ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் நாம் இயற்கையால் சுட்டிக்காட்டப்படும் ஓர் உண்மையை இன்னும் உணராமலேயே இருக்கின்றோம்..ஒன்றின் வளர்ச்சியில் ஆக்கத்திறனும் அழிவும் ஒருபோதும் சுழியாக இருப்பதில்லை. ஆக்கமும் அழிவும் கலந்தே இருக்கின்றன .புறத் தாக்கங்களின் வலிமைக்கு ஏற்ப அவற்றின் வாய்ப்புகள் மட்டும் மாறுகின்றன .ஆக்ககத்திற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் போது அழிவிற்கான வாய்ப்பு குறைகின்றது . புரிதலும் , புரிதலை மேம்படுத்தக் கூடிய கல்வியும், மனமும் மனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய சுய வொழுக்கமும் இந்த வாய்ப்புக்களில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன .
இயற்கையில் அழிவில்லாது என்று எதுவுமேயில்லை.சிறிய அணுவிலிருந்து பெரிய அண்டங்கள் வரை ஆக்கப்பட்டு நிலையாகவே இருப்பதில்லை .வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களின் இடையிலோ அல்லது இறுதியிலோ அழிவுறுகின்றன, அழிவை யாராலும் தடுத்துக் கொள்ள முடிவதில்லை. இதில் மனிதன் மட்டும் சாகா வரம் வேண்டும் என்று வேண்டிக் கொள்வது இயற்ககைக்கு மீறிய எண்ணமேயாகும் .
ஒரு குழந்தை பிறந்து வளர்கின்றது என்றாலும் எந்த வயதிலும் இறந்து போகும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டே வாழ்கின்றது .கூடுதல் பாதுகாப்பு வளர்ச்சியைத் தருகின்றது என்றாலும் ஆக்கத்தை மட்டுமே தருவதில்லை ,அழிவைக் குறைக்கின்றது என்றாலும் அழிவை மட்டுமே குறைப்பதில்லை. ஆக்கத்தின் வளர்ச்சிப்படிகளில் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுவதும் ,அழிவின் வளர்ச்சிப்படிகளில் அழிவு தடுக்கப்படுவதற்குமான வாய்ப்புக்குகளை இயல்பாக உருவாக்கிக் கொள்கின்றன .இயற்கையான வளர்ச்சியும் , இயற்கையான அழிவும் இல்லாத போது அழிவு தூண்டப்படுகிறது . இயற்கையில் இயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஆக்க மற்றும் அழிவிற்கான காரணிகளை யாராலும் முற்றிலுமாக இல்லாதிருக்குமாறு செய்துவிட முடியாது காரணிகளை ஊக்குவிக்கும் வழிமுறைகளை மட்டுமே மட்டுப்படுத்த முடியும் . மாறி மாறி வரும் பருவ காலங்களினால் ஏற்படும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள் எந்த ஒரு உறுதியான கட்டிடத்தையும் சீரழித்துவிடும் .அதன் நிலைப்புக்குப் புற நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை கட்டிடத்தை அழிவிலிருந்து பாதுக்காக்க முடியாது .முதலில் சிறு சிறு வெடிப்பு, விரிசல், அரிப்பு போன்ற அழிவுக்கு காரணிகளால் கட்டிடம் படிப்படியாகச் சிதைந்து ஒரு காலகட்டத்தில் அழிந்து விடுகின்றது .மனிதன் ஆக்க்கத்திற்கான காரணி என்றால் அவனுடைய மனம் அழிவிற்கான காரணி. மனிதனுடன் மனமும் சேர்த்தே வளர்ச்சி பெறுகின்றன . மனிதனையும் மனதையும் பிரித்துப் பார்க்கவே முடியாது .நேர்மையாக வளரும் ஒரு மனிதன் மனதின் ஒரு கன நேர முயற்சியால் அழிந்து போய்விட நேரிடலாம் .
அழிவில் மறையும் போது ஆக்கம் விழித்துக்கொள்கின்றது ,ஆக்கம் நிறைவடையும் போது அழிவு விழித்துக் கொள்கின்றது அழிவும் ஆக்கமும் ஒரு வட்டச் சுற்று முறையில் தொடர்ந்து நிகழ்கின்றன.இனி அழிவதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் ஆக்கமும்,,ஆக்கப்படுவதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் அழிவும் வலிமையடைகின்றன
No comments:
Post a Comment