எழுதாத கடிதம்
இந்தியாவில் புற்று நோய் விகிதம் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.புற்று நோய் இந்திய மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் தான் புற்று நோய். இந்தியா இந்திய மக்களைப் போலவே,இந்திய மக்கள் இந்தியாவைப் போலவே.
புற்று நோய் பெரும்பாலும் முற்றிய பின்பே அறியப்படும் ஒரு
வகையை நோய். அதற்கு ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை உண்டு. ஆனால் முற்றிய நிலையில் அதற்கு விடிவு இல்லை. இந்தியாவின் புற்று நோய் ஆரம்ப நிலையைக் கடந்து ஏறக்குறைய முற்றிய நிலையைத் தொட்டு விட்டது. அதற்கு தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மக்களும் உணரவில்லை ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் உணரவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. எம் பி சீட்டுக்காக ஒரு கட்சிக் காரர்களே மக்கள் முன்னே சண்டை போடுகின்றார்கள்.கைகலப்பு, இரத்தக் காயம். இவர்களா மக்களைக் காக்கப் பாடு படப்போகின்றார்கள். எல்லாம் வேஷம்.கொள்கை,லட்சியம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் மேடைப் பேச்சுக்காக ஒப்பிக்கின்றார்கள்.மற்றபடி சுய லாபம் தான்.
குற்றவாளிகளே பொது நிர்வாகம் பண்ணுவதும்,குற்றவாளிகளே பதவி வகிப்பதும்,குற்றவாளிகளே தலைமை தாங்குவதும், குற்றவாளிகளே காவல் புரிவதும், குற்றவாளிகளே தீர்ப்பு எழுவதும்- இந்தியா கண்ணுக்குத் தெரியாத குற்றவாளிகள் நிறைந்த ஒரு நாடாக மாறிவருகின்றது. குற்றங்கள் செய்து குற்றவாளிகளுக்கு துணை இருந்து எப்படியாவது பொருள் சேர்த்து தேவையில்லாத சுகங்களை எல்லாம் அனுபவிக்க பேராசைப்படும் மக்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகரித்துக் கொண்டே வருவதைத்தான் பார்க்கின்றோம்.
இது உச்ச வரம்பையும் தாண்டி சென்று விட்டது. இனி நடக்கும் விபரீதங்களுக்கு எல்லோரும் காலமெல்லாம் பாடாய்ப் படப்போகின்றோம்.
No comments:
Post a Comment