சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
ஒரு நாள் சர்க்கஸ் காட்சிக்கு அரிசி ஆலை அதிபர் தன் குடும்பத்துடன் வந்திருந்தார் . காட்டு விலங்குகள் கீழ்படிந்து செய்த வேலைகள், ஆடவர்களும் அழகு மங்கையரும் அந்தரத்தில் செய்த வித்தைகள் என ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது , பலசாலியான ஒருவர் வந்து தன்திறமையைக் காட்டினார். தன் வயிற்றின் மீது ஒரு கார் ஏறிச் செல்ல விட்டு தூங்கி எழுவதைப் போல எழுந்து நின்றார். பலத்த கரகோஷம் அவருக்கு உற்சாக மூட்டியது . அடுத்து அவர் பளுத்தூக்கிக் காட்டினார். 40 கிலோவில் தொடங்கி ஒவ்வொருமுறையும் 20 கிலோ அதிகரித்து 200 கிலோ வரை மிக எளிதாக தூக்கிக் காட்டினார். கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது . ஆலையில் வேலை செய்வோர் நெல் மற்றும் அரிசி மூட்டைகளை ஒவ்வொரு மூட்டையாகத் தூக்குவதால் வேலையை முடிப்பதற்கு நேரமாகிறது. பிற வேலைகளைச் செய்ய அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை . அதனால் அந்த வேலைகளை ச் செய்யாமலே விட்டுவிடுகிறார்கள் .இந்த சர்க்கஸ் வித்தைக்காரனை வேலைக்கு அமர்த்தினால் , ஒரே சமயத்தில் இரண்டு மூட்டைகளை எளிதாகத் தூக்கி வேலையை முடிப்பான். மற்ற வேலைகளை செய்யவும் நேரம் கிடைக்கும் என்று ஆலை அதிபர் நினைத்து அந்த சர்க்கஸ் வித்தைக் காரனை வேலைக்கு அழைத்தார் . அவனும் ஒப்புக் கொண்டு வேலைக்குச் சேர்ந்தான் . சில நாட்கள் இரண்டு இரண்டு மூட்டைகளாகத் தூக்கி சுறுசுறுப்பாக வேலை செய்தான். அதன் பிறகு அவனிடம் உற்சாகம் குன்றிப்போய் , ஒரு மூட்டை தூக்குவதற்கே கஷ்டப்பட்டான் . இந்தக் கவனித்த அந்த ஆலை அதிபர் அவனைக் கூப்பிட்டுக் கேட்டார், " நீ சர்க்கஸில் வேலை செய்யும் போது 200 கிலோ வரை எளிதாகத் தூக்கிக் காட்டினாயே. இப்பொழுது 75 கிலோ மூட்டையை உன்னால் தூக்க முடிய விலையே . ஏன் உடல் நலமில்லையா" என்று கேட்டார்.
அதற்கு அந்த வித்தைக்காரன் " ஐயா , சர்க்கஸில் வேலை செய்யும் போது ஒவ்வொருமுறையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவார்கள் . அந்த உற்சாகம் என்னை மேலும் கடின வேலைகளைச் செய்யத் தூண்டும். அனால் இங்கே என்னை உற்சாகமூட்ட யாருமில்லை. " என்றான். உண்மைதான் . உடல் வலிமைகோடு மன வலிமையையும் இணையும் போதுதான் ஒன்றின் தகுதிக்கு மீறிய செயல்களை செய்ய முடிகின்றது .மாணவர்களின் மன வலிமைக்கு பாராட்டு என்பது இந்த வித்தைக்காரனுக்கு கொடுக்கப்படும் உற்சாகம் போன்றது . நல்ல காரியங்களை ச் செய்யும் ஒவ்வொரு முறையும் அல்லது முயற்சிக்கும் போதும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்த பாராட்டத் தவறக் கூடாது. பாராட்டு உண்மையானதாக இருக்கும் போது அது மனதிற்குள் ஏற்படுத்தும் மாற்றங்களும் உண்மையானதாவே இருக்கும் .

No comments:
Post a Comment