Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Saturday, May 30, 2026
இந்திய அரசியல்வாதிகள் இந்தியர்களுக்காக பணிபுரிவதில்லை. இந்திய அரசியல்வாதிகள் இந்தியர்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை. இந்திய அரசியல்வாதிகள் பதவி கிடைத்தவுடன் இந்தியர்களைப் போல வாழ்வதில்லை . பதவி ஏற்பதற்கு முன்பு எப்படி வாழ்ந்தார்களோ அது போல பதவி கிடைத்தபின்பு தொடர்வதில்லை. ஆடம்பரச் செலவுகளைச் செய்து மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றிவிடுகின்றர்கள்.தொலைக் காட்சியுடன் கூடிய நேரடித் தொலை பேசி மூலம் பேசி முடிக்கவேண்டிய விஷயங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்கின்றார்கள். அவர்களைப் பாதுக்காக்க சில ஆயிரம் பேர்கள். சொகுசுக் கார்கள் ,பின் தொடர்ந்து வர நூற்றுக்கணக்கான கார்கள் . தட்டுப்பாடில்லாத எரிபொருள் . அன்றைக்கு நாட்டின் ஒரு பேரரசன் கூட இப்படி வாழ்ந்ததில்லை . மக்களை வாழவைக்க வேண்டிய அரசாங்கம் ஆள்பவர்களை மட்டும் வாழவைக்கின்றது . எல்லோருக்குமான வாய்ப்புக் களை ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கும் சூழலை நிலைப்படுத்திக் கொண்டதால் மாற்றம் எப்போதும் ஏமாற்றமாகவே இருக்கின்றது. நிலையான,நிறைவானமாற்றங்களைஅரசியல்வாதிகளால் ஏற்படுத்தவே முடியாது. அதைச் செய்துமுடிக்கும் வல்லமையும் , பொறுப்பும் சட்ட வல்லுனர்களிடம் மட்டுமே இருக்கின்றது. உச்ச நீதிமற்ற நீதிபதிகள் நாட்டுமக்களின் நலனில் அக்கறை கொண்டு இதில் தலையிட வேண்டுகின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment