சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
இணைந்து படிப்பதை பெரும்பலான மாணவர்கள் முழுமனதுடன் மேற்கொள்வதில்லை.அதற்குக் காரணம் தனக்குத் தெரிந்தது நண்பனுக்கும் தெரிந்து தேர்வில் தன்னைக்காட்டிலும் அதிக மதிப்பெண் வாங்கி விடுவான் என்ற பயம் உள்மனதில் ஓயாது ஒலித்துக் கொண்டிருப்பதுதான். இப்படி பள்ளிப் பருவத்தில் வளர்த்துக் கொள்ளும் பொறாமை எண்ணங்கள் ,பிற்காலத்தில் சமுதாயாயத்தில் வாழும் போது தானொரு மதிப்புள்ளவனாக இருப்பதை விட எல்லோரையும் விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையை வளர்த்துவிடுகின்றன. இதனால் புறநிலையில் பிறருடன் ஒன்று சேர்ந்து இருந்தாலும் அவர்களுடன் அகநிலையில் ஒற்றுமையாக இணைந்து ஒத்துழைக்கும் மனப்பான்மை இல்லாது போகின்றது .
பேச்சுப் போட்டி . கட்டுரைப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு முறையும் பங்கு பெறுங்கள். ஓவியம் வரைதல், பழுது நீக்குதல் , கலைப் பொருள் சேகரித்தல்,சதுரங்கம் போன்ற உள்ளரங்க விளையாட்டுக்களில் ஒரு சிலவற்றில் ஆர்வம் கொள்ளுங்கள். துணைத் திறமைகளை வளர்த்துக் கொள்ள இது உதவும் . துணைத் திறமைகளை வளர்த்துக் கொள்வது , பயனுள்ள பொழுது போக்கு மட்டுமில்லை, மாற்றங்களால் தினம் மாறிக்கொண்டே இருக்கும் சமுதாயத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள நம்பிக்கைக்கு உகந்த நம்பிக்கையும் அளிக்கும். எனினும் துணைத் திறமைகளில் கொள்ளும் ஈடுபாடு ,சமுதாயத்தில் வாழ்வதற்கான அடிப்படை ஒழுக்கங்களை கற்பிக்கும் கல்வியை மட்டுப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணைத் திறமைக்குள்ளே தன் எதிர்கால வாழ்க்கை இருக்கின்றது என்ற உறுதிப்பாடு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட வர்கள் மட்டும் துணைத் திறமைகளில் அதிக ஈடுபாடு காட்டலாம். எனினும் முதன்மைத் திறமையோடு துணைத் திறமையையும் வளர்த்துக் கொள்வதே இனமறியாத இழப்பிற்கு வாய்ப்பளிக்காத பாதுகாப்பானது.
கல்வியை முழுமையாக முடிக்கும் வரை துணைத்திறமைகளினால் அமையும் வாழ்க்கையைத் தொடங்கி விடாதீர்கள். ஏனெனில் துணைத்திறமைகளைக் காட்டிலும் உண்மையான உயர் கல்வி கூடுதலான பயன்களைத் தரவல்லது , பலருக்கும் உயர்வைத் தரக்கூடியது .

No comments:
Post a Comment