிகளில் செலவிடுவோர்களே காரணம் .சமுதாய எதிரிகளாகிவிடுவதால் அவர்கள் எப்போது அச்சப்பட்டுக் கொண்டே வாழ வேண்டிய சூழ்நிலையே  இருக்கும் .அளவுக்கு மீறி சேர்த்த பொருளை களவு போய்விடாமல் ஒளிக்கவும் அச்சப்பட வேண்டியிருக்கும் 

"சிறந்த கல்வி என்பது தேவையான விவரங்களை நமக்கு நாமே பெறுவது இல்லை. அது நம் வாழ்க்கையைச் சுற்றுச் சூழலுடன் இணைந்து கடப்பதில் அடங்கியிருக்கின்றது "
"பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டால்  நம்மைச் சுற்றியுள்ள எல்லாம் நம்மைத் தேடி வரும்"

தற்போது இருக்கின்ற அறிவையும் திறமையையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் பயன்படுத்திக் கொள்ளப் படாத அந்த அறிவையும் திற மையையும்  வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் வருவதில்லை  .கல்விக்காக வாழ்க்கையில்லை . வாழ்க்கைக்காகத்தான் கல்வி . திட்டமிட்ட வாழ்க்கைக்கு ஏற்ப செய்துகொள்ளும் மூலதனமாக  கல்வி இருந்துவிட்டால் வாழ்க்கையை இனிமையாகக் கழிக்க முடியும் . எது உனக்கு மட்டுமின்றி சமுதாயம் முழுமைக்கும் பயனும் மகிழ்ச்சியும் தரக்கூடியதாக இருக்கின்றதோ அதுவே மிகச்  சிறந்த கல்வி 

"அன்பை எப்பொழுது  வேண்டுமானாலும்  வெளிப்படுத்திக் காட்ட புறத் தடைகள்  ஏதுமில்லை என்பதால்உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காதீர்கள்"
"உலகை நேசிக்கத் தொடங்கும் போதுதான் உண்மையாக வாழத் தொடங்குகின்றோம்"

உடல் உழைப்பை விட அறிவுக்கு ஆற்றல் அதிகம்  அறிவை விட அன்பிற்கு ஆற்றல் அதிகம். அன்பை விட ஆற்றலுள்ள ஒன்றை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அறிவால் சாதிக்க முடியாததை அன்பு மிக எளிதாகச் சாதித்து விடுகின்றது .ஒருவர் தனித்தே இந்த உலகில் வாழமுடியாது . இதற்கு காரணம் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் பிறர் உதவியின்றி நாமே செய்து கொள்ள முடியாது . நம்மை மற்றவர்களோடு இணைந்து வாழத் தூண்டுவது இந்த அன்பு மட்டுமே, மனதில் வளரும் அன்பினால் இந்த உலகிலுள்ள அனைவரும் ஒருவருக்குச் சொந்தக் காரர்களாகி விடுவார்கள்.  தனி மனிதனின் இனிய வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் சமுதாயத்தின் ஒத்துழைப்பு தேவை . சமுதாயத்தைப்  புறக்கணித்த எவரும் வாழ்க்கையில் வெற்றி        காண்பதில்லை. ஒவொரு மனிதனும் அவனுக்குள் இருக்கின்ற அன்பெனும் அளவற்ற செல்வத்தால் மிகவும் மதிப்புள்ளவனாக  இருக்கின்றான் . ஆனால் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மதிப்பை உணர்வதே இல்லை.


"முயற்சி என்பது இதயத்திற்குள் மூளும் உள்ளுணர்வு அல்ல அது உன் ஆற்றலை வெளிக்கொணரக்கூடிய ஒரு   நெம்புகோல் "

ஒரு சிறிய நெம்புகோல்  ஒரு பெரிய பாறாங்கல்லை நகற்றி விடும் அது போல ஒரு சின்ன முயற்சி  ஒரு பெரிய தடையையும் அகற்றிவிடும் . இடப்பெயர்வுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் தேவைப்படுவதைப்   போலச் செயல்களின் முடிவுகளை மாற்றக்கூடிய சக்தி செய்யும் முற்சிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பர் தமிழ்ச் சான்றோர்கள்  முயற்சி என்பது அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில்  மேற்கொள்ளும்  நடை பயணம் . இருந்த இடத்திலிருந்து கொண்டே செல்ல வேண்டிய இலக்கை யாரும்  அடைந்து விட முடியாது.


"சூரியன் காணாமற் போய்விட்டது என்று கதறி அழுதால் சிந்தும் கண்ணீர் மறைப்பதால் அந்த விண்மீன்களைக் கூட க் காண முடியாது போய்விடும் "

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை இல்லை ,தடைகளை எதிர்கொண்டு வெற்றிகண்டு வாழும்  வாழ்க்கையே அது சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல. கவலையை மறந்து வாழக் கற்றுக் கொண்டவர்கள்.செய்யும் செயல்கள் எல்லாம் நினைத்தபடி வெற்றியில் முடிவதில்லை. ஒரு பெரிய பலனுக்கானகச் செய்யும் முயற்சி யில்  தோல்வியும் வரலாம் . தோல்வியால் ஏற்பட்ட இழப்பைக்  கண்டு மனம் கலங்கினால்  சிறிய பலனைக்கூட ப் பெறமுடியாது  .

Saturday, January 26, 2019

SONNATHUM SOLLAATHATHUM -SACHCHIN

"வெற்றி ,தோல்வி இரண்டிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களின் முக்கியத்துவம் சமமானவை.  வெற்றி , மகிழ்ச்சியைக் காட்டிலும், தோல்வியும் துன்பமும் கற்றுக்கொடுப்பதில் சிறந்த பேராசிரியர்களாக விளங்குகின்றன." 
  

 மிகப் பெரிய சாதனை புரிய முயற்சிக்கும் போது தோல்வியைச் சந்தித்தாலும்  அது தோல்வியல்ல.உண்மையில் அது வெற்றியின் முதல் படி .வெற்றியின் ரகசியங்கள் தோல்விகளுக்குள்  தான் புதைந்து இருக்கின்றன .தோல்வியால் துவண்டு முயற்சியை விட்டுவிடுவது தான் மெய்யான தோல்வி . வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன ஒன்று செய்ய வேண்டியத்தைச் சரியாகச் செய்வது , மற்றொன்று  செய்யக்கூடாததைச் செய்யாமல் தவிர்ப்பது. .சரியாகச் செய்து வெற்றி பெற்றவனைக் காட்டிலும் சரியாகச் செய்யாமல் தோல்வி கண்டவன் கூடுதலான அனுபவத்தைப் பெறுகின்றான். அந்த அடிப்படையில் தோல்வி கூட ஒருவருடைய முயற்சிக்கு இயற்கை கொடுக்கும்  பரிசு என்ற நினைக்க வேண்டும் .
"குறை கூறுபவர்கள் நான் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்கள் இல்லை. என்னுடைய உடல் வலிமையையும் மனத் திடமும் எத்தகையது  என்பதை அவர்கள் அறிவார்களா ? குறையும் நிறையும் ஒருவரை மற்றவருடன் ஒப்பிடும் போதுதான் தோன்றுகின்றது. .அதனால்  ஒப்பிட்டுப்பார்ப்பதை விட்டுவிட வேண்டும்"
"பந்து என்னை நோக்கி வரும்போது அதை மிகக் குறுகிய நேரத்தில் மதிப்பிட்டு விளையாட வேண்டும். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றார்கள் என்பதைப் பற்றிப் நான் நினைத்துக் கொண்டிருக்க முடியாது .என்னுடைய செயலை என் உள்ளுணர்வுகளுக்கு அர்ப்பணித்து விடுவேன். என் அக மனத்திற்குத் தெரியும் நான் இனி என்ன செய்யவேண்டும் என்பது . நான் என்னை  அப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றேன் ."
திறமை உண்மையானதாக இருந்தால்  மனதில் நம்பிக்கை இயல்பாக  இருக்கும். ஒவ்வொருவரும் சுயசார்புடன் செயல்படுவதற்கு இந்தத் தன்னம்பிக்கை தேவை. நம்பிக்கை இருக்கும் போதுதான் வழிமுறைகள்  எளிதாகக் கிடைக்கின்றன  வழிகாட்டல்களும்  தாமாகத் தோன்றுகின்றன. முயற்சி செய்வதற்கு வேண்டிய ஆற்றலையும் , வெற்றி பெறுவதற்கு வேண்டிய திறமையையும் தருகின்றது 

Friday, January 25, 2019

sonnathum sollaathathum

சச்சின் டெண்டுல்கர் எழுதிய  "  Playing it my way " என்ற நூலில்  முன்னேறத்  துடிக்கும் இளைஞர்களுக்கு  பல நல்ல கருத்துக்களைக் கூறியுள்ளார் .


"உன் மீது பிறர் தூக்கி எறியும் கற்களை படிக்கல்லாக மாற்றிக் கொள்ள உன்னால் முடியும். "

பொதுவாக ஒருவரது வளர்ச்சியை விரும்பாதவர்கள் தடைப்படுத்துவதற்காக எதிர்ச் செயல்களை செய்வார்கள் . உற்சாகத்தை மட்டுப்படுத்துவதற்காக குறை கூறுவார்கள்.  போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் துணிந்து செல் என்று சான்றோர்கள் கூறுவார்கள் . குறை சொல்லுவோர் கருத்துக்களையெல்லாம்  செவிடராய் இருந்துகேட்டால் ,ஊமையாய் இருந்து தொடர்ந்து செயலைச் செய்தால்  எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. கடிய சொற்களால் மனம் துவண்டு போனால்  செய்யப்படும் செயல்கள் செயல்களாய் இருப்பதில்லை .குறை என்று நினைப்பது மனம்தான் நிறை என்று நினைப்பதும் அதே மனம் தான் . குறைகளையெல்லாம் நிறைகளாகத் திருத்தி நினைக்கத் தெரிந்தால் வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதையில்  வீழ்ச்சியேயில்லை. மனமிருந்தும் மனப்பக்குவம் இல்லாவிட்டால்  சொல் கூட கல்லைவிட பலமாகத் தாக்கும்

"கனவுகள் ஒரு நாள் நிச்சியமாக நனவாகும் . கொஞ்சம் கால தாமதமாகிறது  என்பதற்காக  கனவு காண்பதை விட்டு விடாதீர்கள் . "

கனவுகள் முன்னேறத் துடிக்கும் மனிதர்களின் சுயவழிகாட்டி . உள்ளுணர்வைத் தூண்டிக்கொண்டே இருக்கும் -விழித்திருக்கும் போது செயல்களாய் ,தூங்கிக் கொண்டிருக்கும் போது கனவுகளாய்.முன்னேற்றம் என்பது ஒரு திட்டம். அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுப்பது சுய விருப்பம். முயற்சிகள் என்பது மனதின் ஒத்துழைப்பு . இந்த கூட்டணி சந்திக்கும் போது கனவுகள் மலரும்.  கனவுகள் உறங்கும் போது இரவில் பூக்கும் வண்ணப் பூக்கள் .   செய்யவேண்டிய செயல்கள் நிறைய இருக்கு எழுந்திரு என்று அதன் நறுமணம் உன்னை எழுப்பிவிடுவதற்காக பூக்கின்ற  பூக்கள் .

" உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்று விளையாடுவவதற்குப் பின்னால்   ஒரு நெடிய வழிமுறை உள்ளது.  50 வது மாடிக்கு நேரிடையாகத் தாவிக்குதிக்கும் முயற்சியை  விட்டுவிட்டு அடித்தளத்திலிருந்து தொடங்கி முன்னேறிச் செல்ல வேண்டும் ."       

எதையும் நினைத்த மாத்திரத்தில்  அடைய முடியாது. எதை அடைய விரும்புகின்றோமோ அதை அடைய முதலில் நம்மைத் தகுதியுடையவர்களாக்கிக் கொள்ள வேண்டும் ,தகுதியின்மையால் மேற்கொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன .  எந்தத் துறையில் முன்னேற விரும்பினாலும் முதலில் தகுதியுடையவனாக இருக்க வேண்டும். அந்தத் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபட்டால் வளர்ச்சி யில் தடை ஏற்படுவதற்கு வழியில்லை .
 கணப்பொழுதில் ஒரு பெரிய மாட மாளிகையைக் கட்டுவதும். கையை அசைத்து தங்கக் காசுகளைக் கொட்டுவதும், ,அறுசுவை உணவைப் பரிமாறுவதும்,  இயற்கைக்கு  அப்பாற்பட்ட  மந்திர தந்திரங்களுக்கு  வேண்டுமானால் இயலுவதாக இருக்கலாம்.  ஆற்றலின்றி ஒருநாளும் பொருட்கள் விளைவதில்லை என்பது இயற்கையின் மாறாத விதிகளில் ஒன்று என்பதை மறந்தவர்கள் மட்டுமே குறுக்கு வழியில் முன்னேற வழி தேடிக்கொண்டிருப்பார்கள்  .



