வாழ்க்கையின் பயனுறுதிறன்
உங்கள் வாழ்க்கையின் பயனுறு திறனை என்றைக்காவது கணக்கிட்டுப் பார்த்தீர்களா ? கணக்கிட்டு அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் நம்முடைய வாழ்க்கையின் பயனுறு திறனை அதிகரித்துக் கொள்ளும் ஆர்வத்தில் சில முயற்சிகளையாவது மேற்கொள்வோம். ஒருவருடைய வாழ்க்கையின் பயனுறுதிறன் என்பது அவர் வாழும் சமுதாயத்திற்கும் , உலக நலனுக்கும் பயன்தரும் காலத்திற்கும் ,வாழ் நாளுக்கும் உள்ள தகவாகும் , புகழ் பெற்ற எல்லோரின் பயனுறுதிறன் சராசரி மதிப்பை விட அதிகமாக இருப்பதைக் காண முடிகின்றது. அதாவது ஒரு மனிதன் இறந்த பின்பும் அழியாப் புகழுடையவனாக இருக்க விரும்பினால் அவன் தன்னுடைய பயனுறுதிறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதைத்தவிர மாற்று வழிகள் ஏதுமில்லை .
80 ஆண்டுகள் வாழும் ஒரு சராசரி மனிதனின் பயனுறுதிறனை கணக்கிடுவோம். '
குழந்தைப் பருவத்தில் 5 ஆண்டுகளும் , முதுமைப் பருவத்தில் 10 ஆண்டுகளும் அவர்களுக்கு அவர்களே உதவி செய்து கொள்ள முடியாததால் பிறர் தான் உதவ வேண்டும் .கல்வி கற்கும் காலத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக திறமைகளை வளர்த்துக் கொள்வது கழிந்து விடுகின்றது . திருமணம் , திருவிழாக்கள் , வீட்டு விசேடங்கள் .உல்லாசப் பயணங்கள், உடல் நல க் குறைவு என 10 ஆண்டுகள் கழிந்து விடுகின்றன .சமுதாயத் சிந்தனையை மேற்கொள்வதற்கு கிடைக்கும் காலம் 40 ஆண்டுகள் மட்டுமே. அதாவது 40 x 365 x 24 மணிகள் .
இதில் ஒவ்வொருநாளும் தூக்கத்திற்கு 8 மணி நேரமும் , காலைக் கடன் 2 மணி நேரமும். உணவு சாப்பிடுதல் , காபி ,தேநீர் அருந்துதல், 2 மணி நேரமும் ஆடை அலகாரம் 1 மணி நேரமும் , தொலைக்க காட்சி, செல் போன் 3 மணி நேரமும் , பணி நேரத்தில் அரட்டை 2 மணி நேரமும் , கோயில் ,நடைப் பயிற்சி , விளையாட்டு ,வெட்டிப் பொழுது 2 மணி நேரமும் என மொத்தம் 20 மணி நேரத்தை செலவழிக்கத் தயக்க காட்டுவதில்லை. சமுதாயத்திற்குப் பயனுள்ளவாறு செலவழிக்கக் கிடைக்குக் நேரம் 40 x 365 x 4. ஊழல் ,லஞ்சம் ,காலங் கடத்துதல் போன்ற காரணங்களினால் பலர் செய்யும் சமுதாயப் பணிகளைக் கூட மக்களுக்குப் பயனுள்ளவாறு செய்வதில்லை . இதனால் பயனுறு காலம் இன்னும் குறையவே இருக்கும் எனலாம் .இக்கணக்கீட்டின்படி 80 ஆண்டுகாலம் வாழும் ஒருவரின் பயனுறுதிறன் [ (40 x 365 x 4)/ (80 x 365 x 24)] x 100 = 8.33 % பயனுறுதிறனை அதிகரிக்க கூடுதலாகத் தூங்கும் நேரத்தையும், ஒவ்வொருநாளும் வீணாகக் கழிக்கும் நேரத்தையும் குறைத்துக் கொள்வார்கள் . கிடைக்கும் நேரத்தை எவ்வளவு பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தே ஒருவருடைய வாழ்க்கையின் பயனுறுதிறன் அமையும்.

No comments:
Post a Comment