சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
ஒரு குழந்தை கல்வியையும் ஒழுக்கத்தையும் ஒன்று சேர்த்தே கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஒழுக்கத்தையும் பின்பற்றி ஒழுக கட்டாயப்படுத்தாமல் ஏன் பின்பற்றி ஒழுகவேண்டும் என்பதற்கான காரணத்தையும் பின்பற்றாவிட்டால் ஏற்படும் விபத்துக்களையும் தெரிவித்தால் ஒழுக்கத்தின் . அவசியத்தை உணர்ந்து பின்பற்றுவார்கள். பொதுவாக இன்றைக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் காட்டும் அக்கறையில் சிறிதளவு கூட ஒழுக்கத்தைப் பின்பற்ற கட்டாயப்படுத்துவதில் காட்டுவதில்லை. கல்வியில் மிகுதியான கவனிப்பும் ஒழுக்கத்தில் கவனிப்பின்மையும் பயன்தராத ஒழுக்கமற்ற கல்வியை மட்டுமே ஊக்குவிக்கின்றது வெறும் அனுபவத்தின் மூலமாகவே கூட ஒருவர் தன் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் பெற்றுவிடமுடியும். ஆனால் ஒழுக்கத்தை அப்படிப் பெறமுடியாது என்பதால் கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே உயர்வானது எனலாம் .
கல்வி தனி மனித வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள பயன்தருகின்றது என்றால் ஒழுக்கம் சமுதாயத்தின் நலத்தை மேம்படுத்த துணை செய்கின்றது . அதனால் கல்வியை சமுதாய நோக்கோடு கற்றுக்கொள்ள வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவார்கள் .கல்வியின் அடிப்படையான குறிக்கோளே அதுதான் என்பது பலருக்குத் தெரிவதில்லை .
ஒரு பெற்றோருக்கு அவர்களுடைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் முக்கியக் கடமைகளுள் ஒன்றாகும். ஆணையிடுவது மட்டுமே கடமையை நிறைவேற்றிவிடாது . குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அதற்காக நேரம் ஒதுக்கி தனிப்பட்ட முறையில் காட்டும் கவனிப்பே நற்பயன் அளிக்கும் .
மகிழ்வுறுகின்றன என்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கணனியில் , கைபேசியில் தொடர்ந்து விளையாடுவதை அனுமதிக்கிறார்கள் . தங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்ற மனப்பான்மையில் இது செய்யப்படுவதால் , குழந்தைகள் இப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றார்கள் . அப்புறம் அந்தப் பழக்கத்தை வேண்டாம் என்று தடுத்தாலும் , அதையும் மீறி மறைவாகப் பின்பற்றுவார்கள் . சிலர் எதிர்த்துப் போராடுவதுமுண்டு .செல்போனில் குழந்தைகள் பொழுதுபோக்காக எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் விளையாடுவது உடல் நலத்தை மேம்படுத்துவதில்லை, மாறாக உடலையும் மூளையையும் சோர்வடையச் செய்கின்றது . மின்னணுக் கருவிகள் வெளிப்படுத்தும் நுண்ணலைகளின் தொடர் தாக்கம் உடல் நலத்தைப் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். எனவே தேவையில்லாமல் செல்போனைப் பயன்படுத்துவது என்பதை இளம்வயதிலிருந்தே தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மொழியையும் ஒழுக்கத்தையும் ஒன்றாகக் கற்றுக்கொள்ள நன்னெறிகளை ப் படக் கதைகளாகக் கூறும் சிறுவர்க்கான நன்னூல்களை படிக்கக் கொடுக்கலாம். படிக்கும் போது அருகில் அமர்ந்து கொண்டு இடையிடையே விளக்கங்கள் கொடுக்கலாம். உலக அனுபவங்களை எடுத்துக் கூறும் போதுதான் படிக்கும் கருத்துக்களின் உட்பொருளை ப் புரிந்துகொள்கிறார்கள் .

No comments:
Post a Comment