Friday, April 22, 2022

vinveliyil ulaa

 


. நெருப்பு வளைய அண்டம் (Ring of fire Galaxy) 

      ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த விண்வெளி  ஆராச்சியாளர்கள் குழு ஒரு புதிய வகையான அண்டத்தைக் கண்டறிந்தனர். R 5519 என்று குறிப்பிடப்படுகின்ற இது 10,8  பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால்  விண்வெளியில் ஒரு நெருப்பு வளையம்போலக்  காட்சியளித்தது . இதை டைட்டானிக் வடை (titanic donut)  என்றும் கூறுவார்கள். இது ஏறக்குறைய பால்வழி மண்டலத்தைப் போல நிறைகொண்டுள்ளது முதன்முதலாக ஓர் அண்டம் எப்படி உருவானது என்பதற்கான விளக்கத்தில்  இது மாற்றங்களை ஏற்படுத்தியது. R 5519 மீனிறை மிக்கது.. இதில் காணப்படும் மோதிரம் போன்ற வளையtத்தின் விட்டம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவைப் போல   2 பில்லியன் மடங்கு. பேரண்டம் தோன்றிய தொடக்க காலத்தில் இந்த வளையம் இருவேறு அண்டங்களின்  மோதலுக்குப் பிறகு புதிய அண்டமாக உருவாகியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள் 


Thursday, April 21, 2022

Vinveliyil Ulaa

 

.பெர்னார்டு அண்டம் (Barnard’s Galaxy)

 

     பால்வெளி மண்டலத்திற்கு அருகாமையில் 1.6 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நம்முடைய அண்டத்தில் 10ல் 1  பங்கு வடிவங் கொண்ட இது ஒரு குள்ள, சீரற்ற வடிவ அண்டமாகும்.  NGC 6822 , IC 4895, கால்டுவெல் (Caldwell) 57 endru குறிப்பிடப்படும் இந்த அண்டத்தை பெர்னார்டு (E.E.Barnard) என்ற வானியலார்  1884 ம் ஆண்டில் கண்டுபிடித்தார் இது நமது அண்டத்தின் வட்டாரத் தொகுதியில் உள்ளடங்கி , சக்கிடாரியஸ் (Sagittarius)  எனும் வட்டார விண்மீன் தொகுப்பில் காணப்படுகின்றது. இதன் விட்டம் 7000 ஒளியாண்டுகள் என்றும் இதனுள் ஒருகோடி விண்மீன்கள் இருக்கலாம் என்றும், இது நமது பால்வெளி மண்டலத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் அண்டங்களுள் ஒன்றும் என்றும் கண்டறிந்துள்ளனர். இதன் கட்டமைப்பும் சேர்மானமும் ஏறக்குறைய நமது அண்டத்திலுள்ள சிறிய மெக்லானிக் மேகம் போன்றதொரு தோற்றத்தைத் தருகின்றது

 

       எட்வின் ஹபுள் என்பார் 1920- ல் இந்த அண்டத்தில் மூன்று விண்மீன் கொத்துக்களைக் கண்டறிந்தார், . பொதுவாக விண்மீன் கொத்துக்கள் ஒத்த வயதுடைவைகளாக இருக்கும் ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு வயதுடையவைகளாக இருந்தன. . இது வானியலாருக்கு  பெரிதும் வியப்பளித்தது. . இதிலுள்ள ஹபுள்-7 எனப்படும்   விண்மீன் கொத்து 15  பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும், (இது ஏறக்குறைய நமது பால்வெளி மண்டலம் மற்றும் பேரண்டத்தின் வயதுமாகும்). ஹபுள்-8 என்ற விண்மீன்கொத்து 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும், ஹபுள்-6 (மிகவும் இளமையானது) 100 மில்லியன் ஆண்டுகளுக்கு  முன்னரும் உருவாகியிருக்கலாம் என மதிப்பிட்டுள்;ளனர். பெர்னார்டு (E.E.Bernard) அண்டம் புதிய நிறைமிக்க விண்மீன் கொத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என் நம்பப்படுகின்றது.

 

'image.png' failed to upload. TransportError: There was an error during the transport or processing of this request. Error code = 103, Path = /_/BloggerUi/data/batchexecute

                                                                                 NGC 6822 பெர்னார்டு அண்டம் 

பெர்னார்டு அண்டத்திற்கு சுருள் புயங்கள் ஏதுமில்லை , செறிவான மையக்கருவும் இல்லை .இதில் காணப்படும் செந்நிற நெபுலாக்கள் புதிய இளம்  விண்மீன்கள் உருவாகும் பகுதிகளாகும்.  வெப்பமிக்க விண்மீன்கள் புறவெளியிலுள்ள வளிமங்களை வெப்பப்படுத்தி ஒளிர்வூட்டுகின்றன. இவ்வண்டத்தில் பொருள் திணிவு மிகவும் குறைவாக உள்ளது. இது அருகாமையிலுள்ள நிறைமிக்க பெரிய அண்டங்களினால் விழுங்கப்படுவதால் ஏற்பட்டிருக்கள்லாம் என்று கூறுகின்றார்கள்

vinveliyil Ulaa

                                                         

கொம்பு வடிவ அண்டம் (Antennae Galaxy)

 

          இதில் இரு அண்டங்கள் நேரடியாகக் குறுக்கிட்டு மோதிக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவால் ஏற்படுவதாகும் இதை மோதல் என்று சொல்வதை விட ஒருங்கிணைப்பு என்று கூறலாம். இதை 1785 ல் வில்லியம் ஹெர்ஷல் (william Herschel) என்பர் கண்டுபிடித்தார். NGC4038/NGC4039 என்ற இருஅண்டங்களில் உள்ள வளிமங்களும், தூசுகளும், காந்தப் புலமும்  ஒன்றுசேர்ந்து  இடையீட்டுச் செயல் புரிவதால் இப்படிக்   கொம்பு போன்ற அண்டம் உருவாகியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் உருவத் தோற்றம் ஒரு வண்ணத்துப் பூச்சியின் உணர்கொம்பு போல இருப்பதால் இது இப்பெயர் பெற்றது இது  corvus எனப்படும் காக்கை (Crow) வடிவ விண்மீன் வட்டாரத்தில் 45 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது .பூமியிலிருந்து இதை நோக்க இது இதயம் போன்றதொரு தோற்றம் தருகின்றது அமைந்துள்ளது சில சமயங்களில் இவை புதிய விண்மீன்களை விரைவாக உருவாக்குவது முண்டு. இந்த உணர்கொம்பு அண்டம் விண்வெளியில் ஒரு எக்ஸ் கதிர் உமிழ்வானாக இருக்கின்றது . கொம்பின் மங்கலான பகுதிகள் புதிதாக உருவாகும் இளம் விண்மீன்களாகும் புதிய விண்மீன்களின் உருவாக்கம்  அங்கு நீல நிறத்தை ஏற்படுத்தியிருக்கின்றது .. சிவப்பு நிறம் ஒளிரும் விண்மீன்களின் உருவாகும் பகுதியைச் சுற்றியுள்ள ஹைட்ரஜன் வளிமம் சிவப்பு நிறத்துடன் ஒளிர்கின்றது  . வலது மற்றும் இடது பக்கங்களில் தோன்றும் ஆரஞ்சு நிறப் பொட்டுக்கள் வயதான விண்மீன்களைக் கொண்ட  மோதும் இரு சுருள் புய அண்டங்களின் மையக்கருக்களாகும்.

 

                                                        

                                                               NGC 4038               NGC 4039   

                                                                      கொம்பு வடிவ அண்டம்

2.