அரசியல்வாதிகளின் உள்ளார்ந்த நோக்கம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதுதான் . அதை நண்பன் செய்தாலென்ன , எதிரி செய்தாலென்ன . எதிரி செய்தால் வேலை மிச்சம் .அவர் செய்யவேண்டிய வேலையை மற்றொருவர் செய்துவிட்டார் என்பதைத் தவிர அதில் வேறொரு இழப்பு இல்லை .யார்வேண்டுமானாலும் செய்யக்கூடிய மக்களுக்கான சேவை யைத் தானே செய்யவேண்டும் என்றும் மற்றவர் யாரும் தலையிடக்கூடாது என்றும் உறுதியாக இருக்கும்போது நோக்கத்தில் உள்நோக்கம் இருப்பதையே புலப்படுத்துகின்றது .சேவை என்ற பெயரில் சம்பாத்தியம் செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால்தான் அரசியல்வாதிகள் இப்படி இழிவாக நடந்துகொள்கின்றார்கள். பதவியில் இருப்பவர்கள் மறைமுக நடவடிக்கைகள் மூலம் அதிகம் சம்பாதிக்கின்றார்கள்.பதவியால் கிடைத்த அதிகாரம் ,விளம்பரத்தால் கிடைத்த மக்கள் செல்வாக்கு இவற்றால் சட்டத்தின் பிடி யிலிருந்து தப்பித்துக்கொள்கின்றார்கள் . உழைப்பின்றி சம்பாதித்து உல்லாசமாய் வாழ முடியும் என்ற வாய்ப்பு இருப்பதால் பதவியை விட்டுவிட மனம் ஒப்பமாட்டார்கள் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். தேர்தலில் வெற்றி பெற தொண்டர் களின் உதவி தேவையாக இருப்பதால் , அவர்களுக்கும் சம்பாதிக்க வழி வகை செய்து கொடுக்கின்றார்கள். அதனால் அவர்களும் அடிமை போல வேலை செய்கின்றார்கள். அரசியல் என்பது நம் கண்முன்னே தீயவர்களின் கூடாரமாக மாறிவருவது சொல்லொண்ணா அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
No comments:
Post a Comment