Sunday, March 9, 2014

Short story

சிறு கதை 
செய்முறைப் பாடம் 

ஓர் ஆசிரியர் மனப்பாடக் கல்வி முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார்
தேர்ச்சி விழுக்காடு ஒவ்வொரு முறையும்  குறைந்திருந்தாலும் தன் போக்கை அவர் மாற்றிக்கொள்ள வதாகயில்லை. ஒரு சமயம் பக்கத்து ரில் உள்ள ஒரு குருட்டுப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு பள்ளியின் சார்பாகச் செல்லவேண்டி வந்தது .ஆண்டு விழாவிற்கு அவருக்குத் தெரிந்த ஒரு மடாதிபதி லைமை தாங்கிப் பேசினார். வாழ்க்கையில் நம்பிக்கை எனும் ஒளியைப் பெற அவர்க ளும் அவர்களுக்காக சமுதாயமும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிப் பேசினார். விடை பெற்றுச் செல்லும் போது,தான் நிறைவேற்றி வைப்பதாகக் கூறி குருட்டு மாணவர்களின் மனத்தில் இருக்கும் ஆசைகளைக் கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் வாழ்நாளில் ஒரு திரைப்படமாவது பார்த்த்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். “திரைப்படமா?” என்று ஆச்சரியப்பட்ட மடாதிபதி அதை உங்களால் பார்க்க முடியாதே என்று கூற,அதற்கு அவர்கள் பார்க்க முடியா விட்டால் என்ன கேட்க முடியுமே என்றனர். .மடாதிபதியும் மாற்றுத் திறனாளியான மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்து ஆசிரியரை அழைத்து எல்லோரையும் அப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டார்.அது ஒரு சோகப் படம். அழுகைக் காட்சிகள் வரும்போது படம் பார்த்து இரசித்தவர்கள் பலர் கண் கலங்கினார்கள்,ஆனால் குருடர்கள் உணர்வுகளில் அதிகம் பாதிப்பின்றி சும்மா இருந்தனர் வசனங்களை கேட்டு இரசிக்கும் போது இயல்பானவர்களுக்கும் குருடர் களுக்கும் இடையே இருந்த அந்த வேறுபாடு குறிப்பிடும் அளவிற்கு  குறைவாகவே இருந்தது. ஒவ்வொரு முறையும் இதை கண்ணுற்ற அந்த ஆசிரியர் .காதால் கேட்டுணர்ந்ததை  விட கண்ணால் பார்த்து உணரும் செய்திகளே மூளையில் ஆழமாகப் பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டார்.இந்த அனுபவம் அவர்க்கு ஒரு செய்முறைப் பாடமானது 


No comments:

Post a Comment