Saturday, December 2, 2023

நட்சத்திர பொருத்தம்

 நட்சத்திர பொருத்தம்

 ஜாதகத்தில் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டவர்கள் திருமணப் பொருத்தம் பார்ப்பார்கள்.இந்த திருமண பொருத்தத்தை ராசி மற்றும் நட்சத்திர பொருத்தம் என்று அழைக்கின்றார்கள் . திருமண பேச்சை எடுத்தாலே முதலில் பார்க்கப்படுவது நட்சத்திர பொருத்தம். இருவருக்கும் நட்சத்த்திர பொருத்தம் இருந்தால் மட்டுமே அவர்களை திருமண பந்தத்தில் ஜோதிடர்கள் இணைப்பார்கள்.

பெண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை

.எண்         பெண் நட்சத்திரம்                      பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்    

   1                   அஸ்வனி                             பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம்,                                                                             .                                                                    சதயம்

   2                    பரணி                                 புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

   3          கார்த்திகை 1 ம் பாதம்                சதயம்

   4     கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள்        சதயம்

   5                  ரோகிணி                             மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1,

                                                                     பூரட்டாதி, பரணி

   6     மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்       உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம்,  `    .                     .                                                                    சதயம்,அஸ்வனி, ரோகிணி

  7     மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்        திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4,      .                                                                    சதயம், பரணி

  8         திருவாதிரை                                          பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4

  9     புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்         அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

 10       புனர்பூசம் 4 ம் பாதம்                        பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்

 11                பூசம்                                      ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4,                                                                             .                                                                   ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்   

12           ஆயில்யம்                                   சித்திரை, அவிட்டம் 1, 2

13              மகம்                                         சதயம்  

14               பூரம்                                        உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி

15        உத்திரம் 1 ம் பாதம்                      சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

16      உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்         அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்

 17          அஸ்தம்                                      பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம்,ஆயில்யம், .                                                                  கார்த்திகை 2, 3, 4

18       சித்திரை 1, 2 ம் பாதங்கள்           கார்த்திகை 2, 3, 4, மகம்

19       சித்திரை 3, 4 ம் பாதங்கள்           கார்த்திகை 1, மகம்

20              சுவாதி                                     பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம்,                         .                                                                  புனர்பூசம்

 21      விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்        அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4

 22         விசாகம் 4 ம் பாதம்                    அவிட்டம், சதயம், சித்திரை

 23             அனுஷம்                                 கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம்,                                                    .                                                                 ஆயில்யம், அஸ்தம், சுவாதி

 24                கேட்டை                                கார்த்திகை 2, 3, 4

 25                மூலம்                                   உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்

 26              பூராடம்                                  பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி

 27       உத்திராடம் 1 ம் பாதம்                உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

 28    உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்     உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்

29         திருவோணம்                              அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3,                .                                                                 4, சித்திரை, கேட்டை, பூராடம்

 30     அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்           கார்த்திகை 1, மூலம்

 31     அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்           கார்த்திகை, சதயம், மகம், மூலம்

 32               சதயம்                                  சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4

 33    பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்       மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்

 34    பூரட்டாதி 4 ம் பாதம்                      உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்

 35        உத்திரட்டாதி                             ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம்,            .                                                                திருவோணம், பூரட்டாதி   

36          ரேவதி                                        மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம்,                  .                                                                உத்திரட்டாதி  

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

   வ.எண் ஆண் நட்சத்திரம்                   பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

    1               அஸ்வனி                          பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்  

    2                பரணி                             ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி

    3       கார்த்திகை 1 ம் பாதம்           சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2  

   4   கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள்   அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4  

   5           ரோகிணி                             மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி  

   6  மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்    புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி

   7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்     திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி

   8       திருவாதிரை                            பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

  9   புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்     பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

 10     புனர்பூசம் 4 ம் பாதம்                 பூசம், அனுஷம், பரணி, ரோகிணி

 11              பூசம்                                   உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4

 12         ஆயில்யம்                               அஸ்தம், அனுஷம், பூசம்

 13             மகம்                                   சித்திரை, அவிட்டம் 3, 4

 14             பூரம்                                    உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்

