எழுதாத கடிதம்
உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் முதலில் நமக்கு நாமே சரிசெய்து கொள்ள முடியுமா என்றுதான் பார்ப்போம்.முடியாத நிலையில் மருத்துவ மனையை நாடுவோம். மருத்துவ மனை இருக்கிறது, மருத்துவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் மருந்துதான் இல்லை என்றால் அவர் என்ன செய்வார் ? அப்படிப் பட்ட மோசமான நிலையை மக்கள் அறியச் செய்வார் அப்பொழுதாவது நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன்.இது சரி என்றால் பாபா ராம் தேவ் செய்ததும் சரிதான்.இதை ஒரு விளம்பர நாடகம் என்று சொல்வதுதான் விளம்பரம்.ஊழலை ஒழியுங்கள் ஊழலற்ற ஆட்சியை நிறுவுங்கள் என்று மக்கள் கேட்பதும்,மக்களை அப்படிக் கேட்கக் தூண்டுவதும் காலத்தின் கோலம்
இன்றைக்கு தலைவர்கள்,அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகளை விட சாதாரண மக்களே நாட்டுப் பற்று மிக்கவர்களாக இருக்கின்றார்கள் அவர்கள் வாழ்வதற்காகச் சம்பாதிக்கின்றார்கள் வசதிகளுக்காக வரம்பு மீறிச்சம்பாதிக்க விரும்புவதில்லை. பிள்ளைகளின் திருமணத்திற்காக சேமித்த பணத்தையெல்லாம் நேரடியாகச் செலவு செய்வார்கள், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோடிக் கணக்கில் பணத்தை மறைமுகமாகச் செலவு செய்வார்கள் அரசியல்வாதிகள்.இச் செயலே அவர்கள் செய்து பயன் துய்த்த ஊழலை மனத் திரையில் படமாய்க் காட்டுகிறது.ஊழலை ஒழிப்பதில் தயக்கம் இருக்குமெனில் ஒன்று தனக்குத் தானே தண்டனை கொடுக்க நேரிடும் என்பதாக இருக்கலாம் அல்லது நிர்வாகத் திறமை அற்றவர்களாக இருக்கலாம்.வெளி நாடுகளுக்கெல்லாம் சென்று பார்கின்றீர்களே நம் நாடும் அப்படிப்பட்ட வளர்ச்சியைப் பெறவேண்டாமா? அதற்கு உங்களிடம் செயல் படுத்தக் கூடிய திட்டம் ஏதும் இல்லையா? மக்கட் தொகை,வறுமை,தீவிரவாதம் என்றெல்லாம் சொல்லி அந்தரத்தில் பந்தல் போடுவதே உங்களுக்கு கைவந்த கலையாகி விட்டது.வறுமையில் வாடும் இந்தியாவே நீ உண்மையான வளம் காண்பது எப்போது?
ஊழலை ஒழிப்பது நாட்டுக்கு நல்லது.அதனால் நாடு நிச்சியம் வளம் பெறும்.அதில் தயக்கம் காட்டுவதே கேவலமானது.ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் பன்முனைத் திட்டங்களால் விரிவாகவும்,விரைவாகவும்,உறுதியாகவும் தீவிரமான கண்காணிப்புடன் ஒவ்வொரு அரசியல் வாதியும் செயல் பட வேண்டும்.தன் பங்கிற்கு ஏதாவது பேசிவிட்டுப் போவதால் ஒன்றும் பயனில்லை.
.
No comments:
Post a Comment