Thursday, November 7, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்
செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழக் கூடிய அனுகூலமான  சூழ்நிலை இருக்கிறதா? அங்கே மனிதர்களைக் குடியேற்ற முடியுமா? என்பதை ஆராய்வதற்கு 450 கோடி செலவில் ராக்கெட் ஒன்றை இந்தியா
வியிருக்கிறது. இத்தகை உயர் தொழில் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக இருப்பது பெருமை தரக்கூடியதாக இருந்தாலும் பல அடிப்படை விஷயங்களில் நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கின்றோம் என்பது கவலை தரக்கூடிய தாக இருக்கின்றது
படிப்பறிவின்மை 50 சதவீதம் .பள்ளிக்கூடங்களில் போதிய அடிப்படை வசதி இன்மை. போதிய ஆசிரியர்கள் இன்மை ,
சத்துணவு இன்மை,குடிமக்களுக்கு உணவுப் பொருட்கள் முழுமையாக இல்லாமை,சாலை வசதிகள் ,பாலங்கள் சிறப்பாக இல்லாமை,ஸ் மற்றும் ரயில் வண்டிகளில் சுத்தமின்மை.குடிநீர் இன்மை,குடிகாரர்களால் ஏற்படும் ஒழுக்கமின்மை குப்பை மற்றும் கழிவுகளை முறையாக அகற்ற முடியாமை,ஊழலை ஒழிக்க முடியாமை, கொலை, கொள்ளை
கற்பழிப்பு போன் குற்றங்களை ஒடுக்க முடியாமை, செங்கோலாட்சி இல்லாமை,  இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். எதைச் சொல்லுவது எதை விடுவது. வாழ்வது தான் வாழ்க்கை, வாழும் வரை வாழ்க்கை என்ற நிலையே நீடித்து தொடர்ந்து வரும்போது செவ்வாய்க் கோள் பயணம் இந்திய மக்களுக்கு கானல் நீர்தான் பழைய சிறுமைகளை ஒரு புதிய  பெருமையைக் கொண்டு மறைத்துவிடும் முயற்சியாக இருப்பதால் இதனால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.


காட்டு மாடுகளும், வரிக் குதிரைகளும் நைல் நதியின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல ஆபத்துகள் நிறைந்த ஆற்றைக் கடந்து செல்லதான் வேண்டும் என்பது இயற்கை என்றோ எழுதிவைத்த கட்டளை. இது கோள் விட்டு கோள் செல்ல நினைக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும். ன்று நினைத்து மாதானம் கொள்ள வேண்டியதுதான்.

No comments:

Post a Comment