பகவத் கீதை- என் பார்வையில்
மனமே மனிதன்
மனமே மனிதனை வரையறுக்கின்றது
மனம் எப்படியோ மனிதனும் அப்படியே .
மனத்தின் புறத்தோற்றமே மனிதன்
மனத்தை வளர்ப்பவன் மனிதன்,மனிதனை வளர்ப்பது மனம்
நல்ல மனம் கொண்டவன் வாழ்க்கையில் நல்லவனாக வாழ்கிறான் .இறந்த பின்பும் உலகில் வாழ்வது நல்ல மனம் படைத்தவர்கள் மட்டுமே. தீய மனம் கொண்டவன் தீயவனாக வாழ்கிறான். வாழும்போதே பிணமாக வாழ்வது இவர்களே.
மனிதமனம்,மனத்தின் இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டக் கூடிய ஒரு நூல் இருக்கின்றது என்றால் அது பகவத் கீதைத்தான். எந்த உளவியல் நூலும் அதற்கு ஈடாவதில்லை. மனம் உருவமில்லாதது ஒளியைக் காட்டிலும் வேகமாகச் கடந்து செல்லக் கூடியது கற்பனையும்
சிந்திக்கும் ஆற்றலும் நம்பமுடியாத அளவிற்கு எல்லையில்லாதது. இதை யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குளே செய்து முடிக்க முடிவதால் மனம் எல்லோருக்கும் ஒரு ரகசிய நண்பனாக இருந்து கொண்டு மனிதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுகின்றது மனத்தை வென்று விட்டால் மனிதன் தன் வாழ்க்கையை வென்று விட்ட மாதிரிதான். ஆனால் மனிதன் தன் மனத்தைப் புரிந்துகொள்ளவே வாழ்க்கையில் பாதியைப் போக்கிவிடுகின்றான். அதன் பிறகு மனதின் அடிமையாகவே வாழ்க்கையைக் கழிக்கின்றான். வாழும் போது மனம் மனிதனுக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றதா அல்லது மனிதன் மனதிற்குக் கட்டுப்பட்டு இருக்கின்றானா என்பதை பொருத்தே அவனது வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது.
மனத்தை எப்படி வெல்லலாம் என்பதை இனி பகவத் கீதையின் மொழிகளைக் கொண்டு அறிய முற்படுவோம்.
No comments:
Post a Comment