Saturday, August 18, 2018

Vethith Thanimangal- Bromine


புரோமின்
கண்டுபிடிப்பு
1825 -ல் ஜெர்மனி நாட்டின் ஹெய்டெல்  பெர்க் பல்கலைக் கழகத்தில்  காரல் ஜேகப் லோவிக் ( Carl Jacob Lowig ) என்ற மாணவர் ஒரு நீரூற்றிலுள்ள நீரில் சேர்ந்துள்ள உப்புக்கள் சேர்மானம் பற்றி ஆராய்ந்தார். அக்கரைசல்  வழி குளோரினைச் செலுத்த  அது உப்பு நீருக்குச் செந்நிற மூட்டியது. ஈதர் மூலம் உப்பு நீருக்கு நிறமூட்டிய பொருளைத் தனித்துப் பிரிக்க , அது செம்பழுப்பு நிறத்தில்   நீர்மமாக இருந்தது . அதுவே பிற்பாடு புரோமின் என அழைக்கப்பட்டது . எனினும் தூய்மையான புரோமினைப் பெற்று  அதன் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளை முழுமையாகத் தெரிவிக்காததால்  அதைக் கண்டுபிடித்த பெருமை  அவருக்கு கிடைக்காமல் போயிற்று
1826  ல் பிரான்ஸ் நாட்டின் பாலார்டு(A.J.Balard)  என்ற வேதியல் அறிஞர்   புரோமினைக்  கண்டுபிடித்தார் . ஒரு குடுவையில் பொட்டாசியம் புரோமைடு  , மாங்கனீஸ் டை ஆக்சைடு மற்றும் நீர்த்த  கந்தக அமிலம் இவற்றை இட்டு சூடுபடுத்தி எழும் கருஞ்சிவப்பு ஆவியைக் குளிர்வித்து நீர்மமாக்கி புரோமினைப் பெறலாம். பாலார்டு இதற்கு முறைடு (Muride) எனப் பெயரிட்டார் . இலத்தீன் மொழியில் முறியா என்றால் உவர் நீர் எனப் பொருள் . அறை வெப்ப நிலையில் நீர்ம நிலையில் இருக்கும் ஒரே அலோகம் புரோமினாகும். பின்னர் வேதியியலார்  இதற்கு கிரேக்க  மொழியில் கவிச்சி  நாற்றமுடைய  என்ற பொருள்படும் புரோமோஸ் என்ற சொல்லிலிருந்து   புரோமின்    என்ற பெயரைத் தேர்வு செய்தனர். தனிம புரோமின் வினையில் தீவிரமாக இருப்பதால் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை பொதுவாக உப்புக்களில் கூட்டுப்பொருளாக இணைத்திருக்கின்றது. கடலில் குளோரினை விட புரோமின் 300 மடங்கு குறைவாக உள்ளது.
பண்புகள்
இதன் அணுவெண் 35 அணு நிறை 79. . கருங்சிவப்பு நிறமான இதன் அடர்த்தி 3120 கிகி /.மீ . உருகு நிலை 265 85 K கொதிநிலை 331 .4  K  ஆக உள்ளன . அறை வெப்பநிலையிலேயே  ஆவியாகி பழுப்பு  நிற    ஆவியாக  வெளியேறுகின்றது புரோமின் வளிமம் காற்றை  விட அடர்த்தி மிக்கது என்பதால் இது வளி மண்டலத்தில் புவிப்பரப்பை ஒட்டிய அடி நிலையில் நிலைகொள்கின்றது . வேதியல் குறியீடு Br . ஹாலஜன் குடும்பத்தில் மூன்றாவது நிறை மிக்க தனிமமாகும். இதன் வேதியல் பண்புகள் ஏறக்குறைய குளோரின் மற்றும் ஐயோடின் இவைகளுக்கு  இடைப்பட்டதாக இருக்கின்றது.  
உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் வேதிப் பொருட்களுள் புரோமினும் ஒன்று,. குளோரின் போல இதன் ஆவி உடனடியாக மூக்கையும் , தொண்டையையும் பாதிக்கின்றது கண்ணில் எரிச்சல் ஏற்படுகின்றது.தோலில்  பட்டால் மஞ்சள் நிறத்தில் தீச்சுட்ட புண்னை  ஏற்படுத்துகின்றது . இது போன்ற விபத்திற்கு ,அவ்விடத்தை உடனடியாக தூய நீரால் கழுவி சோடியம் பை  கார்பனேட்டு  கரைசலால் சுத்தப்படுத்தி பின்னர் வாசிலின் தடவி புற ஊடகத் தடுப்பானாக ஒரு கவசக் காப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்
புரோமின் ஓரளவு நீரில் கரைந்து புரோமின் நீரை (bromine water) உண்டாக்குகின்றது . இது குளோரின் நீர் போலன்றி நிலையாக இருக்கின்றது .கார்பன் டை சல்பைடு ,குளோரோபாம்
