இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலான பின்பும் மக்கள் எல்லோரும் உயரிய வாழ்க்கையை எட்டவில்லை. மக்களிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வு அவர்களுக்கு அவர்களே எதிரி என்ற எண்ணத்தை வளர்த்துவிட்டிருக்கின்றது.
காலங்காலமாய் சமுதாய நலத்தை நோக்கமாய்க் கொண்ட சான்றோர்கள் பலர் முயன்றும் அதில் யாருமே
வெற்றி பெற்றதில்லை இந்தியாவில் இன்னும் தீர்வாகாத பிரச்சனைகள் பல இருக்கின்றன.
இதற்கு யார் காரணம் மக்களா இல்லை ஆட்சியாளர்களா
? நான் மக்களைக் குறை கூறவே மாட்டேன் . குறையுள்ள மக்களை உருவாக்கி சமுதாயமே குறையுள்ள
மக்கள் நிறைந்ததாக மாற்றி அமைத்ததிற்கு முழுப் பொறுப்புள்ள ஆட்சியாளர்களைத் தான் குறை
கூறுவேன் . இந்தப் பிரச்சனைகளை பிரச்சனைகளாகவே இருக்கும் வரைதான்
தங்கள் ஆட்சியில் இருக்கமுடியும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களின் மதியை மாற்றி விட்டது
.ஆட்சியார்களின் நோக்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் மேம்படுத்துவதில் மட்டுமே இல்லை.
ஆட்சியைப் பறிக்க முயலும் அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டுவதையே முழு நேரப்பணியாகக் கொண்டுள்ளார்கள்.
இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் யாதொரு பயனும் இல்லை. பகைமை மட்டுமே வளரும்.
அதனால் நிச்சியமாக ,நிரந்தரமான அழிவு உண்டாகும். அந்த அழிவையும் அரசியல்வாதிகள் அவர்களைப்
பாதிக்கமால் மக்கள் பாதிக்கப்படுமாறு மாற்றிவிடுகின்றார்கள் .
இந்தியாவில் அரசியல் அரசியலாவே இல்லை .அரசியலில் அரசியல் அநாகரிகமே
விஞ்சி இருக்கின்றது .அரசியல் ஞானம் இல்லாதவர்களே , சிறிதளவு கூட .தகுதி இல்லாதவர்களே
ஆட்சி புரிய ஆசைப்படுகிறார்கள்.இந்த ஆசைக்கு அடிமையாகி மக்களை ஏமாற்ற அளவில்லாத வாக்குறுதிகளை
அள்ளி வீசுகிறார்கள் .பெரும்பாலான வாக்குறுதிகள் நடைமுறைச் சாத்தியம் இல்லாததாக இருக்கின்றது
.ஒட்டுக்குப் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் .வாழ்வாதாரம் தேடித்தேடி தோற்றுப்போன
பெரும்பாலான மக்கள் இப்படிக் கிடைக்கும் பணத்தை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டுவிடுகின்றார்கள்.மக்களை
வளப்படுத்தி நாட்டை வளப்படுத்துவதை விட தங்களை வளப்படுத்திக்கொள்வதிலேயே அதிக முயற்சி
எடுத்துக்கொள்கின்றார்கள் . அரசியல் வாதிகளின் இந்த போக்கு இன்னும் என்னென்ன கொடுமைகளை உருவாக்கும் என்பதை மக்கள் ஒரு கன நேரம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment