Sunday, May 25, 2025

 The first (1s) orbit can accommodate two electrons , but in the hydrogen atom its first orbit cann't be filled with two electrons . It is possible when one more proton is added within the nucleus (Helium atom). 

Two electrons cannot occupy the first orbit (or the 1s orbital) of the hydrogen atom because of the Pauli Exclusion Principle. This principle states that no two electrons in the same atom can have the same set of all four quantum numbers. In the first orbit, there is only one possible orbital (1s), and it can only accommodate two electrons, which must have opposite spins (spin up and spin down)

 

If one more electron is allowed in the first orbit of hydrogen , its total energy becomes positive or zero and hence it moves away from the nucleus.

The Kinetic energy of the electron = (1/2) m v^2  and for both the electrons which are identical K.E = m v^2

Electrostatic force (attraction) due to the nucleus = e^2 / Kr^2   where K =  4πεo . Since both the electrons are in the same orbit ,there must be mutual interaction between them, that is why they attain stability by staying exactly diametrically opposite. Electrostatic force (repulsion) due to the second electron  e^2 / 4Kr^2. The resultant force e^2 / Kr^2 -  e^2 / 4Kr^2  = (3/4) e^2 / Kr^2 .It is counterbalanced by centrifugal force mv^2/r .K.E of both electrons =  (3/4) e^2 / Kr .

The potential energy of the first electron due to the presence of the nucleus only = - e^2 / Kr and the potential energy due to the presence of the second electron in the same orbit  + e^2 /2Kr (electron-electron system) .This is shared equally by both the electrons. The total energy associated with the system =  (3/4) e^2 / Kr - e^2 / Kr + e^2 /2Kr = ( e^2 /4Kr)  .  The second electron  feels the effective charge  to be zero           Since there is no binding energy , the system gets transformed into normal hydrogen atom by expelling out the second  electron.  

In the helium atom the two electrons in the 1s orbit are stable with positive binding energy.   The Kinetic energy of an electron = (1/2) m v^2  and for both the electrons which are identical in the system K.E = m v2

 K.E = 2 e^2 /Kr^2 - e^2/ 4Kr^2 = (7/4) e^2/Kr^2  = mv^2 /r 

Total kinetic energy of the electrons  = mv^2  = (7/4) e^2/Kr

Potential energy of elecron 1 = - 2 e^2 /Kr +  e^2 / 2Kr ( shared by both the electrons) 

potential energy of electron 2 =   - 2 e^2 /Kr

Total potential energy of the electron-electron system = - (7/2) e^2 /Kr

Sum of K.E and P.E = - (7/4) e^2/Kr

which gives enough binding energy to the system. 


Friday, May 23, 2025

  மக்களில் பெரும் பணக்காரர்கள் ,நடுத்தர மக்கள் , ஏழை என்று மூன்று பிரிவினர் நீண்டகாலமாக மாற்றமின்றி இருந்து வருகின்றார்கள். பணக்காரர்களுக்கு அளவுக்கு மீறிய கடன் மற்றும் சலுகைகள் கொடுத்து , தேர்தல் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளவும்  , அவர்களுடைய நிறுவங்களின் முதலீடு செய்யாமலேயே பங்குதாரர்களாக இணையவும் ,தவறான வழிகளில் பெற்ற சம்பாத்தியங்களை பாதுகாப்பாக முதலீடு செய்யவும்  நட்புக்கொள்கின்றார்கள்.  இவர்கள் கட்டும் வரியை விட வாங்கிய வங்கிக் கடன் அதிகம் , கடன் தள்ளுபடியும் அதிகம் . வரியே சிறிதும் கட்டமுடியாத அளவிற்கு வாழும் ஏழைகளைகளின் உழைப்பை ச் சுரண்டிவிட்டு ,அவர்கள் அப்படி வாழ்வதற்கு இந்த அரசாங்கம் காரணமில்லை என்றும் , வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல அவ்வப்போது வள்ளல் போல  மக்கள் வரிப்பணத்தில் இலவசங்களை அள்ளி வீசுகிறார்கள் . இதற்காக ஒதுக்கிய நிதியில் பாதி அளவுகூட மக்களைச் சென்றடைவதில்லை . இடையிலேயே அரசியல்வாதிகளாலும் ,அதிகாரிகளினால்  எடுத்துக்கொள்ளப்படுகின்றன . செல்வந்தர்களுக்கு கடன் மற்றும் சலுகைகள் கொடுப்பதற்கும் , ஏழைகளுக்கு இலவசங்கள் கொடுத்து  கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்கும் ஒட்டு பெறுவதற்கும் ,பலிஆடுகளாக இருப்பது நடுத்தர மக்களே . பணக் காரர்களாகி விடுவோம் என்று    நேர்மையாக உழைத்து ப் பெற்ற   சம்பாத்தியத்தில் பாதிக்கு மேல் வரி வரி என்று கட்டி  ஏழையாகிவருகின்றார்கள் . அரசாங்கம் இருக்கும் நிதிக்கு ஏற்ப திட்டம் போடவேண்டும் . திட்டத்திற்கு ஏற்ப  வரி விதிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் . நாட்டின் வளத்தை மேபடுத்தி ,தொழில்துறையில் புதுமை புகுத்தி ,வர்த்தகத்தை ப் பெருக்கி நாட்டு மக்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்துவதே உண்மையான ஆட்சியாளர்களின் கொள்கை . இதில் மாறுபட்ட கருத்துவேறெதுவும் இருக்கமுடியாது 

