சிறு கதை
நாட்டின் ஒரு
மூலையில் இருந்தாலும்
அந்தக் கிராமம்
எப்போதும்
செய்தித்தாள்களில் இடம் பெறத் தவறுவதில்லை. தீண்டாமை
தீவிரமாக அங்கு தாண்டவமாடியதால் அரசியல் வாதிகளுக்கும்,ஊடகங்களுக்கும் வெறும் வாய்க்குக் கிடைத்த அவல்
போலானது.தீண்டத்தகாதவர்கள்
என்று யாருமில்லை
என்று சுதந்திரம்
பெற்ற நாளிலிருந்து
சொல்லப்பட்டாலும் அது
இன்னும் உயிர்ப்புடன்
வாழ்ந்து கொண்டிருக்கின்றது
என்பதற்கு அந்தக்
கிராமம் இருந்தது.
மேல் ஜாதியினருக்கு கீழ் ஜாதியினர் ஆகாது.ஒரு ஜாதி மக்கள்
குடியிருக்கும் தெருவிற்குள் மற்றொரு ஜாதியினர் வரக்கூடாது.மேல் ஜாதியினர்க்கு தனி டீக் கடை,கீழ் ஜாதியினருக்கு தனி டீக் கடை.குடி நீர் பைப்புகள் வெவ்வேறு பள்ளிகளில் பிள்ளைகள் உட்காருவதற்கு தனி இடங்கள்.யாரும் யாரோடும் பேசக் கூடாது,விளையாடக் கூடாது, என எவ்வளவோ கட்டுப்பாடுகள்.
கட்டுப்பாடுகள் மீறப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் கிராமம் ஒரு கொலைக்களமாக உருவெடுக்கும்.சுதந்திரம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்த்த பகைமையை வழித் தோன்றல்களால் அழிக்க முடியவில்லை. அந்தக்
கிராமத்தில் இரு ஜாதியினருக்கும் இடையே
எப்போதும்
கைகலப்பும் சண்டையும்தான்.
ரத்தம்
சிந்தாத
நாளில்லை. பொழுது
விடிந்து பொழுது
சாய்வதற்குள் ஒரு
கொலையாவது நடப்பது
வாடிக்கை.
ஒரு நாள்
அடை மழை.
அன்று மேல்
ஜாதியினரின் தலைவரும்,
கீழ்
ஜாதியினரின் தலைவரும்
ஒரே நாளில்
இறந்து போனார்கள்.
இருவரின் உடலும்
மயானத்தில் அடுத்தடுத்த
கட்டத்தளத்தில் எரியூட்டப்
படுகின்றது. இரு கட்டத்தளத்திலிருந்தும் எரிந்து
வெளி வந்த
புகை ஒன்று
சேர்ந்து எல்லோரும்
பார்க்கும் வண்ணம்
மேலெழுந்து பரவிச்
சென்றது. நிலத்தில்
ஒன்று சேராமல்
இருந்த இரு
உயிர்ப் பொருட்கள் உயிரில்லாப் பொருளானபின் வானத்தில் ஒன்று சேர்ந்து கொண்டு கை அசைத்தது போலிருந்தது. வாழும் போது நல்ல வழிகாட்டியாக வாழாதவர்கள் இறந்த
பின் வானத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது போல இருந்தது. இறந்து
புகையாகக் காற்றில்
கலக்கும் போது
எல்லோருக்கும் வழிகாட்டலை
அறிவிப்பது போல மேலும்
மேலும் உயர்ந்து
சென்றார்கள்.அந்த எண்ணம்தான் அவர்களை இன்னும் மேலே உயர அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment