சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
ஓய்வு நேரங்களில் புரிதலை மேம்படுத்த கல்வி தேடுதலை யோ அல்லது சுய திறமையை வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும் பயனுள்ள செயலையோ செய்யவேண்டும் . இலக்கை முடிவு செய்யாதவர்கள் மட்டுமே வேலை செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓய்வெடுத்துக் கொள்வார்கள் .இலக்கைச் சரியாக இறுதி செய்து கொண்டு அதை அடைய முயற்சி மேற்கொண்டவர்களுக்கு கிடைக்கும் நேரம் போதாமலிருக்கும் . நம் முன்னோர்கள் ஓய்வு நாட்களில் சும்மா இருக்க வில்லை. கோயில் ,குளங்களைக் கட்டினார்கள், சமுதாய நல்லிணக்கத்திற்காக ஆண்டுதோறும் திருவிழாக்களை ஏற்படுத்தி நல்லுறவை வளர்த்துக் கொண்டார்கள் , சிலைகளையும் சிற்பங்களையும் செதுக்கினார்கள் , வீர விளையாட்டுகளில் உடல் வலிமையை வளப்படுத்திக் கொண்டார்கள் , ஏடுகளில் சிந்தனைகளை இலக்கிய வரிகளாக எழுதி வைத்தார்கள் .
சும்மா இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அது சோம்பேறித்தனத்தை வளர்த்து விடும் . சும்மா இருக்கும் போது படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சி மேற்கொள்வது பயனுள்ளது.விடுமுறை நாட்களில் பிற மொழிப் பயிற்சி,இசைக்கருவிகளில் பயிற்சி, மேடைப்பேச்சு பேசுதல் ,கதை , கவிதை எழுதுதல் , உள்ளரங்க மற்றும் விளையாட்டுத் திடலில் விருப்பமான விளையாட்டுக்களில் பயிற்சி , கைவினைப் பொருட்களைத் தயாரித்தல் ,ஓவியம் வரைதல், கலைப் பொருட்கள், தபால் தலை , பழைய நாணயங்கள் போன்றவற்றைச் சேகரித்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
புரிதலை மேம்படுத்த அதிகம் நூல்களைப் படிக்க வேண்டும் . இதற்க்கு பள்ளிகளில் உள்ள நூலகங்களை ப் பயன்டுத்திக் கொள்ள இருக்கும் வாய்ப்பை விட்டு விடக் கூடாது.நூல்கள் வாசிப்பதை நேசிக்க வேண்டும் என்று சாற்றோர்கள் கூறுவார்கள் . நன்நூல்கள் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை , நல்லாசிரியருமாகும் .

No comments:
Post a Comment