 15    உத்திரம் 1 ம் பாதம்                    பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்

 16  உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்        பூராடம், திருவோணம், ரேவதி

 17         அஸ்தம்                                  உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

 18    சித்திரை 1, 2 ம் பாதங்கள்        விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்

 19    சித்திரை 3, 4 ம் பாதங்கள்        விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்

 20           சுவாதி                                  அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்

 21     விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்     சதயம், ஆயில்யம்

 22        விசாகம் 4 ம் பாதம்                சதயம்

 23              அனுஷம்                           உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்

 24               கேட்டை                            திருவோணம், அனுஷம்

 25                மூலம்                              அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4

 26               பூராடம்                            உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி,                      .                                                            உத்திரம் 2-3-4, அஸ்தம்

 27       உத்திராடம் 1 ம் பாதம்           பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்

 28  உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2

 29            திருவோணம்                     உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்

 30   அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்        புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

 31    அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்       சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4

 32              சதயம்                              கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம்                    .                                                               3, 4

 33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்     உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

 34    பூரட்டாதி 4 ம் பாதம்                 உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்

 35       உத்திரட்டாதி                          ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4

 36           ரேவதி                                  பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

  

Friday, December 1, 2023

வியாழ நோக்கம்

 

வியாழ நோக்கம்

பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது பெற்றோர்களின் தலையாயக்  கடமைகளில் ஒன்றாகும். தனக்குப் பிறகு தன்னுடைய உதவி இல்லாமல்    பிள்ளைகள்  தனித்து வாழ்வதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள  உரிமையுள்ள தகுதிகளைப் பெறுவதற்கு அடிப்படையான கல்வியைப் கற்பிப்பதும்  சாகாத சமுதாயம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு உரிய காலத்தில் அவர்களுக்கு  இல்லறத்தை அறிமுகப்படுத்துவதும் ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்வியல்  கடமைகளாகும் . மகனோ மகளோ , பிள்ளைகளை முடிந்த வரை நன்கு படிக்க வாய்ப்புக் கொடுங்கள் .அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைப்  பெறும் வரை கல்வி கற்றுக்கொள்ள அனுமதியுங்கள் .பிள்ளைகள் தங்களுடைய பாதையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாவிட்டால் வழிகாட்டுதல் மூலம் ஆலோசனை வழங்குங்கள் . பெண் பிள்ளைகளுக்கு (5 வீடு +12 பள்ளி + 3 கல்லூரி +2 உயர் கல்வி )   22-23  வயதிலும் ,ஆண் பிள்ளைகளுக்கு( 5 வீடு   + 12 பள்ளி + 3 கல்லூரி + 2 உயர் கல்வி + 2 வேலை)  24-25 வயதிலும் திருமணம் செய்வது நல்லது..இந்த வயதில் தன் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்யும் ஒரு பெற்றோரின் வயது குறைந்தது 45-50 இருக்கும். அவர்கள் தன் பிள்ளைகளுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் பாதுகாப்பாய் இருக்கவும்  ,பேரன் பேத்திகளின் திருமணங்களைக் கண்டு களிக்கவும் வேண்டும் என்றால் காலங்கடந்த திருமணங்களைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

படிப்பை முடித்துவிட்டு திருமணத்திற்குத் சரியான வயதைத் தொட்டவுடன் ,நம்முடைய மனத்திருப்திக்காக  வியாழ நோக்கம் வந்துவிட்டதா என்பதை  ஜாதகம் பார்க்கும் அனுபவம் மிக்கவர்களிடம் காட்டித் தெரிந்து கொள்வதை நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். வியாழ நோக்கம் என்பது ஜாதகத்தில் குரு (வியாழன்) பார்வையோடு தொடர்புகொண்டது. குரு ஜாதகக் கட்டமைப்பில் எந்தக் கட்டத்தைப் பார்க்கிறாரோ அந்தக் கட்டம் மேன்மையடையும் என்றும் குருபார்வை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றது  என்றும் சொல்வார்கள் .குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன அதாவது ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திலிருந்து கடிகாரச் சுழற்சியில் 5,7,9 வது கட்டங்களைப் பார்க்கின்றார் .இவற்றுள் 5 வது மற்றும் 9 வது பார்வைகள் சிறப்பானவைகளாகக் கொள்ளப்படுகின்றன. குரு லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் கட்டத்தையோ  5,7,9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையையே வியாழ நோக்கம் என்பார்கள்.

