Sunday, March 16, 2014

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 

உங்கள் வாக்குகளை விற்காதீர்கள் ,இலவசப் பொருட்களை வாங்கிக் கொண்டு தவறான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்காதீர்கள் என்று
வோட்டளிக்கும் மக்களுக்குத்தான் எவ்வளவு விதமான அறிவுரைகள். இதில் எல்லோரையும் போல எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் ஒரு நாள் வாங்கி தவறு செய்பவரை விட பல நாள் தவறு செய்து பொருள் குவித்து ஒரு நாள் கொடுப்பவரே அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்.

எல்லோருடைய வாக்குகளையும் விலைக்கு வாங்கும் அளவிற்கு ஒரு வேட்பாளர் பொருள் எப்படிச் சேர்த்தார் ? எதற்காக வோட்டை விலைக்கு வாங்குகின்றார் ? சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் முயற்சி இது என்று எல்லோருக்கும் தெரியாமலா இருக்கும். சின்ன மீனே தவறான வழிமுறையில் பிடித்ததுதானேவோட்டளிக்க வேட்பாளர் தரும் பொருளை வாங்கினால் கடுமையாகத் ண்டிக்ப்படுவீர்கள் என ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களை அச்சப்படுத்தும் விதத்தில் அறிவுரை கூறும் அமைப்புகள் ன் வேட்பாளர்களுக்கு அப்படிக் கடுமையாக அறிவுரை கூறத் தயங்குகின்றார்கள். வேட்பாளர்களிடம் அளவுக்கு மீறி பொருள் இருக்கின்றது. பாவம் சாதாரண மக்களிடம் ஒரு நாள் முழுமையாகச் சாப்பிடக் கூட பொருள் இல்லை.உழைத்துப் பொருள் சம்பாதித்து சாப்பிட நிரந்தரமான
ழியுமில்லை. கொடுக்கும் கை நீட்டினால்,வறுமையில் வாடும் கைகள் வெகு இயல்பாக நீளும் தானே.  
வருமான வரித் துறை இவர்களுக்கு எப்படி இவ்வளவு பொருள் வந்தது என்று கணக்குக் கேட்காதா ? நீதித் துறை இவர்களுக்கு எப்படி இவ்வளவு
சம்பாதிக்க முடிந்தது என்று கேட்காதா?  
அரசியல் வாதிகள் எல்லோரும் கூட்டாளிகள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை எடுத்துக் கூறலாம். ஒரு மத்திய அமைச்சர் சொல்கிறார். பதவியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டினால் சிக்கிக் கொண்டால், தான் தப்பிப்பதற்காக பிற அமைச்சர்களையும்,பிரதமரையும் இழுத்து விட்டு  காட்டிக் கொடுக்கக் கூடாது என்று. இது அரசியல் நாகரீகம் இல்லையாம். எது நாகரீகம்? எது தர்மம்? யாருக்கு நாகரீகம் தெரியவில்லை ? யாருக்குத் தர்மம் கிடைக்கவில்லை ?  
பொதுப் பணியில் என்ன ரகசியம் இருக்க முடியும்?. பொதுப்பணியில் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் இப்படிக் கணக்கில்லாமால் சம்பாதிக்க முடியும் என்றால்,கோளாறு நாம் எல்லோரிடமும் தான் இருக்கிறது என்று அர்த்தம்.அப்படி ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் மக்கள், இந்த நாட்டில் இருக்கும் வரை இந்திய அரசியல்வாதிகளுக்கு எப்போதும் காட்டில் மழைதான்.


No comments:

Post a Comment