இந்த உலகம் தாங்காதைய்யா தாங்காது
இன்னொரு போரைத் தாங்காது
முதலிரு போர்கள் விட்டுச் சென்ற சுவடுகள்
இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை
இன்றும் தொடரும் விதிமீறிய இன்னல்கள்
இறைவனே இன்னும் அழுது ஓயவில்லை
பெற்ற பிள்ளைகளை மீண்டும் இழக்கலாமா-இறுதிவரை
உற்ற துணைகள் உதவிக்கு இல்லாமற்போகலாமா
கட்டிய வீடு கண்முன்னே இடிந்து போகலாமா
ஒட்டிய பொருட்கள் எரிந்து சாம்பலாகலாமா
பசியோடு பலநாட்கள் பருகத் தண்ணீரில்லை
நாடுஇருந்தும் நாடோடியாய் நடைப்பயணம்
அங்கே அறிவுக்கும் பொருளுக்கும் மதிப்பில்லை
மக்களை ஆளவந்த அறிவிலிகளே,
புத்தியை அடகு வைத்துவிட்டா நாடாளாவந்தீர்கள்
இந்த உலகம் தாங்காதைய்யா தாங்காது
இன்னொரு போரைத் தாங்காது
No comments:
Post a Comment