Showing posts with label public suggestion. Show all posts
Showing posts with label public suggestion. Show all posts

Thursday, February 12, 2026

 ஒரு  அமைப்பு இன்றி , வல்லுநர் குழு இன்றி ,  உங்களுக்கு விருது வழங்குகின்றோம் என்றும், கௌரவ முனைவர் பட்டம் வழங்குகின்றோம் என்றும் ,உங்கள் கட்டுரைகள் ,நூல்கள் இவற்றை சரிபார்த்து வெளியிடுவதற்கு ஆலோசனை வழங்குகின்றோம் என்றும்  புதிது புதிதாக பணம் கறக்கும் தொழிலை உண்டாக்கியிருக்கின்றார்கள் . 

ஒருவருடைய சிறப்புத் தகுதியைப் பெருமைப்படுத்துவதற்காக வழங்கப்படும் விருதுகள்  இன்று விற்பனைப்  பொருளாகிவருகின்றன. இனிமேல் பணம் உள்ளவனுக்கு மட்டுமே விருதுகள் கிடைக்கும் நிலை உருவாகும்              

Tuesday, February 10, 2026

 விஞ்ஞானப் பூர்வமாக ஊழலைச் செய்து மக்களையும் நாட்டையும் தொடர்ந்து ஏமாற்றி வரும்போது , சட்டமும் நீதி மன்றமும்  விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் . அரசாங்கத்தின் அனைத்து அமைப்புக்களும் மக்களின் நல வாழ்விற்கு உறுதியளிப்பதற்கு மக்களால் ஏற்படுத்தப்பட்டவை . அரசியல்வாதிகளை விட நீதிமன்றமே அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கவேண்டும். நேர்மையானவர்களே நீதிபதிகளாகவும் , அரசாலும் நீதிபதிகளாலும்  அங்கீகரிக்கப்பட்டவர்களே  வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்படவேண்டும் . அதிகாரம் தவறானவர்களின் கைகளில் அடைக்கலமாகக் கூடாது  என்பதில் நாம் எல்லோரும் விழ்ப்புணர்வுடன் செயல்படவேண்டும்.