Sunday, October 12, 2014

kavithai



ஆணென்ன பெண்ணென்ன

 இயங்கிக் கொண்டே செல்கிறது  உலகம்
யுகம் யுகமாய்
இரவு பகலென
என்ன நிகழ்ந்தாலென்ன
அதிலொரு மாற்றமுமில்லை

வெறும் இரவே தொடர்வதில்லை
வெறும் பகலும் தொடர்வதில்லை
உழைப்புக்குப் பகலும்
ய்வுக்கு இரவும் இல்லாவுலகில்
உயிருக்கு உடலில்லை

நினைத்துக் கொண்டே வாழ்கிறது உள்ளம்
காலம் காலமாய் 
ஆண் பெண்ணென
யார் பிறந்தாலென்ன 
அதிலொரு வேற்றுமையில்லை

வெறும் பெண்ணினமே உலகமில்லை
வெறும் ணினமே உயர்வுமில்லை
ணுக்குப் பெண்னும்
பெண்ணுக்கு ணும் இல்லாவுலகில்
உடலுக்கு உயிரில்லை 

இரவும் பகலும் இரண்டும் வேண்டும்
என்பது போ
ஒருவருக்கு ஒருவர் வேண்டும்
யா உறவுக்கு
உறவில்லா உலகில்ரவேது

ஆணும் பெண்ணும் இரண்டும் வேண்டும்
சாகாத சமுதாயத்திற்கு
அங்கே து பிந்தாலும்
சமுதாயத்திற்கு உரம்தான்
எல்லாம் இறைவன் தந்த கொடைதான் 

Sunday, July 20, 2014

Eluthatha kaditham



எழுதாத கடிதம்
ஆசியவில் சிறந்த பல்கலைக் கழகங்களில் இந்தியா இப்போது 200 வது இடத்தை எட்டிப் பிடித்திருப்பது சிலருக்கு  கொஞ்சம் மகிழ்ச்சியளிக்கின்றது. மகிழ்ச்சியளிக்கின்றதா! பல்கலைக் கழகங்கள் புற்றீசல் போலப் பெருகி வரும் கால கட்டத்தில் 200 வது இடத்தை எட்டிப் பிடித்தது உண்மையான முன்னேற்றமாகி விடாது .100 பேரில் 99 வது இடத்தைப் பெறுவதும் 200 பேரில் 199 வது இடத்தைப் பெறுவதும் ஒன்றாகிவிடாது.
இந்தியா பலவற்றில் முதல் இடங்களில் இருப்பதையும் நினைத்துப் பார்த்து மகிழுங்கள். ழல் புரிவதில் முதல் 5 இடங்களில் பொது இடங்களில்  பெண்களுக்குப் பாதுகாப்பின்மை தருவதில் இந்தியா முதல் பத்து இடங்களில் ,போலிப் பொருட்கள் உற்பத்தியில் முதல் 12 இடங்களில், மோசமான சாலை வசதியில்  முதல் 15 இடங்களில், மோசமான ரயில் போக்குவரத்து வசதியில் முதல் 16 இடங்களில்,நேர்மைத்தன்மையின்மையில் முதல் 20 இடங்களில்


கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் செலவிடப்படும் தொகை அரசியல்வாதிகளின் போக்குவரத்திற் காகச் செலவிடப்படும் தொகைகளைவிட மிகக் குறைவு .செலவிடப்படும் தொகையும் முறையாகச் செலவழிக்கப்படாததால் பயன்பாடு மக்களைச் சென்றடைவதில்லை.
.

Sunday, July 6, 2014

எங்கள் தமிழ் வெல்லும்

மண்ணில்லாமல் 
பயிர் செய்ய நினைத்தாய்  
மழை நின்று போனது
உண்ண ஒரு வாய் நீரில்லை என் தோழா! 

கலை இல்லாமல் 
தொழில் செய்ய நினைத்தாய் 
நேர்மை நிறம் மாறிப் போனது 
நேயமும் மறந்து நெடுநாள் ஆனது என் தோழா!

அடிவாரமில்லாமல் 
கட்டடம் கட்ட நினைத்தாய் 
அங்கே வாழ நினைத்தவன் 
அங்கேயே புதைந்து போனான் என் தோழா!

நூலில்லாமல் 
துணி நெய்ய நினைத்தாய் 
ஞ்செல்லாம் பறந்து போனது 
நிர்வாணமே எல்லோருக்கும் கிடைத்தது என் தோழா! 

மொழியில்லாமல் 
வளம்பெற நினைக்கின்றாய் 
முன்னேற்றம் இல்லையென்றால் கவலையில்லை
வாழ்க்கையே இல்லையென்றால் செய்வதென்ன என் தோழா?  

தாய் மொழி என்பது அன்பும் அறிவும்
தமிழ் மொழி என்பது அகமும் அழகும்
தாய் மொழி என்பது ள்ளும் புறமும் 
தமிழ் மொழி என்பது உணர்வும் உறவும்
தாய் மொழி என்பது பழமையும் ண்பாடும்
தமிழ் மொழி என்பது புதுமையும் ருமைப்பாடும்
இவை இரண்டும் இணையாவிட்டால் 
இல்லை மூவறமும் என் தோழா