ஆட்சியாளர்கள் அரசின் நிதியை அவர்கள் விருப்பம் போல திட்டமிட்டு பெரும்பாலும் வீண் செலவுகளில் அதிகம் வீணாக்கிவிடுகின்றார்கள் .சரியாகத் திட்டமிட்டு சிக்கனமாகச் செலவு செய்தால் மக்களிடம் அதிக வரி வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படாது . வீண்செலவுகளாலும் , ஊழல்களினாலும் அரசின் நிதி எவ்வளவு இருந்தாலும் ஒவ்வொரு முறையும் , ஒவ்வொரு நிதியாண்டும் பற்றாக்குறையோடுதான் முடிவடைகின்றது . .மக்களுடைய ஆதரவு வேண்டும் என்பதற்காக மக்களை எப்படியாவது திருப்திப்படுத்தவேண்டும் என்ற நோக்கமே அவர்களிடம் மேலோங்கி இருக்கின்றது .இதற்க்கு அவர்கள் கையிலெடுத்த ஆயுதமே இலவசம் அரசியல்வாதி கள் பொருளாதார நிபுணர்கள் இல்லை முழுமையான உரிமையுள்ள கல்வி அறிவும் இல்லை. வெற்றுப் பேச்சும் விளம்பரமும் தான் அவர்களிடம் . அரசின் நிதியை அள்ளிக்கொடுத்து உண்மையான நேர்மையான அதிகாரிகளையும் பொருளாதார நிபுணர்களையும் விலைக்கு வாங்கிவிடுகின்றார்கள் . அவர்கள் எப்போதும் அரசுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள் .அரசின் தவறுகளை ச் சுட்டிக்காட்ட மாட்டார்கள் .எவர் ஆட்சி புரிந்தாலும் மக்கள் நலன் ஏனென்றும் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் உரிமையுள்ள கல்வி பெற்ற பொருளாதார நிபுணர்கள் , சமூக ஆர்வலர்கள் , நீதிபதிகள் , கல்வியாளர்கள் நிறைந்த ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் ஒப்புதல் பெற்ற பின்பே அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தலாம் என்ற நெறிமுறையை ஏற்படுத்தவேண்டும்
No comments:
Post a Comment