Tuesday, August 25, 2026

நாட்டு மக்களில் இரு பிரிவினர் - சேவை செய்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆள்பவர்கள் என்றாலும் அரசர்கள் அதிகாரமும், செல்வாக்குமிக்கவர்கள். மற்றொரு பிரிவினர் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டுள்ள ஆளப்படுபவர்கள். அரசியவாதிகளும் ,அரசு அதிகாரிகளும் ஆட்சியாளர்களுக்கும் ,அரசு வருவாய்துறை சார்ந்த பணியாளர் களும் அரசு அதிகாரிகளுக்கும் காலப்போக்கில் தொண்டர்களாக மாறி சங்கிலித் தொடர் போன்ற ஒரு பெரிய கட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டுவிடுகின்றார்கள். முதல் பிரிவினர் வசதி மற்றும் பொருள் மீது கொண்டுள்ள தீராத ஆசைக்கு மக்களின் உழைப்பைச் சுரண்டுகின்றார்கள் .அரசின் நீதியைத் தனதாக்கிக் கொள்கின்றார்கள் . செலவழித்து விட்டதாக கணக்குக் காட்டி நிதி ப் பற்றாக்குறையை மக்கள் மீது சுமத்திவிடுகின்றார்கள் .இரண்டாம் பிரிவினருள்மேல்தட்டு மக்கள் அரசின் அனுமதியாலும் அரசின் தயவாலும் அதிகம் சம்பாதிப்பவர்கள் .இவர்கள் எந்த நிலையிலும் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில்லை. மாறாக ஆள்பவர்களின் புகழ்பாடி தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றார்கள். இடைத்தட்டு மக்கள் எப்போதும் இருவேறு வகையினர் . எதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி எப்போதும் விவாதம் பண்ணிக்கொண்டே இருப்பார்கள் ஒருவர் அரசுக்கு ஆதரவாகப் பேசினால் மற்றொருவர் எதிர்த்துப் பேசுவார் .கீழ்த்தட்டு மக்கள் அரசு ஏதாவது இலவசம் தறாதா என்று ஏங்கிக் கொண்டே இருப்பார்கள் . என்றைக்காவது பயன் கிடைக்கும் என்று அரசை எப்போதும் புகழ் பாடிக்கொண்டே இருப்பார்கள். இடைத்தட்டு மக்களில் அரசுக்கு ஆதரவாளர்களும் ,கீழ்த்தட்டு மக்களில் அரசின் போலி வாக்குறுதிகளை நம்புகின்றவர்களும் ஆட்சியாளர்களுக்கு நடமாடும் விளம்பரங்களாகத் திகழ்கிறார்கள்.

No comments:

Post a Comment