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். சக்தி வாய்ந்த குரு பார்வை அவர் இருக்கும் கட்டத்தை விட பார்க்கும் கட்டங்களுக்குத்தான் அதிக நன்மை வழங்கு வார். குரு அறிவு ஞானம் ஆகியவற்றிக்கு மூலமாக விளங்குபவர் இயல் வாழ்க்கை யில் ஆசிரியரின் வழிகாட்டல் உண்மையில் ஆசிரியரை உயர்த்துவதில்லை ஆனால் அவரிடம் கல்வி கற்ற மாணவர்களையே உயர்த்துகிறது. அறிவால் உயர்த்த நிலையை அடைந்தவர் இல்லற  வாழ்க்கையைத் தொடங்குவதற்கு தகுதியுடையவ ராகின்றார் என்பதால் வியாழ நோக்கத்தைக் கொண்டு திருமணத்திற்கான தகுதியை முடிவுசெய்கின்றார்கள். உலகியல் வாழ்க்கையில் நிறைவான அனுபவத்தைப் பெற்ற ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளின் வயது , படிப்பு ,வேலை  இவற்றை மதிப்பிட்டே வியாழ நோக்கத்தை ஜாதகமின்றியே தீர்மானிக்கமுடியும்.

வியாழ நோக்கத்தைத் தெரிந்துகொண்டவுடன் .உறவினர்களிடமும் ,நண்பர்களிடமும்  தன் பிள்ளைக்குத் திருமணம் செய்யும் எண்ணத்தைத் தெரிவித்து மணப்பெண் /மாப்பிள்ளைகள்  இருக்கும் இடங்களைத் தெரிந்து கொள்ளலலாம் .இன்றைக்குத்  திருமணத்தை முடித்துக் கொடுக்கும் சில நகரத்தார் அமைப்புக்கள் உள்ளன . இவர்களிடம் பதிவுசெய்து கொண்டால் நமக்குத் தேவையான மாப்பிள்ளை அல்லது மணப்பெண்களின் ஒளிப்படங்கள் ,ஜாதகம் ,மற்றும் குடும்ப விவரங்களைத்  தருவார்கள். எதிரி வீட்டின் உண்மையான தகவல்களை விசாரித்துத் தெரிந்து கொண்டு குடும்பத்தாருடன் ஆலோசித்து அவசரப்படாமல்  மணப்பெண்ணையோ அல்லது மாப்பிள்ளையையோ முடிவுசெய்ய வேண்டும். பிள்ளைகளுடன் பேசி அவர்களுடைய விருப்பு வெறுப்புக்களையும் சீர்தூக்கி இறுதி முடிவு செய்யவேண்டும்.

ஸ்ரீ முருகன் நகரத்தார் மேட்ரிமோனியல் .இது ஸ்ரீ முருகன் ட்ராவல்ஸ்ன் ஒரு துணை நிறுவனம் .Sri Murugan Travel Agency, 10, North Avani Moola Street, Madurai என்ற முகவரியில் தொடர்புகொண்டு விசாரிக்கலாம் . Srimuruganmatrimoniyal@gmaul.com என்ற வலைதளத்தின் மூலமாகவோ 7373012265 /9500072265 போன்ற  அலைபேசி மூலமாகவோ  தொடர்பு கொள்ளலலாம்

நகரத்தார் திருமண சேவை மையம் என்றதொரு அமைப்பு கோவிலூரிலும் சென்னையிலும் இயங்கி வந்தது. இப்பொழுது அது இயங்குவதாகத் தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் admin@nagaratharmatrimony.in , Mobiles +91 9884407518/ 91 9840807518 தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் இலவச சேவை  . திருமண சேவை மையம் மூலம் பெற்ற தகவல்களை முழுமையாக விசாரித்து சரிபார்த்துக்கொள்வது அவசியம்.