Monday, March 30, 2026

The secret of long life

நூறாண்டுகள் இல்லை பல நூறாண்டுகள் கூட வாழ்வதற்கு இருக்கும் வாழ்க்கை இரகசியத்தை இயற்கை ஒவ்வொருநாளும் நமக்கு அறிவுறுத் தத் தவறுவதில்லை . இயற்கையின் மவுன மொழியை மொழிபெயர்க்கத் தெரிந்ததால் நீண்ட கால வாழ்க்கைக்கு இயற்கைபின்பற்றும் வழிமுறையை அறிந்துகொள்ளலாம் .இயற்கையில் எல்லாப்பொருட்களும் மூன்று நிலைகள் உண்டு. நாம் அவற்றை இரு வேறு நிலைகளுக்குள் அடக்கிவிடுவதால் மூன்றாவது நிலையின் தனித்துவத்தை அறிந்துகொள்ள முடியாதிருக்கிறது .இயக்க நிலை ஓய்வு நிலை என்று அவற்றை நாம் வகுத்துக்கொண்டாலும் ஓய்வு நிலையில் தாற்காலியக ஓய்வு நிலை என்றும் நிரந்தர ஓய்வு நிலை என்றும் மேலும் இரண்டாகப் பிரிகின்றன. தாற்காலியக ஓய்வு நிலை என்பது இயக்கமற்ற நிலை என்றாலும் பழுதின்றி இருப்பதால் செயல்பாடு நிலைக்கு மீட்ருருவாக்கம் செய்துகொள்ளமுடியும் . நிரந்தர ஓய்வு நிலை என்பது பழுதுற்ற நிலை என்பதால் அதை மீண்டும் செயல்பாடு நிலைக்கு புறஉதவியின்றி நிலைமாற்றம் செய்துகொள்ள முடிவதில்லை . உயிர் வாழ்க்கையிலும் மனிதர்களுக்கு மூன்று நிலைகள் உள்ளன . முதலாவது வாழ்க்கை என்பது செயல்படு நிலை . இயக்க நிலையில் ஆற்றல் செயல்வழி இழக்கப்படுவதால் பலவீனப்பட்டு இல்லாதிருக்கும் நிலை படிப்படியாக நிலைமாற்றம் தூண்டப்படுகின்றது இறுதியில் மரணம் ஏற்படுகின்றது. இதை நாம் பிறப்பு இறப்பு என்று குறிப்பிடுகின்றோம். இயற்கையைப் பொறுத்தமட்டில் உயிருள்ளவை ,உயிரற்றவை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது .நுண்ணிய அணுவோ அல்லது பெரிய அண்டமோ எல்லாம் இயற்கையின் கண்ணோட்டத்தில் வெறும் பொருட்கள்தான் உயிரற்ற பொருட்களுக்கு எப்படி மூன்று நிலைகள் இருக்கின்றனவோ அதுபோல உயிருள்ள பொருட்களுக்கும் இருக்கவேண்டும். மீட்டுருவாக்கம் செய்துகொள்ளக்கூடிய அமைதி நிலை ஒன்று வாழ்க்கையில் இருக்க வேண்டும். மரணம் என்பது நிரந்தர இயக்கமற்ற ஓய்வு நிலை .உறக்கம் என்பது தற்காலியக ஓய்வு நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு .உறக்கத்தின் போது ஆற்றல் இழக்கப்படும் வீதம் குறைவாக இருப்பதால் வாழ்நாள் அதிகரிக்கின்றது .உள்ளுறுப்புக்கள் பழுதுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. தியானம் செய்யும்போது ஆற்றல் வீண் விரயமாவதில்லை . உள்ளுறுப்புக்கள் இயக்குவதற்குத் தேவையான குறைந்த அளவு ஆற்றலே போதுமானது. நெல்லிக்கனி , சில வகையான மூலிகைகள் சுக்கு ,நாவற் பழம் ,நீர் போன்றவை பல நாட்கள் உணவின்றி உயிர்வாழ்வதற்கு உறுதுணை புரிகின்றன . இவை உள்ளுறுப்புக்களின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ஒவ்வொருநாளும் எவ்வளவு தியானிக்கின்றோமோ அவ்வளவு வாழ்நாள் கூடுகின்றது என்பது நம் சித்தர்கள் அறிந்து கொண்டு பயன்படுத்திய வாழ்வியல் முறை. . ,

No comments:

Post a Comment