சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
3..செயல்திறன்மிக்க மறு மதிப்பீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும். படித்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது மறு மதிப்பீட்டின் அவசியம் புரியும் . மறு மதிப்பீட்டின் நிலையை சுயமாக அறிந்துகொள்ள இந்த அறிவுப்பூர்வமான கலந்துரையாடல் பயன் தருகின்றது இது ஆழமான பதிவுக்கும் தெளிவான புரிதலுக்கும் உறுதுணையாக இருக்கின்றது . படுக்கையில் படுத்துக்கொண்டு தூங்குவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் போதும், பயணத்தின் போது சும்மா இருக்கும் போதும், பணியிடை ஓய்வாக இருக்கும் போதும் , இந்த மறு மதிப்பீட்டை மேற்கொள்ளலாம் .
படித்த ஒரு கருத்தை அல்லது ஒரு உண்மையை நீண்ட காலம் நினைவிற் கொள்ள சிலர் குறுக்கு வழிகளை அறிமுகம் செய்வார்கள் , எதை நினைவுக் கொள்ள வேண்டுமோ அதை ஏற்கனவே நினைவிற் கொண்டனவற்றுள் அதனுடன் தொடர்புடைய ஒன்றுடன் தொடர்புபடுத்திக் கொண்டால் பிழையின்றி மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள முடிகின்றது ஒரு சில கருத்துக்களுக்கு ஒரு சில குறுக்கு வழிகள் பயன் தரலாம் . ஆனால் நினைவிற் கொள்ள வேண்டிய கருத்துக்கள் பல வற்றிற்கு பல குறுக்கு வழிகளை ஏற்படுத்திக் கொண்டால் ,அவற்றின் குறுக்கீட்டு விளைவால் புதிய குழப்பங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கின்றது .புற மூலங்களின் உதவியின்றி சுயமாக நினைவுகூர்வதே மறு மதிப்பீடாகும் பொதுவாக புத்தகத்தை வாசிப்பதும் , படிக்கச் சொல்லிக் கேட்பதும் மந்தமான( Passive ) அணுகுமுறைகளாகும் . மறு மதிப்பீட்டிற்கும் , நீண்ட கால நினைவாற்றலுக்கும் இது மிகுந்த பயனளிப்பதில்லை. மூளையில் பதிவு செய்யப்பட்டவற்றை மட்டும் நினைவுகூர்ந்து படித்ததை முழுமைப்படுத்திக் கொள்வது செயல்திறன்மிக்க (active ) வழிமுறையாகும் . புத்திசாலியான பிள்ளைகள் செயல்திறனற்ற மற்றும் செயல்திறன்மிக்க வழிமுறைகளின் வேறுபாடுகள் புரிதலிலும்,நினைவுகூர்வதிலும் ஏற்படுத்தும் தாக்கங்களை நன்கு உணர்ந்து , செயல்திறன்மிக்க மறு மதிப்பீட்டு வழிமுறையை மட்டுமே ஒவ்வொருமுறையும் பின்பற்றுவார்கள்
மறு மதிப்பீடு புரிதலில் ஏற்படுத்தும் நம்பிக்கை புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக்களைத் தருகின்றது . பாடத்திட்டத்திற்கும் அப்பால் செல்ல அனுமதிக்கின்றது .கற்றுக்கொண்டவைகள் புரிதலினால் ஒன்றிணையும் போது புதியன பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது .இவர்களே பிற்காலத்தில் விஞ்ஞானிகளாகின்றார்கள் .
No comments:
Post a Comment