Sunday, November 3, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்- புரோமீதியம் (Promethium)-கண்டுபிடிப்பு 
1902 ல் பிரான்னர் (Branner) நியோடைமியத்திற்கும் சமேரியத்திற்கும் இடையில் ஒரு தனிமம் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை வெளியிட்டார். இது 1914 ல் மோஸ்லே(Moseley) என்ற விஞ்ஞானியால் உறுதி செய்யப்பட்டது. 1941 ல் அமெரிக்காவில் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக் கத்தில் நியோடைமியத்தையும் பாரசியோடைமியத்தையும் நியூட்ரான்,டியூட்ரான்,ஆல்பாத்துகளால் தாக்கி அணுக்கரு வினைகளைத் தூண்டி தனிம மாற்றங்களைச் செய்து பார்த்தனர். வினை விளைவுப் பொருள் கதிரியக்கமுடையதாக இருந்தது. அதன் அணு வெண் 61 என்பதை 1942 ல் வூ(Wu), சாக்ரே (E.Segre) மற்றும் பெத்தி(Bethe) போன்ற இயற்பியல் அறிர்கள் நிரூபித்தனர். எனினும் இதைப் பிறவற்றிலிருந்து தனித்துப் பிரித்தெடுப்பது சிக்கலாக இருந்தது. 1945 ல் அயனிப் பரிமாற்ற நிற ஆய்வியல்(Ion exchange chromatography) மூலம் இதை வேதியியல் அடிப்படையில் இனமறிந்தனர்
பூமியில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையாவும் பயனற்றுப் போயின. பூமியின் மேலோட்டுப் பகுதியில் இந்தத் தனிமம் இல்லை என்றே முடிவு செய்தனர். அதற்குக் கராணம் இது லாந்தனம் தொகுதியில் இருக்கும் ஒரே ஒரு கதிரியக்கத் தனிமமாகும். மேலும் இதன் அரை வாழ்வு மிகவும் குறைந்தது .17.7 ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர். புரோமீதியத்தை ஆன்ட்ரோமெடா என்ற அண்டத்திலுள்ள HR 465 என்ற விண்மீனின் நிறமாலையில் இனமறிந்துள்ளனர். இது அந்த  விண்மீனின் புறப்பரப்பில் அண்மையில் உற்பத்தியாகியிருக்க வேண்டும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பண்புகள்
Pm என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய  புரோமீதியத்தியத்தின் அணு வெண் 61. அதன் அணுஎடை 147 இதன் ருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1273 K, 2973 K ஆகும். இதன் அணு எண்மங்களை (isotopes) உற்பத்தி செய்து ஆராய்ந்ததில் அணு எடை 141 முதல் 154 வரை உடைய எதுவும் நிலையாக இல்லை என்பதை அறிந்து கொண்டனர்கதிரியக்கத்தால் சிதைவுற்று ழிகின்றன.புரோமீதியம்-147 ன் அரை வாழ்வு 2.5 ஆண்டுகள் இது ஒரு பீட்டாக் கதிர் உமிழ்வான் . புரோமீதியம்-145 ன் அரை வாழ்வு 17.7 ஆண்டுகள்.இதன் கதிரியக்கம் 940 கியூரி/கிராம் என்ற அளவில் உள்ளது. புரோமீதியத்தின் கதிரியக்கத்தால் அதன் உப்புக்கள் இருளில் கூட வெளிர் நீம்,பச்சை நிறங்களில் ஒளிர்கின்றன. புராணங்களின் படி புரோமீதித்தியாஸ் என்பவர் சொர்க்கத்திலிருந்து நெருப்பைத் திருடி வந்தவர்.அதனால் இந்த மூலகம் அவர் பெயரைத் தத்தெடுத்துக் கொண்டது.
பயன்கள்

பொருட்களின் தடிப்பைத் மதிப்பிடுவதற்கு இது உமிழும் பீட்டாக் கதிர் பயன்படுகின்றதுபுரோமீதியம்-147 பீட்டாச் சிதைவாக்கத்தை  மட்டுமே கொண்டுள்ளது என்பதால் அதன் இப்பயன் சிறப்பாக உள்ளது. ஒளிர்மைப் (Phosphor) பொருட்களினால் உட்கிரகிக்கப்பட்டு ஒளியைச் சிந்துவதால் சமிக்கைகளால் செயல்படும் ஆய்ககருவிகளில் பயன்படுகின்றது. அணுமின் கலத்தில் இதைப் பயன்படுத்துகின்றார்கள்  அணுமின் கலத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குப்  பயன் தரவல்லது.இதில் ஒளியை ஒளிமின்கலத்தினால் உட்கவர்ந்து மின்சாரமாக மாற்றுகின்றார்கள்.கைக்கு அடக்கமான எக்ஸ் கதிர் அமைப்பை இதனால் மைத்துக் கொள்ள முடிகின்றது விண்வெளி ஆய்வகங்கள் ,விண்வெளி டங்கள் ,செயற்கைக் கோள்களில் இது வெப்ப மூலமாகப் பயன்படுத்தப் படுகின்றது. அதன் மூலம் விண்வெளி ஆய்கருவிகளுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றார்கள்.

No comments:

Post a Comment