விஞ்ஞானப் பூர்வமாக ஊழலைச் செய்து மக்களையும் நாட்டையும் தொடர்ந்து ஏமாற்றி வரும்போது , சட்டமும் நீதி மன்றமும் விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் . அரசாங்கத்தின் அனைத்து அமைப்புக்களும் மக்களின் நல வாழ்விற்கு உறுதியளிப்பதற்கு மக்களால் ஏற்படுத்தப்பட்டவை . அரசியல்வாதிகளை விட நீதிமன்றமே அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கவேண்டும். நேர்மையானவர்களே நீதிபதிகளாகவும் , அரசாலும் நீதிபதிகளாலும் அங்கீகரிக்கப்பட்டவர்களே வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்படவேண்டும் . அதிகாரம் தவறானவர்களின் கைகளில் அடைக்கலமாகக் கூடாது என்பதில் நாம் எல்லோரும் விழ்ப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
No comments:
Post a Comment