Saturday, May 3, 2025

  இந்தியா தடையின்றி முன்னேறவேண்டும் ,தன்னிறைவு பெற்று ஒரு வல்லரசு நாடாக விளங்கவேண்டும் , உலக மக்களுக்கு இந்தியா ஒரு சுபிட்சமான நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது நம் ஒருமித்த விருப்பம் என்றாலும் அது எல்லோரிடத்திலும் வெறும் எண்ணங்களாக மட்டும் முடங்கிப் போயிருக்கின்றது . எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் தெளிவான உறுதியான நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் இது என்றைக்கும் கனவுலகக் கொள்கையாக மட்டுமே இருக்கும் . முதலில் அதிகாரமிக்க, செயல்களை மக்களிடையே முடுக்கிவிடும்.வாய்ப்புள்ள ஆட்சியாளர்கள் மாறவேண்டும். அவர்களுக்கு நாடும் நாட்டு மக்களும் தான் முக்கியமே ஒழிய எதிர்க்கட்சியினர் இல்லை. அவர்களுடைய செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை உடையதாக இருந்தால் , மக்களுக்கு பயனு ள்ளதாக இருந்தால் , தன்னலத்தை மறைவு இல்லாதிருந்தால் அவைகளுக்கு விளம்பரம் தேவையில்லை . விமர்சனங்களும் எழுவதில்லை .மக்கள் ஆதரவு இயல்பாகவே வளர்ந்துவிடும் . மாறாக அதிகாரம் என் கையில் ,என் முடிவே மகேசன் முடிவு என்று ஆணவத்துடன் செயல்பட்டால் , நல்லாட்சியை ஒருநாளும் ஏற்படுத்தமுடியாது ,. ஆட்சியாளர்கள் தங்களுடைய சேவையை விரிவு படுத்தவும் ,மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திட்டமிடும் போது பொதுநலத்தில் அக்கறையுள்ள ,தன்னலமற்ற தொண்டர்களை இணைத்துக்கொள்ளவேண்டும் .அவ்வப்போது அவர்களுடைய நேர்மைத்தனத்தை மதிப்பீடு செய்து தகுந்த திருத்தங்களைச் செய்யவேண்டும். மக்கள் நலனில் அக்கறை காட்டாத ,பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதிகாரிகளைக் கண்காணித்து களையெடுக்கவேண்டும். .தீயவர்களாக இருந்துகொண்டு தீயவர்களை யும் சேர்த்துக்கொண்டு தீமைகளை செய்து கொண்டே இருந்தால் நாடு இனி திருத்தவே முடியாது என்ற இழி நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் . காவல்துறையும் ,நீதித்துறையும் மக்களின் பாதுகாப்புக்கானது . ஆட்சியாளர்கள் அதை அவர்களுடைய மறைவொழுக்க நடவடிக்கை களுக்கு பாதுகாப்புக் கவசமாக மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடாது . ஏனெனில் இதை எதிர்கட்சியினரும் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் செய்ய வாய்ப்பிருப்பதால் .ஆட்சியாளர்களாலும்  எதிர்கட்சியினராலும் நாடு சீரழிந்து போவதற்கான வாய்ப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

Tuesday, April 29, 2025

 ஓய்வூதியம்  என்பது ஒருவர் வயது மூப்பின் காரணமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் தன்னுடைய மற்றும் அவரை நம்பி இருக்கின்ற அவருடைய குடும்பத்தினருடைய வாழ்வாதாரத்தை பாதுக்காப்பதற்காக க் கொடுக்கப்படும் நிதி ஆகும். இது MLA  க்களுக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பதவிக்காலம் முடிந்த பின்பு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வென்று MLA  ஆக முடியும் . இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றார்கள் . அரசு ஊழியர்கள் அப்படி புதிய பணிபெறமுடியாது .  MLA க்கள் தங்களுடைய பதவிக்காலத்தில் அளவுக்கு மீறிய அளவில் சம்பாதித்து விடுகின்றார்கள் ..அரசியல் என்பது மக்களுக்கான சேவை. சில பல சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் சேவைக்காக வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெறுவது தவறு. .MLA  க்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள   இது போல இன்ப அதிர்ச்சி தரக்கூடிய அறிவிப்புக்களை  அவ்வப்போது அறிவிக்கவேண்டிது அவசியமாகின்றது .ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி மக்களும் இதை க் கடந்து தான் செல்லவேண்டும் 

Saturday, April 26, 2025

 பொறுப்புத் துறப்பு தன் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நினைத்தே பெரும்பாலான இந்தியத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள் . இந்தியாவின் முன்னேற்றம் இந்தியமக்களால்  திட்டமிடப்படுவதை விட  பொறுப்புக்களைத் துறந்த ஆட்சியாளர்களின் தலைவரால்  மட்டுமே முடிவு செய்யப்படுவதால்  நாட்டின் முன்னேற்றம் மோசமான விமர்சனங்களோடு முடிவடைத்துவிடுகின்றது. மக்களுடைய வரிப்பணம் நாட்டின் கட்டமைப்பிற்கோ, மக்களின் நலனுக்கோ பயன்படுத்தப்படுவதை விட விமர்சனங்களைச் சரிக்கட்டும் வெட்டிச் செலவினங்களோடு காணாமற் போய்விடுகின்றது பொறுப்புத் துறந்த ஆட்சியாளர்களை தண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை  ,பதவி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பும் சட்டத்தை நீதிமன்றம் இயற்றவேண்டும். இதை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் ? 

Wednesday, April 23, 2025

 எத்துணை முறை முயன்றாலும் ஒரே ஒரு நல்ல தலைவர் கூட நாட்டுக்கு க்கிடைப்பதில்லை .நல்ல தலைவர் உருவாவதும் உருவாகாமல் இருப்பதும் உண்மையில் பிறர் தர வாரா . அது உண்மையில் தலைவராக வரவேண்டும் என்பாரின் எண்ணங்களே.தூய்மையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நம்பிக்கையோடு செயல்படுபர்களே நல்ல தலைவராக உருவாகிறார்கள் . தீயஎண்ணங்களின் ஆதிக்கத்திற்கு அடிமையான   தலைவர்கள்  நாட்டின் முன்னேற்றத்திற்கு அகத்தடையாக இருக்கின்றார்கள்.எவரும் அகத்தடைகளை உணர்வதும் இல்லை ஒப்புக்கொள்வதுமில்லை ,இதற்கு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களும் விதிவிலக்கில்லை. தங்களுடைய மறைவொழுக்கத்தை மறைப்பதற்காக அரசாங்கத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தி போலி விளம்பரங்களை ஊடங்கள் மூலம் தினந்தோறும் அள்ளிவீசுகின்றார்கள் . இந்த போலி விளம்பரங்களுக்கு ஒப்புதல் கொடுத்து உலகெங்கும் பரப்புவதற்கென்றே பல போலி அரசியல்வாதிகள் தலைவரைச் சுற்றி மொய்த்து வருகின்றார்கள் .தலைவரின் கூட்டாளிகள் தீயவர்கள் என்றால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத  தலைவரும் தீயவர்தான் .  பெரும்பாலும் ஒரு தலைவர் தன்னுடன் இணைத்து செயல்படும் கூட்டாளிகளின் ஒரு நேர்மையாளரைக்கூட சேர்த்துக்கொள்வதில்லை. . அப்படிச் சேர்த்துக்கொண்டால் அவருடைய மறைவொழுக்கம் அவர் மூலமாக வெளிப்பட்டு அரசியல் வாழ்க்கையே மூழ்கடிக்கப்படலாம்  . தன்னுடைய கூட்டாளிகள் யாரெல்லாம் தீயவர்கள் என்பதை ஒரு தலைவர் தனக்குள்ள வலிமையான அதிகாரத்தினால் அறிந்திருப்பர் .இதை தலைவர் உணரவில்லை என்று கூறுவதை விட கூட்டாளிகளின் வலிமையான பாதுகாப்பு என்று கருதி தொடர்ந்து அனுமதிக்கிறார் என்று தான் நினைக்கவேண்டியிருக்கு .        


Wednesday, April 9, 2025

 எல்லோரும் இன்றைக்கு இந்து மதம் பற்றி பேசுகின்றார்கள் . எனக்குத் தெரிந்த வரை யாரும் இந்து மதம் இல்லை வேறு எந்த மதம் பற்றியும் பேசுவதற்கு அறுகதையில்லாதவர்கள். உலகில் எல்லோரும் ஏதாவதொரு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் முழுமையாக அவர்களுடைய மதத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக இருப்பதில்லை. அப்படியிருக்க ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை விமர்சிப்பது தவறாகும் உண்மையில் யாருக்கும் அவர்களுடைய  மதத்தைப்பற்றிய தெளிவு இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே உயர்ந்தது  என்று நினைத்துக்கொண்டு பிற மதங்களில் குறை காண்கிறார்கள் .  

       மதம் என்பது இனிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையான ஒவ்வொருவரும் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய வாழ்வியல் ஒழுக்கங்களாகும்.  மதம் எம்மதமாக இருந்தாலும் அதன் அடிப்படையான கொள்கை இது மட்டுமே.  இனிய வாழ்க்கை வாழ இயற்கையைப் பின்பற்றினாலே போதும். அந்தவகையில் இயற்கை எல்லோருக்குமான ஒரு பொதுவான மதம். கடவுள் ஒருவரே என்பதைப்போல மதமும் ஒன்றே .

      வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித்து வாழ்ந்து விடமுடியாது. பிறரைச் சார்ந்து வாழவேண்டியிருப்பதால் வாழ்க்கை , சமுதாய வாழ்க்கையாகின்றது .சமுதாய வாழ்க்கை கொஞ்சம் வேறுபட்டது . அதில் தனிமனித வொழுக்கத்தோடு சமுதாய நலனுக்காக பொதுவொழுக்கமும் சேர்ந்திருக்கிறது .  சுய முன்னேற்றம் என்பது  ஒவ்வொரு மனதர்களுக்குள்ளும் இருக்கும் மிகவும் வலிமையான உந்து சக்தி . பொருளாதார ஏற்றத்தைத் தரும் சுய முன்னேற்றத்தில்  எல்லோருக்கும் சம வாய்ப்பு உள்ளது என்றாலும் அதில்  முன்னிலை பெற திறமையை விட்டுவிட்டு மதம் என்ற பெயரால் புதிய நிபந்தனைகளை வரையறுத்துக் கொள்ளும் பழக்கம் உட்புந்தது.பின்னால் வந்தவர்கள் பொருளாதாரம் ,அரசியல் , தொழில் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் கூடுதல் ஆதாயம் பெற   மதத்தில்  புதிய விதிகளையும் புகுத்தினார்கள். இந்த கூடுதல்விதிகள்  பெரும்பாலும் இயற்கைக்கு  முரண்பட்டதாகவே இருக்கும் . சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று ஒரு சமுதாயத்தையே மாற்றுவதற்கு சிலபல புதிய கோட்பாடுகளை உட்புகுத்தி புதிய மதங்களை ஏற்படுத்தினார்கள்   அப்போது இயற்கை என்ற மதம் சுய நலம் மிக்க மனிதர்களால்  பல மதங்களாகப் பிரிந்து செயற்கையானது . நம் பிரிவினைக்கு பல காரணங்கள் புனைந்து கூறப்படுகின்றன ஆனால் ஒற்றுமைக்குத் தான் ஒரு காரணமும் இல்லை. ஒருநாள் இந்த உலகம் அழிய நேரிடலாம். அப்போது எல்லா மதமும் பாகுபாடின்றி இயற்கையோடு ஒன்றினையும். 

                           

             புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது

            வளரும் ஆசைக்கு அளவேது

            முடிவேது முடிவேது

            முடிந்தபின் உலகம் நமக்கேது- Kannadasan 

.