போன்றவற்றில் உடனடியாகக் கரைந்து ஆரஞ்சு-சிவப்பு நிற  நீர்மத்தை உண்டாக்குகின்றது
குளோரின் போல புரோமினும் வினையூக்கமிக்க தனிமமாகும் .பல தனிமங்களுடன் இணைந்து புரோமைட்டை  உண்டாக்குகின்றது .பாஸ்பரஸ் ,பொட்டாசியம்  புரோமின் ஆவியில் வெடிப்புடன் எரிகின்றன. பொடி செய்யப்பட்ட ஆர்செனிக்  மற்றும் ஆண்டிமோனி  வெடிப்புடன் எரிகின்றன .சூடு படுத்திய நிலையில் ஹைட்ரஜனும் புரோமினும் இணைகின்றன. புரோமின் ஒரு வலுவான வெளுப்பூட்டியாகும் . அதனால் ஸ்டார்ச்சை மஞ்சள் நிறமாக நிறமாற்றம் செய்கின்றது. இது ஆக்சிஜனேற்றம்  செய்யும் காரணியாகவும் விளங்குகின்றது.
பயன்கள்  
புரோமினின் முக்கியமான பயன் எத்திலீன் டை புரோமைடு ஆகும் இதை ஈதைல் பெட்ரோலில் கலந்து அதிலுள்ள ஈயத்தை ஈய புரோமைடாக ஆவியாக்கி வெளியேற்றுகின்றார்கள். இப்படிச் செய்யாவிட்டால் பொறித் தக்கையில் படிந்து அதனை விரைவில் செயலிழக்கச் செய்துவிடும் . இது தொற்றுத் தடை மருந்தாகவும் பயன்படுகின்றது. புகை உண்டாக்கியாகவும். நீர் சுத்திகரிப்பு முறையில் கிருமி நாசினியாகவும் .சாயம், மருந்துப் பொருட்கள் , ஒளிப்படத் தொழிலுக்குத் தேவையான வெள்ளி புரோமைடு போன்ற வேதிப் பொருட்களைத் தயாரிக்க  புரோமின்  நன்மை அளிக்கின்றது. விளை நிலங்களில் பயிரினங்களுக்கு   புரோமின் கூட்டுப் பொருட்கள்  ஒரு   பூச்சி கொல்லி மருந்தாகப் பயன்படுகின்றது.நீச்சல்  குளத்தில் பாக்டீரியா  கிருமிகளைக் கொல்ல புரோமின் பயன்படுகின்றது குளோரின் போலன்றி புரோமின்  நிலைத்து நின்று செயல்படுகின்றது
 பொட்டாசியம் புரோமைடு மயக்க மூட்டியாகப் பயன்படுத்தப் படுகின்றது எனினும்  
இன்றைக்கு குளோரல் ஹைட்ரேட்  (chloral  hydrate ) மற்றும் பார்ப்பிச்சுரேட்டுகள்  (barbiturates ) மாற்றுப் பொருளாகப் பயனில் இருக்கின்றன.  வளி மண்டல அழுத்தத்தைவிட 55  GPa  வளி அழுத்தத்தில் புரோமின் உலோகமாக நிலை மாறுகின்றது  இயற்கை புரோமினில் 79 , 81  அணு நிறைமங்கள் மட்டுமே உள்ளன. இதில் Br 79 -  51  % யும் Br 81-  49 % யும் செழுமைக்குப் பங்களிப்புச் செய்கின்றன.   இவை அணுக்கரு காந்த ஒத்ததிர்வு மூலம் ஸ்கேன் செய்யும் நடைமுறையில் பயன்படுத்த அனுகூலமுள்ளதாக இருக்கின்றன . உலோகங்களை புரோமினேற்றம் செய்துவிட்டால் அவை குளோரினேற்றத்தால்  ஏற்படுவதை விட தாழ்ந்த ஆக்சிகரண நிலையில் இருக்கின்றன.  
புரோமின் கூட்டுப் பொருள் எரிக்கப்படும் போது ஹைட்ரோ புரோமிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகின்றது இது தீயின் ஆக்ஸிகரண வழி முறையில் தடையை ஏற்படுத்தி தீயை மட்டுப்படுத்துகிறது  பாலிமர் , நெகிழ்மம் போன்ற உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் வழிமுறையில் புரோமின் பயன்படுகின்றது. நீர் மூழ்கிக் கப்பல், விமானம் , விண் கலம்  போன்ற புறத்தொடர்பற்ற தனித்த அமைப்புகளில் தீயணைப்புப் பொருளாக பயன்படுகின்றது
புரோமின் நீர் என்பது ஈரணு புரோமின்  ஆகும். (Br2)  மிகவும் வலுவான ஆக்ஜிசனேற்றியாகும் இது வேதியல் ஆய்வுகளில் புரோமினோடு வினைபுரிய வல்ல வேதிப்பொருட்களை இனமறியப் பயன்படுகின்றது