Tuesday, September 1, 2026

மக்களிடம் பிரபலமாகாதவர்கள் எவரும் அரசியலில் மேல் நிலைக்கு வரமுடியாது . மக்களுக்கு சிறிதும் அறிமுகம் இல்லாதவர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவலில் அரசியலில் நுழைந்தால் பெரும்பாலும் அவர்கள் தோல்வியைத்தான் சந்திக்கின்றார்கள் .அதனால் அரசியலுக்கு வர விரும்பும் ஒரு புதியவர் ஏற்கனவே அரசியலில் இருப்பவர்களிடம் ஒரு அடியாளாக ,தொண்டனாக இணைந்து கொள்கின்றார்கள்.பெரும்பாலான காலத்திற்கு அவர்கள் தங்கள் தலைவனுக்காகவே சேவைசெய்து (மக்களுக்காக இல்லை )அரசியலில் ஒரு நிலையை எட்டுவதற்கு முன்பாகவே வாழ்க்கையை நிறைவு செய்து விடுகின்றார்கள் .இதை விரும்பாதவர்கள் , கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குகிறார்கள் .புதிய கட்சிக்கு புதிய கொள்கையெல்லாம் கிடையாது கட்சிகளுக்கு கொள்கை என்பது மக்கள் நலத் திட்டங்களை முன்மொழிவது மட்டுமே.

No comments:

Post a Comment