Micro aspects of developing inherent skill-2
All the changes that have strong impact on your life are not always taking place slowly and step by step. Infact the process of happening may be prolonged but its root cause is so momentary and sudden.
ஒரு தாக்கத்தை உண்டாக்கி வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் யாவும் மெதுவாகவும்,படிப்படியாகவும் நிகழ்வதில்லை.உண்மையில் நிகழும் வழிமுறை வேண்டுமானால் நெடியதாக இருக்கலாம்.ஆனால் அதன் மூல காரணம் மனதில் நொடிப்பொழுதில் தோன்றியதாகத்தான் இருக்கின்றது.
We witnessed and knew by experience that a small spark can become a big fire suddenly .Likewise, a simple positive and motivational thoughts can change the scenario completely .This is what we call ‘the turning point’.
ஒரு சிறு தீப்பொறி விரைவிலேயே ஒரு பெரிய கொழுந்து விட்டெறியும் ஜுவாலையாக மாறும் என்பதை நாம் தெரிந்திருக்கிறோம்.அதை போல நேர் மறையான,தூண்டு காரணியான எண்ணங்களும் ஒருவருடைய வாழ்கையின் போக்கையே மாற்றி அமைத்து விடுகின்றன.இதைத்தான் நாம் 'திருப்பு முனை’ என்று குறிப்பிடுகின்றோம்
At first a positive thought suppresses its opposite negative thought permanently sticking one’s mind and stop all the progressive steps taken for realizing the change. Most of such negative thoughts are either barrowed blindly or pasted in mind by somebody else and not gathered by learning.
நேர்மையான எண்ணங்கள் அதற்கு எதிரிடையான எதிர் மறை எண்ணங்களை மனதிலிருந்து வெளியேற்றிவிடுகின்றன. இந்த எதிர் மறையான எண்ணங்கள் மனதில் எப்போது குடியேறின என்பது யாருக்கும் தெரியாது. மனதில் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு இவை ஒருவருடைய முன்னேற்ற இயக்கங்களைப் பெரிதும் பாதிக்கின்றன.
When the negative thoughts are erased out, the possibility of getting conceptual arguments does not exist. Due to which one can avoid unwanted delay in various stages of progress- choosing the right path, right decision and right plan, efficient involvement and action with full of confidence.
.எதிர் மறை எண்ணங்கள் அழிக்கப்படும் போது நேர் மறை எண்ணங்களுக்கும் எதிர் மறை எண்ணங்களுக்கும் இடையே இடைவிடாது நடைபெறும் மனப் போராட்டம் இல்லாமற் போவதால் உறுதியான சிந்தனைகளினால் நிச்சியமான முன்னேற்றத்திற்கு ஒரு வழிமுறையை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுகின்றது.
The positive thinking opens plenty of new doors for developmental activities, challenging efforts and continuous fighting. Since it is beneficial to all, it creates new relations and enhances the cordial relationship with them. As they keep on engaging by themselves, the life would be pleasant, interesting, cheerful and meaningful forever.
நேர் மறையான எண்ணங்கள் புதிய மற்றும் தொடர் முயற்சிகளுக்கு வித்திடுகின்றன.மேலும் அவை எல்லோருக்கும் பாதிப்பின்றி இருப்பதுடன் பயனுள்ளதாகவும் இருப்பதால் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடிகின்றது. தொடர்ந்து செயலாற்ற அர்ப்பணித்துக் கொள்வதால் வாழ்க்கை இனிமையாகவும்,மகிழ்ச்சியாகவும்,அர்த்தமுள்ளதாகவும் அமைகின்றது.
The determined efforts taken up by a mountaineer just demonstrates how the big changes could happen in the life of people with positive thinking. A mountaineer miserably failed 3 times to reach the top of the Mount Everest. By looking the peak of the mountain from its bottom, he murmured ‘ Oh! Mount Everest, you won me first time, second time and third time also. But you cannot win always, because you cannot grow hereafter, but I am not like you, I can grow’. The mountaineer may fail few more times, but ultimately he will certainly win. This is the positive thinking that brings big changes in one’s life.
ஒரு மலையேறியால் தீர்மானமாய் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நேர் மறை எண்ணங்களால் சிந்திக்கப் பழக்கப்பட்ட மக்களின் வாழ்கையில் எப்படி பெரிய மாற்றங்கள் விளைகின்றன என்பதைச் சித்தரித்துக் காட்டக்கூடியதாக இருக்கிறது.எவரெஸ்ட் மலை மீது ஏறிய ஒரு மலையேறி தொடர்ந்து மூன்று முறை தோல்வி யடைந்துவிட்டார்.அவர் சோர்வடையவில்லை. மலையடிவாரத்தில் நின்று கொண்டு வெற்றி கொண்ட மலையின் உச்சியைப் பார்த்து, ”ஏ மலையே, நீ முதல் முறை, இரண்டாம் முறை மூன்றாம் முறையும் என்னை வெற்றி பெற்றிருக்கலாம்.ஆனால் எப்போதுமே நீ வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கமுடியாது, ஏனெனில் நீ இதற்கு மேல் ஒரு மில்லி மீட்டர் கூட வளர முடியாது.நான் உன்னைப் போல இல்லை, நான் இன்னும் வளருவேன், இப்பொழுது இல்லாவிட்டாலும் பின்னொரு காலத்தில் என்னால் முடியும்” என்றார். மலையேறி இன்னும் பல முறை கூட தோற்றுப் போகலாம். ஆனால் இறுதியாக அவர் வெற்றி பெறுவார் என்பதை நிச்சியமாகக் கூறலாம்.இது ஒருவருடைய வாழ்கையில் நிகழும் பெரிய மாற்றங்களுக்கு நேர் மறை எண்ணங்கள் எப்படிக் காரணமாக இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கின்றது.
No comments:
Post a Comment